Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 08.08.2021
அப்போஸ்தலர் 27:34
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
அப்போஸ்தலர் 27:35
இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.
லூக்கா 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
மல்கியா 1:7
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
யோவான் 6:53
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 6:55
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
பவுல் இப்படியாய் சொல்லுகிறார் இதை போஜனம் பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன் அது உங்களை தப்பி பிழைக்க அது உதவியாய் இருக்கும். இந்த உலகத்திலே நமக்கு அநேக பாடுகள் உண்டு. இவை எல்லாவற்றில் இருந்தாலும் நாம் தப்பி பிழைக்க தேவனுடைய திருப்பந்தியில் தவறாமல் பங்கு எடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்து நான் பாடுபடுகிறதற்கு முன்பு இந்த பஸ்காவை புசிக்க ஆசையாய் இருந்தேன் என்று சொல்லுகிறார். நாம் மனுஷகுமாரருடைய மாம்சத்தை புசியாமலும், அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் நமக்குள் ஜீவன் இல்லை என்று இயேசு சொல்கிறார். அவருடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பாணம் பனுக்குகிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும் அவர்களை கடைசி நாளில் எழுப்புவேன் என்றும் தேவன் சொல்லுகிறார்.
1. அம்புக்கு தப்புவிப்பார் - உன் அபிஷேகம் உன்னோடு கூட இருக்கிறபடியால்
I சாமுவேல் 18:11
அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.
I சாமுவேல் 18:12
கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,
I சாமுவேல் 18:13
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
சவுல் தாவீதை உருவகுத்திப்போடுவேன் என்று ஈட்டியை எறிந்த பொழுது இரண்டு தரம் தாவீது விலகி சவுலின் அம்புக்கு தப்பினார். கர்த்தர் தாவீது உடனே கூட இருக்கிறார் என்பதை சவுல் கண்டு பயந்து அவரை ஆயிரம் பேருக்கு அதிபதியாக்கினார் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். நமக்கும் அநேகக சத்துருக்கள் உண்டு அவர்கள் எரியும் அம்புக்கு நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்று சொன்னால் கர்த்தருடைய பந்தியில் போஜனம் செய்யுங்கள். அது பொல்லாத ஆவியின் அம்புக்கு விலக்கி உங்களை தப்புவிக்க செய்யும். அபிஷேகம் பண்ணப்பட்ட நமக்கு எத்தனை அம்புகள் எரிந்தாலும் அது வாய்க்காது. நீங்கள் தப்புவிக்கப்படுவீர்கள்.
2. இச்சையான கேட்டுக்கு தப்புவிப்பார் - உன்னிடம் பரிசுத்த ஆவியின் வல்லமை இருக்கிறபடியால்
II பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
இந்த இச்சையானாது நாம் நித்திய ஜீவனை அடையக்கூடாத படிக்கு நம்முடைய மாம்சத்திலே செயல்படுகிறது. இந்த இச்சையை பிசாசானவன் எல்லாருக்கும் வருவிப்பான். இதை பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் மேற்கொள்ள முடியும். இந்த உலகத்தின் கேட்டுக்கு தப்பி திவ்விய சுபாவத்திற்கு நாம் பங்குள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. அசுத்த ஆவிகளுக்கு தப்புவிப்பார் - உன்னிடம் பரிசுத்த வாஞ்சை இருக்கிறபடியால்
II பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
மூன்றாவது இந்த உலகத்தின் அசுத்தங்களுக்கு நாம் தப்புவிக்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவை அறிந்து இந்த உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பியவர்கள் மீண்டும் தான் விட்டு வந்ததை தொடர்ந்தால் அது அவர்களுடைய முன் இருந்த நிலைமையை காட்டிலும் பின்னிலைமையானது அதிக கேடு உள்ளதாய் இருக்கும். இந்த அசுத்த ஆவியின் ஆதிக்கத்துக்கு தப்பி பிழைக்க வேண்டும் என்று சொன்னால் பரிசுத்த ஆவியின் துணையோடு பரிசுத்தமாக வாழ நாம் முயற்சி எடுக்க வேண்டும். பரிசுத்தமாக வாழ வாஞ்சிக்க வேண்டும்.
4. உலகத்தில் சம்பவிக்கப்போகிறவைகளில் இருந்து தப்புவிப்பார் - நீ எப்பொழுது விழித்திருந்து ஜெபம் செய்கிறபடியால்
லூக்கா 21:31
அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
லூக்கா 21:32
இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21:33
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
லூக்கா 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
லூக்கா 21:35
பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
லூக்கா 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment