Thursday, July 1, 2021

உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஜூலை மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date:01.07.2021


பிலிப்பியர் 4:19

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

இந்த ஜூலை மாதம் கர்த்தர் தாமே உங்கள் குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். அவர் எப்படிப்பட்ட குறைவுகளை எல்லாம் இந்த மாதம் நீக்கி நிறைவாக்குவார் என்பதை நான்கு விதமான காரியங்களிலே நாம் இங்கே காணலாம். 

1. அப்பம் உனக்கு குறைவுப்படுவதில்லை 

ஏசாயா 51:14

சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.

ஏசாயா 33:16

அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

எப்படிப்பட்ட சிறையிருப்பில் நீங்கள் இருந்தாலும் கர்த்தர் உங்களை அவற்றில் இருந்து விடுதலையாக்கி, அதே கிடங்கிலே உங்களை பிழைத்திருக்க செய்து அப்பம் குறைவுபடாமல் உங்களை ஆசீர்வதிப்பார். நமக்கெல்லாம் கன்மலையும் அரனுமாய் இருக்கிறவர் உங்கள் அப்பம் நிச்சயமாய் கிடைக்கும் படி ஆசீர்வதித்து இந்த மாதம் நிறைவாய் உங்களை நடத்துவார். 

2. நன்மைகள் உனக்கு குறைவுப்படுவதில்லை 

சங்கீதம் 34:10

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

சகரியா 9:12

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

உங்கள் வீட்டிலே இந்த ஏழாம் மாதத்திலே எந்த நம்மையெல்லாம் விட்டு போகத்தக்கதாக கடந்த நாட்களில் இருந்ததோ அந்த எல்லா நன்மைகளையும் குறைவில்லாமல் கிடைக்கும்படியாக இந்த மாதம் கர்த்தர் உங்களுக்கு செய்வார். கர்த்தரை தேடுகிற நமக்கு ஒரு நன்மையையும் குறைவுபடாது. இரட்டிப்பான நன்மைகளை தேவன் உங்களுக்கு இந்த மாதம் குறைவில்லாமல் தருவார்.  

3. தேவனுடைய பராமரிப்பு உனக்கு குறைவுப்படுவதில்லை 

நெகேமியா 9:21

இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.

நெகேமியா 9:22

அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

யோபு 10:12

எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.

இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்திலே நாற்பது வருடங்களாக அவர்களுக்கு ஒரு குறைவு இல்லாமல் பராமரித்த கர்த்தர் உங்களையும் இந்த ஏழாம் மாதத்தில் உங்களை நேர்த்தியாய் பராமரித்து வழிநடத்துவார். குறைபடாத தேவனுடைய பராமரிப்பை உங்கள் கண்கள் இந்த மாதம் காணும். 

4. சமாதானம் உனக்கு குறைவுப்படுவதில்லை 

யோபு 5:24

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.

ஆமோஸ் 9:12

அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

உங்களுடைய கூடாரம் சமாதானத்தோடு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்களுடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும் பொழுது ஒரு குறைவையும் காணமாட்டீர்கள். சமாதானம் நதியைப்போல உங்கள் கூடாரங்களில் பாய்ந்தோட செய்வார். எந்தெந்த எல்லைகளில் எல்லாம் உங்கள் கூடாரம் விழுந்து இருந்ததோ அதை கர்த்தர் தாமே திரும்ப எடுத்து பழுதாய்ப்போனவைகளை எல்லாம் சீர்படுத்தி பூர்வ நாட்களில் இருந்தது போல மீண்டுமாய் உங்களை ஸ்தாபிப்பார். 



For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment