Monday, July 12, 2021

நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 11.07.2021


செப்பனியா 3:20
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், சரியான காலத்திலே கர்த்தரே உங்களை கூட்டிக்கொண்டு வருவார். களஞ்சியங்களிலே சேர்த்து கொள்ளுவது போல, மணவாட்டி சபையிலே சேர்த்துக்கொள்வது போல கர்த்தர் உங்களை சேர்த்து கொள்வார். உங்களை காணும் படியாக அவர் உங்களை சிறையிருப்புகளை திருப்புவார். பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்களை வாழ்க்கையிலே பலத்தரப்பட்ட சிறையிருப்புகள் உங்களுக்கு இருக்கலாம். அவைகள் எல்லாவற்றையும் தேவன் உங்களிடத்தில் இருந்து நீக்க போகிறார். அவர் எப்படி உங்கள் சிறையிருப்பை திருப்புவார் என்பதனை ஒரு நான்கு விதமான காரியங்களில் வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே தியானிக்கலாம். 

1. நகரத்தின் சிறையிருப்பை  திருப்பி கனிகளை புசிக்கச்செய்வார் 

ஆமோஸ் 9:12
அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 9:13
இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 9:14
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

தாவீதின் கூடாரம் என்று சொன்னால் அது மகிமையான கூடாரம். அது அபிஷேகிக்கப்பட்ட கூடாரம். அது கர்த்தருடைய பிரசனத்தினால் நிறைந்த கூடாரம். ஆனாலும் அந்த கூடாரம் ஒரு நாள் விழுந்து போயிற்று அதின் திறப்பை அடைத்து பூர்வ நாட்களில் இருந்தது போல விழுந்து போன கூடாரத்தை மீண்டுமாய் ஸ்தாபிப்பார். கர்த்தர் சொல்லுகிறார் என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பை திருப்புவேன். வருகிற நாட்களிலே உங்களுக்குள்ளே தேவன் ஒரு தோட்டத்தை உண்டாக்க போகிறார். அதின் கனிகளை நீங்கள் புசிக்கும் தேவன் செய்வார். இன்றைக்கு உன் வீடும், உன் குடும்பமும் விழுந்து போய் இருக்கிற நிலைமையில் இருக்கிறதா, கர்த்தரே மீண்டும் அதை எடுத்து, அதை சீர்ப்படுத்தி, திறப்புகளை எல்லாம் அடைத்து பூர்வ நாட்களில் இருந்தது போல உங்களை மீண்டுமாய் ஸ்தாபிப்பார். குடும்பமாகிய நகரத்தின் சிறையிருப்பை கர்த்தர் இன்றைக்கு திருப்பபோகிறார். 

2. வியாதியின் சிறையிருப்பை திருப்பி இரண்டத்தனையாய் ஆசீர்வதிப்பார் 

யோபு 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

யோபு தன்  சிநேகிதருக்காக ஜெபம் செய்யும் பொழுது கர்த்தர் யோபுவின் வாழ்க்கையில் காணப்பட்ட சிறையிருப்பை மாற்றி அவரை இரட்டிப்பாய் ஆசீர்வதித்தார். தன்னுடைய கடினமான சூழ்நிலையிலும் அவர் தன்  சிநேகிதருக்காக பரிந்து பேசுகிற ஜெபத்தை ஏறெடுத்தார். யோபுவின் எல்லா வியாதியின் சிறையிருப்பை கர்த்தர் மாற்றினார். அதே போல பிறருக்காக நீங்கள் விண்ணப்பம் செய்யும் பொழுது கர்த்தர் உங்கள் வியாதியின் சிறையிருப்பை மாற்றி நீங்கள் முன் இருந்த நிலைமையை பார்க்கிலும்  இரண்டத்தனையாய் ஆசீர்வதிப்பார். 

3. பாவத்தின் சிறையிருப்பை திருப்பி இரக்கம் செய்வார் 

I இராஜாக்கள் 8:36
பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.

I இராஜாக்கள் 8:37
தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,

I இராஜாக்கள் 8:38
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

I இராஜாக்கள் 8:39
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

I இராஜாக்கள் 8:40
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

சாலமோன் அன்றைக்கு கர்த்தருடைய ஆலயத்தை கட்டி அங்கு ஏறெடுத்த அந்த விண்ணப்பம் இந்நாள் வரைக்கும் அங்கு வந்து வேண்டிகொள்கிறவர்களுக்கு தேவன் கேட்டு பதில் அளித்து கொண்டு இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவத்தை மன்னித்து இரக்கம் செய்யும்படியாக சாலமோன் தேவனிடத்தில் மன்றாடுகிறார். அதே போல பாவத்தை இருதயத்தில் உணர்ந்தவர்களாக தேவனுடைய சமூகத்தில் அதை அறிக்கையிட்டு நீங்கள் விண்ணப்பம் செய்யும் பொழுது கர்த்தர் உங்களை பாவத்தின் சிறையிருப்பை திருப்பி மன்னித்து உங்களுக்கு இரக்கம் செய்வார். 

4. அடிமைத்தனத்தின் சிறையிருப்பை திருப்பி ஆரோக்கியம் வரப்பண்ணி காயங்களை ஆற்றுவார் 

எரேமியா 30:8
அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.

எரேமியா 30:10
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பிசாசானவன் உங்கள் மேல் வாய்த்த நுகங்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு கர்த்தர் உடைத்தெறியப்போகிறார். உங்கள் கட்டுகள் எல்லாவற்றையும் அறுத்து, உங்கள் காயங்கள் எல்லாவற்றையும் ஆற்றி உங்களுக்கு ஆரோக்கியத்தை வரப்பண்ணுவார். அடிமைத்தனத்தின் சிறையிருப்புகள் எல்லாம் மாறும். நீங்கள் சுகித்திருப்பீர்கள். 









For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment