Sunday, August 1, 2021

நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஆகஸ்ட் மாத வாக்குத்தத்தம் 2021

Word of God : Brother Micheal

Date: 01.08.2021


மல்கியா 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

நியாயாதிபதிகள் 7:3
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 6:14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நாம் கொழுத்த கன்றுகளாய் வளரும் படியாய் தேவன் இந்த ஆகஸ்ட் மாதம் நம்மை  வெளியே புறப்படச்செய்வார். எல்லாவற்றிலும் நீங்கள் கொழுத்த கன்றுகளாய் வளருவார்கள். 


நாம் எதிலிருந்து புறப்பட வேண்டும் ?

1. உலகத்தின் வீட்டை விட்டு புறப்படுகிறவர்களை - பெரிய ஜாதியாக்கி, பெயரை பெருமைப்படுத்துவார் 

ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 12:3
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ரோமர் 4:1 - 16

ரோமர் 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.

ஆதியாகமம் 22:15
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

ஆதியாகமம் 22:16
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;

ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

ஆதியாகமம் 22:18/
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

இந்த வசனங்களை நாம் சற்று கூர்ந்து கவனித்தால் மூன்று விதமான காரியங்களை விட்டு நாம் புறப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். முதலாவது உன் தேசம், உன் இனம், மற்றும் உன் ஜென்ம தகப்பன் வீட்டை விட்டு நாம் புறப்படவேண்டும். இந்த மூன்றையும் விட்டு புறப்பட்டு வந்தவர்களை தேவன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கிறார். அவர் உங்களை பெரிய ஜாதியாக்கி ஆசீர்வதித்து உங்கள் பெயரை பெருமைப்படுத்துவார். உங்களை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பார். உன்னை சபிக்கிறவர்களை தேவன் சபிப்பார். பூமியில் உள்ளதான வம்சங்கள் எல்லாம் உங்களுக்குள் ஆசீர்வதிக்கப்படும். ஆபிரகாமுக்கு இருந்த அந்த விசுவாசம் உங்களுக்குள் இருந்தால் தேவன் இவ்விதமாக உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமே. 

2. தகப்பனுடைய வீட்டுக்கு புறப்படுகிறவர்களை - சேர்த்து கொண்டு மீண்டுமாய் வளரச்செய்வார் 

லூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

லூக்கா 15:18
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

லூக்கா 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

லூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

லூக்கா 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

அவனுக்கு புத்தி தெளிந்து என்று சொல்லப்பட்டுள்ளது. அதுபோலத்தான் சில நேரங்களில் பிசாசானவன் நம்மை தரிசனத்தின் திசையில் இருந்து வழி விலகி போக செய்வான். ஆனாலும் அவன் மனம் திரும்பி தன் தகப்பன் வீட்டுக்கே திரும்பி எழுந்து புறப்பட்டு பொய், தகப்பனே உம் குமாரன் என்று சொல்லக்கூட நான் பாத்திரவான் அல்ல என்னை கூலிக்காரரில் ஒருவனாக வைத்துக்கொள்ளும், பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் நான் பாவம் செய்தேன் என்று சொன்னான். உடனே தகப்பன் அவனை கட்டி தழுவி முத்தம் செய்து தன் ஊழியக்காரரை நோக்கி உயர்ந்த வஸ்திரத்தை இவனுக்கு கொண்டு வந்து உடுத்தி கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சையையும் போடுங்கள், கொழுத்த கன்றை அடியுங்கள் இதினிமித்தம் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று சொன்னார். அதேபோல நம் பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பி கர்த்தருடைய வீட்டுக்கு வருவோம் என்று சொன்னால் இந்த மூன்றையும் உங்களுக்கு அணிவித்து மீண்டுமாய் வளரச்செய்வார்.  

3. அடிமைத்தனமாகிய எகிப்து வீட்டை விட்டு புறப்படுகிறவர்களை - எல்லாவற்றையும் கொள்ளையிடும்படியாக ஒப்புக்கொடுப்பார் 

யாத்திராகமம் 14:15
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.

யாத்திராகமம் 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.

யாத்திராகமம் 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

யாத்திராகமம் 12:33
எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 12:34
பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

யாத்திராகமம் 12:35
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.

யாத்திராகமம் 12:36
கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.

எகிப்திலே அதன் தலையீற்றை எல்லாம் தேவன் அழித்து கொண்டு இருந்தார். அப்பொழுது எகிப்திலே மகா கூக்குரல் உண்டாயிற்று அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து நாங்கள் சாகிறோமே நீங்கள் புறப்பட்டு போங்கள் என்று சொன்னான். மோசே சொல்லியபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டார்கள் கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி  செய்த படியால் அவர்கள் எகிப்தை கொள்ளையிட்டு புறப்பட்டார்கள். அதேபோல தான் பிசாசானவன் நம்முடைய ஆசீர்வாதங்களை மறைத்து வைத்து கொண்டு இருக்கிறான். இந்த அடிமைத்தனமாகிய இந்த எகிப்து வீட்டை விட்டு நாம் வெளியே புறப்படும்பொழுது எல்லாவற்றையும் கொள்ளையடிக்கத்தக்கதாக கர்த்தர் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார். பூமியும் அதன் குடியிருப்பும் கர்த்தருடையது அதினாலே எல்லாவற்றையும் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னைத்தானே தாழ்த்தி அடிமையின்ரூபம் எடுத்த கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடிப்பீர்கள், சத்துரு ஒரு திருடனை போல வகைத்தேடி உங்கள் உடைமைகளை கொள்ளையிடுகிறான். ஆனாலும் தேவன் சகலத்தையும் நம் பக்கமாக திருப்பிக்கொள்ள கர்த்தர் ஒப்புக்கொடுப்பார். 





For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment