Monday, August 30, 2021

நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother D. Kamal

Date : 26.08.2021


I இராஜாக்கள்1:12

இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.

சங்கீதம் 16:7

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

அதோனியா தன்னைத்தானே உயர்த்தி நான் ராஜா ஆவேன் என்று சொல்லி தாவீது சீக்கிரம் மறித்து விடுவார் என அறிந்து உடனே அவருக்கு தான் இஸ்ரவேலுக்கு ராஜாவாக அரியணை எற எண்ணி தனக்கு ஒரு கூட்டத்தை கூட்டி அதற்கான முயற்சிகளை செய்கிறார். இதனை அதோனியா யாரையும் அழைக்காமல் இந்த முயற்சியில் ஈடுபட்டார். இதனை அறிந்த நாத்தான் தீர்க்கதரிசி பத்சேபாளிடம் வந்து அதோனியா ராஜாவாகிற செய்தி நீ அறியவில்லையா என்று கேட்கிறார். மேலும் நீ வா நான் உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று கூறி நீ தாவீதினிடத்தில் போய் உமக்கு பின் சாலமோன் அரசால வேண்டும் என்று நீர் ஆணையிட்டு கூறவில்லையா இப்பொது அதோனியா ராஜாவாக ஆகிறது என்ன என்று கேள் நீ இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது நானும் வந்து உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்று சொன்னார்.  

இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு ஏற்படுகிற கடினமான சூழ்நிலைகளின் நிமித்தமாக நாம் சோர்ந்து பொய் விடுவது உண்டு. மனுஷரின் ஆலோசனைகளை நம்பி நாம் சில சமயங்களில் காரியம் கைகூடி வர முடியாத நிலை ஏற்படுகிறது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் தேவனிடத்தில் தான் ஆலோசனை கேட்க வேண்டும். நம்முடைய தேவனின் நாமத்தில் ஒன்று ஆலோசனை  கர்த்தர் என்பதாகும். நீங்கள் அவர் சமூகம் வந்து உங்களை தாழ்த்தி அவரிடத்தில் ஆலோசனை கேட்பீர்கள் என்று சொன்னால் உங்கள் காரியங்களை ஜெயமாய் முடிக்க தேவன் வல்லவராய் இருக்கிறார். இங்கேயும் வேதாகமத்தில் மூன்று பேர் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து ஜெயம் கொள்கிறார்கள். அதனை நாம் இங்கே காணலாம். 

1. கருத்துடைய ஆலோசனையை நாடும் பொழுது தடைகள் விலகும் 

யோசுவா 5: 13 - 15

யோசுவா 6: 1 - 5

யோசுவா 6: 20

எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

இஸ்ரவேல் ஜனங்களுக்கு கானான் தேசத்தை நோக்கி செல்லும் வழியில் அவர்களுக்கு தடையாக இருந்த ஒன்று எரிகோ பட்டணம். யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது கர்த்தருடைய சேனையின் அதிபதி உருவின பட்டயத்தோடு நின்று கொண்டு இருந்தார். அவர் யோசுவாவுக்கு ஆலோசனை கொடுக்கிறார். இஸ்ரவேல் புத்திரர் எரிகோவை சுற்றிலும் ஆறு நாட்கள் நடக்க வேண்டும். ஏழாம் நாளிலோ அவர்கள் எரிகோவை சுற்றிலும் ஏழு முறை சுற்றி வர வேண்டும். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊத வேண்டும். நெடுந்தொனி எக்காள சத்தத்தை கேட்கும் பொழுது ஜனங்கள் மகா ஆரவாரத்துடனே ஆர்பரிக்கவேண்டும். அப்பொழுது எரிகோவின் அலங்கம் இடிந்து விழும் என்று ஆலோசனை கொடுக்கிறார். யோசுவாவும் கர்த்தர் சொன்ன படியே செய்கிறார்.

கர்த்தர் ஏழாம் நாளிலே இஸ்ரவேல் புத்திரருக்கு ஜெயத்தை கொடுக்கிறார். அவர்களை எரிகோவிற்குள் பிரவேசிக்க செய்தார். அதே போல் தான் நம்முடைய வாழ்க்கையில் கூட நமக்கு எதிராக எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் சரி அந்த தடைகளுக்கு முன்பதாக சேனைகளின் அதிபதியாகிய கர்த்தர் நின்று கொண்டு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். தடைகளை நீக்கி போடுகிறவர் உங்களுக்கு முன்பதாக செல்கிறார். அவர் உங்களுக்கு முன்னே போய் கோணலானவைகளை எல்லாம் செவ்வையாக்குவார். சோர்ந்து போக வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே கர்த்தருடைய ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்தால் நம் காரியங்களில் ஜெயத்தை கொடுக்க தேவன் வல்லவராய் இருக்கிறார். 

2. கர்த்தருடைய ஆலோசனையை நாடும்பொழுது சகலத்தையும் திருப்பி கொள்வீர்கள் 

I சாமுவேல் 30: 1 - 19

I சாமுவேல் 30:8

தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

தாவீதும் அவருடைய மனுஷரும் சிக்கலாக்குக்கு வரும் பொழுது அந்த பட்டணமே சின்னாபின்னாமாய் இருக்கிறது. அமலேக்கியர் அதை கொள்ளையடித்து அக்கினியால் சுட்டெரித்து போடுகிறார்கள். அவர்கள் அங்கு இருந்த சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரையும் சிறைபிடித்து கொண்டு போய் விட்டார்கள். அந்த சமயத்தில் தாவீது மிகவும் நெருக்கப்பட்டார். சகல ஜனங்கள் தங்கள்  குமாரத்திகள் நிமித்தம் மனக்கிலேசம் ஆனதால் தாவீதை கல்லெறிய வேண்டும் என்று எண்ணினார்கள் ஆனால் தாவீதோ தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்தி கொண்டான். கர்த்தரிடத்தில் விசாரிக்கிறார். கர்த்தர் நீ அந்த தண்டை பின் தொடர் சகலத்தையும் திருப்பி கொள்வாய் என்றார். அதன்படியே தாவீதும் அவருடைய மனுஷரும் அமலேக்கியரை முறியடித்து அவர்களுடைய பொக்கிஷங்களை கொள்ளையிடுகிறார்கள் மேலும் அவர்கள் சிறை பிடித்து கொண்டு போன யாவரையும் மீட்டுக்கொள்கிறார்கள்.

நாமும் நம்முடைய நெருக்கமான சூழ்நிலைகளில் துவண்டு போகாமல் தாவீதை போல கர்த்தருக்குள் உங்களை திடப்படுத்தி கொண்டு அவருடைய சமூகத்தை நாடி அவரிடத்தில் ஆலோசனை கேளுங்கள். கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு ஜெயத்தை கொடுப்பார். நீங்கள் இதுவரையிலும் இழந்த எல்லாவற்றையும் பெற்று கொள்ளும் படியாக அனுக்கிரகம் செய்வார்.  

3. கர்த்தருடைய ஆலோசனையை நாடும்பொழுது ஒடுக்கினவர்களிடம் இருந்து உங்களை இரட்சிப்பார்

நியாயாதிபதிகள் 6: 1 - 10

நியாயாதிபதிகள் 7: 1 - 22

நியாயாதிபதிகள் 7:22

முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்கிறார்கள். அவருடைய ஆலோசனையை அசட்டை பண்ணினார்கள். அதனால் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை ஏழு வருஷம் மீதியானியரிடம் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். அவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் தேவனை நோக்கி முறையிடும் பொழுது கர்த்தர் அவர்களின் கூக்குரலை கேட்டு மீதியானியரிடம் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்க கிதியோனை தெரிந்து கொள்கிறார். 

கிதியோன் மீதியானியரின் சேனைகளை முறியடிக்கிறார். கிதியோனுடைய சேனை எப்படி இருக்க வேண்டும் என்றும், அதில் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்றும் கர்த்தர் கிதியோனுக்கு ஆலோசனை கொடுக்கிறார். வெறும் முன்னூறு பேர்களை கொண்டு கர்த்தர் தனக்கு கட்டளையிட்ட படியே கிதியோன் மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் பண்ண புறப்படுகிறார். அவர்களோடு யுத்தம் பண்ணாமல் அவர்கள் பயப்படச்செய்து வெற்றி கொள்கிறார். கர்த்தர் மீதியானியரின் பாளையம் எங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாக ஒங்கப்பண்ணுகிறார். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்யும் பொழுது சத்துருக்கள் நம்மை ஒடுக்குவதற்கு அவை வழி வகுக்கிறது. நாம் மிகவும் சிறுமைப்படுத்தப்படுகிறோம். எந்த ஒரு ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. நாம் மனம் திரும்பி கர்த்தருடைய பாதத்தில் வீழ்ந்து அவருடைய ஆலோசனையை பின்பற்றி அதன்படி நடந்தால் கர்த்தர் நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்த விடவே மாட்டார். உங்கள் ஆசீர்வாதத்தை சத்ருக்கள் கொள்ளையடிக்க விடமாட்டார். உங்களை ஒடுக்க ஒப்புக்கொடுக்கமாட்டார். நாம் தேவனின் கட்டளையை கைக்கொண்டு நடந்தால் அவர் எல்லா தீங்குக்கும் விளக்கி நம்மை இரட்சிப்பார். அதுமட்டும் இல்லாமல் உங்கள் மூலமாக அநேகர் இரட்சிப்படைய கிதியோனை போல தேவன் உங்களை பயன்படுத்துவார்.   


For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment