Sunday, July 4, 2021

கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 04:07:2021


I இராஜாக்கள் 18:37

கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.

I இராஜாக்கள் 18:38
அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

கர்த்தரிடத்தில் இருந்து இறங்கிய அக்கினி நமக்கு என்ன செய்யும் ?

1. அக்கினி தழல் - உன் பாவங்களை நிவர்த்தியாக்கும் 

ஏசாயா 6:1
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

ஏசாயா 6:2
சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;

ஏசாயா 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

ஏசாயா 6:4
கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

ஏசாயா 6:6
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,

ஏசாயா 6:7
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

ஏசாயா இவ்வாறாக சொல்லுகிறார் நானோ அசுத்த உதடுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் மத்தியில் நான் வாசமாய் இருக்கிறேன். இப்படியாக இருக்கிற என்னை  சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்று சொல்லுகிறார். சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து பலிபீடத்தில் இருந்து நெருப்பு தழல் உடைய ஒரு குறட்டை  கையில் எடுத்துபடியாக பறந்து வந்து ஏசாயா நாவை தொட்டு இது உன் உதடுகளை தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி உன் பாவங்கள் எல்லாம் நிவர்தியானது என்று சொன்னார். அதே போல உங்கள் பாவங்கள் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் சரி பலிபீடத்தில் இருந்து வருகிற அக்கினி தழல் உங்கள் உதடுகளை தொட்டு உங்கள் பாவங்கள் எல்லாம் நிவர்த்தியாகும் படியாய் கர்த்தர் செய்வார். உங்கள் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் நீக்கப்போகிறார். 

2. அக்கினிமயமான நாவு - உன்னை பரிசுத்த ஆவியின் வரங்களினால் நிரப்பும்  

அப்போஸ்தலர் 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அப்போஸ்தலர் 2:3
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அப்போஸ்தலர் 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

அப்போஸ்தலர் 2:5
வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 2:6
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:7
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

அப்போஸ்தலர் 2:8
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது  அவர்கள் ஒருமனப்பட்டு  ஓரிடத்தில் கூடியிருக்கும் பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினி மயமான நாவுகள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு அவர் அவர்களுக்கு தந்து அருளினை வரங்களின் படியே பற்பல பாஷைகளை பேசினார்கள் என்று நாம் இங்கே காண்கிறோம். அப்பொழுது திரளான ஜனங்கள் கூடி வந்து தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுவதை கண்டு பிரமித்து ஆச்சரியப்பட்டு கலக்கம் அடைந்தார்கள் இவர்கள் எல்லாரும் கலிலியர்கள் அல்லவா அப்படியிருக்க இவர்கள் நம்முடைய ஜென்ம பாஷையிலே பேசுகிறார்களே என்று ஒருவரை ஒருவர் பார்த்து பேசி கொண்டனர். இன்றைக்கு தேவன் உங்களையும் பரிசுத்த ஆவியினாலே நிரப்ப சித்தம் கொண்டு உள்ளார். அக்கினி மயமான நாவு உங்கள் மேல் வந்து அமரும். பரிசுத்த ஆவியின் வரங்களினால் நிரப்பப்படுவீர்கள்.

3. அக்கினி மதில் - உன்னையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் பாதுகாக்கும் 

சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோபு 1:9
அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

யோபு 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

யோபு 1:11
ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

யோபு 1:12
கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

மகிமை என்று சொன்னாலே அது ஆலயத்தை குறிக்கிறது. நீங்களே அவருடைய ஆலயமாக இருக்கிறீர்கள், இதை சுற்றிலும் தேவன் அக்கினி மதிலாய் இருக்கிறார். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் நம்மை சுற்றிலும் வேலியாய் இருக்கிறது. தேவன் நமக்கு அக்கினி மதிலாய் இருப்பதால் தான் நாம் சாத்தானின் கண்ணிகளில் இருந்து சேதமில்லாமல் பாதுகாக்கப்படுகிறோம்.  தேவன் யோபுவையும் அவருக்கு உண்டான எல்லாவற்றையும் சாத்தான் நெருங்காத படிக்கு வேலியடைத்து பாதுகாத்து இருந்தார் அது போல இன்றைக்கு உங்களுக்கும் கர்த்தர் அக்கினி மதிலாய் இருப்பார், உங்களுக்கு உண்டான எல்லா உடைமைகளையும் தேவன் வேலியடைத்து பாதுகாப்பார். எல்லா தீங்கிற்கும் விலக்கி உங்களை பாதுகாப்பார்.

4. பலிபீடத்தின் அக்கினி - உனக்கு அதிசயங்களை விளங்கப்பண்ணும் 

நியாயாதிபதிகள் 13:15
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

நியாயாதிபதிகள் 13:16
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

நியாயாதிபதிகள் 13:17
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 13:18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.

நியாயாதிபதிகள் 13:19
மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

நியாயாதிபதிகள் 13:20
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி நாங்கள் வெள்ளாட்டுக்குட்டியை சமைத்து கொண்டு வரும் வரைக்கும் நீர் இங்கே இரும் என்று சொன்னார். அப்பொழுது கர்த்தருடைய தூதரானவர் நீ என்னை இருக்க சொன்னாலும் உன் உணவை நான் புசிக்க மாட்டேன். அதை நீ கர்த்தருக்கே செலுத்து என்று மனோவாவிடம் கூறினார். மேலும் மனோவா நீர் சொன்ன காரியம் நிறைவேறும் பொழுது உம்மை கனம் பண்ண உம்முடைய நாமம் என்ன என்றும் கேட்டார் அப்பொழுது கர்த்தருடைய தூதரானவர் என் நாமம் என்ன வென்று நீ கேட்க வேண்டியது என்ன அது அதிசயம் என்றார். மனோவா வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கன்மலையிலே கர்த்தருக்கு செலுத்தினான். அப்பொழுது பலிபீடத்தில் இருந்து அக்கினி வானத்திற்கு நேராக எழும்புகையில் கர்த்தருடைய தூதரானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார். அதிசயம் விளங்கினது. அதுபோல நீங்களும் எதை செலுத்தினாலும் கர்த்தருக்கே செலுத்துவீர்களாக அப்பொழுது தேவன் அதிலிருந்து எழும்பி அதை அங்கீகரித்து உங்கள் வாழ்க்கையிலே அதிசயத்தை விளங்கப்பண்ணுவார். 

5. அக்கினிஸ்தம்பம் - உன்னை விலகாது வழிநடத்தும் 

சங்கீதம் 78:14
பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

யாத்திராகமம் 13:22
பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

சங்கீதம் 91:3
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரவிலே வெளிச்சம் காட்ட தேவன் அக்கினி ஸ்தம்பமாய் இருந்து அவர்களை வழிநடத்தினார். தேவன் அவர்களை பகலிலே மேகஸ்தம்பமாயும்  இரவிலே பாதை காட்ட அக்கினி ஸ்தம்பமாயும் அவர்களிடம் இருந்து விலகாமல் இருந்து வழிநடத்தினார். அதே போல இந்நாள் வரையிலும் நாம் நிர்மூலம் ஆகமலும் கர்த்தர் வைத்து இருக்க காரணம் என்ன என்றால் நீதியின் சூரியன் உங்களுக்கு முன்பதாக போய்  கொண்டு இருக்கிறது. அவர் உங்களுக்கு முன்பதாக  மேகஸ்தம்பமாயும், அக்கினி ஸ்தம்பமாயும் இருந்து அனுதினமும் வழிநடத்தி கொண்டு இருக்கிறார். அவர் உங்களை விட்டு எப்பொழுதும் விலகாமல் இருந்து முடிவுப்பரியந்தம் உங்களை வழிநடத்துவார். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment