Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 16.09.2021
யாத்திராகமம் 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
யாருக்கு ? அவர் எப்படி இருக்கிறார் ?
1. அவர் உன் ஆத்துமாவை ஆதரித்து சகாயம் பண்ணுவார்
சங்கீதம் 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள்.
சங்கீதம் 54:4
இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
II சாமுவேல் 22:18
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
II சாமுவேல் 22:19
என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
உன் ஆத்துமாவிற்கு அவரே ஆதரவு. உன் ஆத்துமாவை அழிக்கவும், கொல்லவும், பிரேத குழியிலே தள்ளவும் சத்துருவானவன் நினைத்தாலும் உன் ஆத்துமாவிற்கு அவரே ஆதரவாய் இருக்கிறார். இருக்கிறாராகவே இருக்கிறேன் என்று சொன்னவர் சொல்லுகிறார் உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆதரவாய் இருக்கிறார். எல்லா சூழ்நிலையிலும் உனக்கு சகாயம் செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார்.
2. அவர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கச்செய்து காரிய சித்தி உள்ளவராய் உன்னை மாற்றுவார்
ஆதியாகமம் 21:22
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ஆதியாகமம் 21:23
ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
ஆதியாகமம் 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு;
ஆதியாகமம் 39:4
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
காலம் வரும், நேரம் வரும் அந்த நாட்களில் கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று ஆபிரகாம் அமலேக்கியனை பார்த்து சொன்னது போல உங்களை பார்த்து சொல்லுகிற நாட்கள் வரும். அந்த நாட்கள் விரைந்து வரும். நீங்கள் செய்கிற காரியங்களில் எல்லாம் தேவன் உங்களோடு இருக்கிறார். கர்த்தர் யோசேப்போடே இருந்தததையும் அவன் செய்கிற காரியங்கள் எல்லாம் வாய்க்கின்றது என்று அவன் எஜமான் கண்டு அவன் மேல் தயவு வைத்து அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தான் அதுபோல உங்களுடனும் தேவன் இருந்து, உங்கள் மேல் தயவு வைத்து நீங்கள் கையிட்டு செய்கிற எல்லா காரியங்களையும் வாய்க்கப்பண்ணுவார்.
3. அவர் உன் பட்சமாய் இருந்து உனக்கு உதவி செய்வார்
சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
சங்கீதம் 118:6
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 118:7
எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
சங்கீதம் 118:8
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங்கீதம் 118:9
பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங்கீதம் 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
சங்கீதம் 118:11
என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
சங்கீதம் 118:12
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
எப்படிப்பட்ட நெருக்கங்கள் உங்களுக்கு வந்தாலும் சரி, இங்கே தாவீது என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்று சொல்லுகிறார். நெருக்கப்பட்ட உங்கள் சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று சொன்னால் அவர் உங்கள் பட்சமாய் இருந்து உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் சத்துருக்களின் சரிக்கட்டுதலை நீக்கினால் காண்பீர்கள். கர்த்தருடைய நாமத்தினால் அவர்களை சங்கரிப்பீர்கள். மனுஷரை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் நம்பிக்கை வைப்பது நமக்கு நலம் அவர் நம் பட்சத்தில் இருந்து நமக்கு உதவி செய்வார்.
4. அவர் பயங்கர பராக்கிரமசாலியாய் உன்னோடு இருந்து பொல்லாதவர் கைகளுக்கு தப்புவிப்பார்
எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
எரேமியா 20:12
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
எரேமியா 20:13
கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
கர்த்தர் பயங்கர பராக்கிரமசாலியாய் உங்களோடு கூட இருக்கிறார். உங்களை துன்பப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தார் உங்களை மேற்கொள்ள முடியாமல் இடறிப்போவார்கள். தங்கள் காரியம் உங்களிடத்தில் வாய்க்க வில்லை என மிகுந்த வெட்கம் அடைவார்கள். உங்கள் காரியத்தை கர்த்தரிடத்தில் சாட்டிவிடுங்கள். அவர் உங்களை பொல்லாதவர் கைகளுக்கு நீங்கலாக்கி தப்புவிப்பார்.
5. அவர் உன்னோடு வலதுபாரிசத்தில் இருந்து உன்னை அசையாமல் காப்பார்
சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
கர்த்தரை எப்பொழுது உங்களுக்கு முன்பாக எல்லா காரியத்திலும் வைத்து இருங்கள். அப்பொழுது அவர் உங்கள் வலதுபாரிசத்தில் உங்களோடு கூட இருப்பார். அவர் உங்களோடு கூட இருப்பதால் நீங்கள் என்றுமே அசைக்கப்படுவதில்லை. உங்கள் இருந்து இருதயம், உங்கள் மகைமை களிகூர்ந்து, உங்கள் மாமிசம் எப்பொழுது கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருக்கும்.
For Contact:Kanmalai Christian ChurchBother MichealMobile: +91 9962 110 261
No comments:
Post a Comment