கன்மலை கிறிஸ்துவ சபை செப்டம்பர் மாத வாக்குத்தத்தம்
Word of God : Brother Micheal
Date : 01.09.2021
சங்கீதம் 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
நம் தேவனாகிய கர்த்தர் இந்த மாதம் உங்களை உயர்த்த அடைக்கலத்திலே வைக்கப்போகிறார். அவர் எப்படியெல்லாம் இந்த மாதம் உங்களை வைத்து பராமரிக்கப்போகிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே காணலாம்.
1. உன்னை கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைப்பார்
செப்பனியா 3:19
இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்.
செப்பனியா 3:20
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உங்களை சிறுமைப்படுத்தினவர்களை கர்த்தர் தண்டித்து, நீங்கள் வெட்கப்பட்ட இடத்திலே கர்த்தர் உங்களுக்கு கீர்த்தியும், புகழ்ச்சியும் உண்டாக செய்வார். மேலும் அவர் உங்களை கூட்டி கொண்டு சேர்த்துக்கொள்வார். என்னென்ன சிறையிருப்புகள் உங்களுக்கு இருந்தாலும் சரி கர்த்தர் அதனை திருப்பி உங்கள் கண் காண சகல ஜனங்களுக்குள்ளும் உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக வைப்பார்.
2. உன்னை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார்
மத்தேயு 25: 15 - 24
மத்தேயு 25:23
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் தாலந்துகளை கொடுத்து இருக்கிறார். அதை நாம் உபயோகிக்க வேண்டும். அதை ஒருக்காலும் அசட்டைபண்ணகூடாது. இந்த மாதம் கர்த்தர் உங்களுக்கு அளித்த தாலந்துகளை நீங்கள் பயன்படுத்தும் பொழுது அவை பெருகி பலன் தருவதை காண்பீர்கள். கொஞ்சத்தில் உண்மையும் உத்தமும்மாய் இருக்கிற உங்களை இந்த செப்டம்பர் மாதம் கர்த்தர் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார்.
3. உன்னை தலைமுறை தலைமுறையாக மகிழ்ச்சியாக வைப்பார்
ஏசாயா 60:14
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
ஏசாயா 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
இந்த மாதம் உங்களுக்குள்ளே, உங்களை குடும்பத்திற்குள்ளே, உங்களை மகிழ்ச்சியாக வைக்கப்போகிறார். அந்த மகிழ்ச்சியானது உங்களுக்கு நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாகவும் இருக்கும். உங்களை ஒடுக்கினவர்களின் பிள்ளைகள், இத்தனை நாளாய் உங்களை அசட்டை பண்ண யாவரும் உங்கள் முன் பணிந்து குனிந்து வருவார்கள்.
4. உன்னை ஜாதிகளுக்கு ஒளியாக வைப்பார்
ஏசாயா 49:4
அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.
ஏசாயா 49:5
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.
ஏசாயா 49:6
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.
விருதாவாய் உழைக்கிறேன், என் பெலன் செலவழிந்து போகிறது. அநேக காரியங்களை செய்கிறேன் ஆகிலும் பல சூழ்நிலைகளில் நெருக்குகிறார்களே என்று கலங்க வேண்டாம். உங்கள் நியாயம் கர்த்தரிடத்திலும், உங்கள் பெலன் நம் தேவனிடத்திலும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். கர்த்தர் உங்களை ஒருபோதும் விருதாவாய் விடமாட்டார். நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும் நம் தேவன் அறிந்து வைத்து இருக்கிறார். கர்த்தருடைய இரட்சிப்பாய் நீங்கள் இருக்கும் படி ஜாதிகளுக்கு ஒளியாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5. உன்னை முத்திரை மோதிரமாக வைப்பார்
ஆகாய் 2:21
நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,
ஆகாய் 2:22
ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
ஆகாய் 2:23
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு உங்களை முத்திரை மோதிரமாக கர்த்தர் வைக்கப்போகிறார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment