Sunday, July 25, 2021

அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 25.07.2021


ஆதியாகமம் 42:28
தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

1. கர்த்தருடைய சிட்சைக்கு சோர்ந்து போகிறவர்களை - பிறருக்கு பிரயோஜனமாக மாற்றுவார் 

எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

எபிரெயர் 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

எபிரெயர் 12:7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

எபிரெயர் 12:8
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

எபிரெயர் 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

எபிரெயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

நீதிமொழிகள் 3:12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

சில நேரங்களிலே கர்த்தர் நம்மை சிட்சிக்கிறார். நாம் எல்லாரும் அவருடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம். தகப்பன் பிள்ளையை சிட்சியாமல் இருப்பதில்லை. அப்படி நாம் சிட்சிக்கப்படாவிட்டால் வேசியின் பிள்ளைகளாய் இருப்போம் என்று வசனம் சொல்கிறது. அவர் நம் மீது அன்பு கூறுகிறதினாலே நாம் வழி விலகி போகும் நேரங்களில் நம்மை சிட்சிக்கிறார். அவ்வாறு சிட்சிக்கும் பொழுது நாம் சோர்ந்து போக வேண்டாம் என்று வசனம் சொல்லுகிறது. கர்த்தர் தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். கர்த்தர் பிறருக்கு நீங்கள் பிரயோஜனமாய் இருக்கும் பொருட்டு அவர் நம்மை சிட்சிக்கிறார். கர்த்தருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு அந்த அனுபவத்திலே நாம் வளரும் பொழுது தான் பிறருக்கு பிரயோஜனமாக இருக்க முடியும். எனவே கர்த்தருடைய சிட்சையை அற்பமாய் எண்ணாமல் நம்மை நாமே நிதானித்து பார்ப்போம். 

2. வழியிலே சோர்ந்து போகிறவர்களை - ஆகாரத்தினால் திருப்தியாக்குவார் 

மாற்கு 8:1
அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:

மாற்கு 8:2
ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;

மாற்கு 8:3
இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

மாற்கு 8:6
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்

மாற்கு 8:7
சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.

மாற்கு 8:8
அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள்.

இந்த ஜனங்களுக்காக நான் பரிதபிக்கிறேன். இவர்கள் என்னிடத்தில் இருந்த மூன்று நாளும் சாப்பிட ஒன்றும் இல்லையே. இவர்களை நான் இப்படியே வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியிலே சோர்ந்து போய் விடுவார்களே என்று இயேசு சீஷர்களிடத்தில் சொன்னார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் வானாந்திரத்தின் வழியிலே நடத்தி கொண்டு வரும் பொழுது அவர்கள் சோர்ந்து போகாமல் போஷித்தார். அதுபோல தான் பரலோக ராஜ்ஜியமும் நம் ஜீவியத்தின் பாதையிலே நாம் சோர்ந்து போகாத படிக்கு கிறிஸ்து இயேசு நாம் நித்தியம் போய் சேரும் வரையிலும் அவர் நம்மோடு கூட இருப்பார். நாம் சோர்ந்து போகும் தருணங்களில் எல்லாம் அவர் நம்மை ஜீவ வார்த்தையாகிய ஆகாரத்தை கொடுத்து நம்மை திருப்த்தி அடையச்செய்வார். 

3. அலைக்கழிக்கிற ஆவியினால் சோர்ந்து போகிறவர்களை - விடுதலையாக்குவார் 

மாற்கு 9:17
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

மாற்கு 9:18
அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

மாற்கு 9:19
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

மாற்கு 9:20
அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

மாற்கு 9:21
அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;

மாற்கு 9:22
இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

மாற்கு 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

மாற்கு 9:24
உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்,

மாற்கு 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

இயேசுவிடத்தில் ஆவி பிடித்த தன் கொண்டு வந்தார். அது அவனை பிடிக்கும் பொழுதெல்லாம் அவனை அலைக்கழிக்கிறது அப்பொழுது எல்லாம் அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான் என்று சொன்னார். இயேசு அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் இயேசுவை கண்டவுடனே அந்த ஆவி அவனை மிகவுமாய் அலைக்கழித்தது அவன் நுரைதள்ளி தரையிலே புரண்டான். இயேசு இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலம் ஆகிற்று என்று அவன் தந்தையிடம் கேட்டார் அதற்கு அவர் இவன் சிறு வயது முதற்கொண்டே இருக்கிறது. இவனை கொள்ளும் படிக்கு அநேகம் தரம் தீயிலேயும், தண்ணீரிலும் தள்ளி விட்டது எங்கள் மேல் மனதுருகி உதவி செய்ய வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொண்டார். இயேசு அந்த அலைக்கழிக்கும் ஊமையும், செவிடும் ஆகிய அந்த ஆவியிடம் இருந்து அவனுக்கு விடுதலை கொடுத்தார். அது போல தான் நம்மையும் இந்த அலைக்கழிக்கும் ஆவி சில நேரங்களில் நம்மை நாமே மாய்த்து கொள்ளும்படி நம் சிந்தையை அலைக்கழிக்கும், இருதயத்தை அலைக்கழிக்கும், ஆனால் இன்றைக்கு கர்த்தர் சொல்லுகிறார் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் உங்கள் குடும்பத்தையும் அலைக்கழிக்கிறதான எல்லா அசுத்த ஆவிகளையும் கர்த்தர் துரத்துகிறார். அது இனி உங்களுக்குள் பிரவேசிக்காதபடிக்குகர்த்தர் அதை அதட்டுவார். உங்களை அலைக்கழிக்கிற அந்த பொல்லாத அசுத்த அவைகளிடம் இருந்து கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு விடுதலையை தருவார். 

4. வாழ்வை நினைத்து சோர்ந்து போகிறவர்களுக்கு -  தேவனின் இரட்சிப்பை காண்பிக்கப்பண்ணுகிறார் 

யோனா 7:5
பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான்.

யோனா 7:6
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

யோனா 7:7
மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று.

யோனா 7:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

யோனா 7:9
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

யோனா 7:10
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

யோனா 7:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

யோனா நினிவே நகரத்துக்கு கிழக்கே போய் ஒரு குடிசையை போட்டு அந்த நகரத்துக்கு சம்பவிக்க போகிறதை  பார்க்கும் வண்ணம் அந்த குடிசையின் நிழலிலே உட்கார்ந்தார். அப்பொழுது யோனாவின் தலையின் மேல் நிழல் உண்டாகி இருக்கும் படியாக கர்த்தர் ஒரு ஆமணக்கு செடியை ஓங்கி வளரும் படி செய்தார். அந்த ஆமணக்கு செடியின் நிமித்தமாக யோனா மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் மறுநாளில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் ஒரு பூச்சியை கட்டளையிட்டார், அது அந்த ஆமணக்கு செடியை முற்றிலுமாக அரித்துப்போட்டது. சூரியன் உதிக்கும் பொழுது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றை கட்டளையிட்டார். அது யோனாவின் தலையின் பட்டதினால் அவன் மிகவும் சோர்ந்து பொய் நான் உயிரோடு இருக்கிறதை பார்க்கிலும் சாகிறது நலமாக இருக்கும் என்றும் கூறினான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி இந்த ஆமணக்கின் நிமித்தம் நீ எரிச்சலாய் இருக்கிறது நல்லதோ என்று கேட்டார்.  பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் நீ இப்படி பரிதபிக்கும்பொழுது வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். தன் வாழ்க்கையை நினைத்து சோர்ந்து போன யோனாவை தேவன் அதே நினிவே நகரம் இரட்சிக்கும்படும்படியாக பயன்படச்செய்தார். அதுபோல உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எந்த இடத்தில் சோர்ந்து போய் இருந்தீர்களோ அதே இடத்திலே உங்களை கொண்டு இரட்சிப்பை உண்டுபண்ணும் படியாக அவர் உங்களை பயன்படுத்துவார். 

5. அவர் கரத்தின் அடிகளால் சோர்ந்து போகிறவர்கள்  - அவர் கரத்தில் விழும்பொழுது வாதையை நீக்கிப்போடுவார்

சங்கீதம் 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.

II சாமுவேல் 24:11
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

II சாமுவேல் 24:12
நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

II சாமுவேல் 24:13
அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

II சாமுவேல் 24:14
அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

II சாமுவேல் 24:15
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

II சாமுவேல் 24:16
தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

II சாமுவேல் 24:17
ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

II சாமுவேல் 24:24
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.

காத் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி நீ தாவீதினிடத்தில் போய் உனக்கு முன்பாக மூன்று காரியங்களை வைக்கிறேன் அதில் ஒன்றை நீ தெரிந்து கொள் அதை உனக்கு செய்வேன் என்கிறார் முதலாவது தேசத்தில் ஏழு வருட பஞ்சம் வேண்டுமா அல்லது மூன்று மாத காலம் உன் சத்துருக்கள் உன்னை பின் தொடர நீ அவர்களுக்கு முன்பாக ஓடிப்போக வேண்டுமா அல்லது மூன்று நாள் தேசத்தில் கொள்ளை நோய் அனுப்ப வேண்டுமா நீர் சொல்லும் நான் அதை நான் என்னை அனுப்பினவருக்கு மறு உத்தரவு சொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு தாவீது நான் பெரிய இக்கட்டில் இருக்கிறேன். இப்பொழுது நாம் கர்த்தருடைய கையில் விழுவோமாக என்று சொன்னார். கர்த்தர் இஸ்ரவேலில் காலமேதொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். தேவதூதன் எருசலேமை அழிக்க தன் கையை நீட்டியபொழுது கர்த்தர் அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு போதும் நிறுத்து என்று கூறினார்.

இங்கே தாவீது இடுக்கண் நேர்ந்த சமயத்தில் முழுவதுமாக கர்த்தர் கரத்தில் விழுவோம் என்று சொல்லி ஒப்புக்கொடுத்தார். மேலும் தேவனிடத்தில் நான் தான் பாவம் செய்தேன், நான் தான் அக்கிரமம் செய்தேன் என்று இந்த ஆடுகள் என்ன செய்தது  உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம் செய்தார். அதேபோல நாம் தவறு செய்யும் பொழுது தேவனிடத்தில் அதை அறிக்கையிட்டு அவருடைய கையில் நாம் விழுவோம் என்று சொன்னால் தேவன் சிறிய அடியோடு உங்களை தப்பப்பண்ணுவார். நம்மை விலையேற்றப்பெற்ற தன் இரத்தத்தை கொடுத்து  விலைக்கிரயமாய் கர்த்தர் வாங்கி இருக்கிறார். நமக்காக நம்மை மீட்கும்படியாக  அவர் பழுதற்ற பலியாய் இயேசு செலுத்தி இருக்கிறார். எந்த வாதையும் உங்களை அணுகாதபடிக்கு இயேசுவின் இரத்தம் நம்மை பாதுகாக்கிறது. அவர் நமக்காக விலைக்கிரயத்தை சிலுவையிலே செலுத்தி நம்மை மீது கொண்டார். 


For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment