Sunday, June 27, 2021

என் கை அவனோடே உறுதியாயிருக்கும்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 27.06.2021


சங்கீதம் 89:21
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

கர்த்தருடைய புயம் நம்மை பெலப்படுத்துகிறது. கர்த்தருடைய கரம் உங்களோடே கூட உறுதியாய் இருக்கும். அதனால் தான் நமக்கு எவ்வளவு தான் போராட்டங்கள் வந்தாலும், பல கன்னிகள் வைத்தாலும், பஞ்சங்கள் பல தலைவிரித்து ஆடினாலும், மனிதரிடத்தில் தயவு கிடைக்காவிட்டாலும் தேவனுடைய கை நம்மை உறுதியாய் பற்றி இருப்பதால் தான் நாம் இதுவரைக்கும் நிர்மூலம் ஆகாமல் இருக்கிறோம். 

1. உன் மனதை உறுதிப்படுத்தி சுதந்திரவாளியாக்குவார் 

ரூத் 1:13
அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.

ரூத் 1:14
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.

ரூத் 1:15
அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

ரூத் 1:16
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

ரூத் 1:17
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.

ரூத் 1:13
அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.

இங்கே நகோமி பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாய் இருக்கிறார்கள். போவாஸ் இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாய் இருக்கிறார். ரூத் மணவாட்டி சபைக்கு அடையாளமாய் இருக்கிறார். நீங்களும் நானும் மன உறுதியாய் இருந்து இந்த மார்க்கத்தை இந்நாள் வரைக்கும் பின்பற்றி வருவதற்கு கர்த்தர் கிருபை அளித்து இருக்கிறார். எத்தனை பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், தவிப்புகள், அவமானங்கள், பணம் இல்லாத சூழ்நிலை  வந்தாலும் அவரையே பற்றி கொள்ளுகிற மன உறுதியை தேவன் நமக்கு அளித்து இருக்கிறார். 

ரூத் 4:13
போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.

ரூத் 4:14
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.

ரூத் 4:15
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.

பெத்லகேமிலே விளைச்சல் உண்டாகி இருப்பதை கேள்விப்பட்டு மீண்டும் அவர்களுடைய பழைய வாழ்க்கைக்கு வந்ததினாலே அவர்கள் சுதந்திரவீதத்தை மீண்டுமாய் தொடரும் படியாக கர்த்தர் போவாஸ் மூலமாக கிருபை பாராட்டினார். இன்றைக்கு உங்களுக்கும் கர்த்தர் சுதந்திரவீதத்தை உங்கள் தலைமுறைக்கு கட்டளையிடுவார். நமக்கு இங்கே கொடுக்கப்படுகின்ற சுதந்திரவீதம் என்ன என்று சொன்னால் அது பரலோகம் மட்டுமே ஆகும் அதுவே நம் சுதந்திரவீதம். மணவாட்டி சபைக்கு நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பிறந்த படியினாலே இந்த மண்ணை விட்டு விண்ணுலகம் போகும் பொழுது நாம் கர்த்தருடைய உடன்படிக்கையின் நிமித்தமாய் நீடித்த நாட்களாய் அங்கே நாம் இருக்கும்படியான சுதந்திரவீதத்தை நமக்கு தருகிறார். 

2. உன் வார்த்தைகளை உறுதிப்படுத்தி உன் ஸ்தானத்திலே வீற்றிருக்கப்பண்ணுவார் 

சங்கீதம் 139:4
என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

I இராஜாக்கள் 1: 14
நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.

I இராஜாக்கள் 1: 27
ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.

I இராஜாக்கள் 1: 28
அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.

I இராஜாக்கள் 1: 29
அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,

I இராஜாக்கள் 1: 30
என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.

நாத்தான் தீர்க்கதரிசிக்கும், தாவீது ராஜாவுக்கும், பத்சேபாலுக்கும் சாலமோனுக்கும், சாலமோனின் அதிபதிகளுக்கும் சொல்லாமலே அதோனியா தனியாக புறப்பட்டு போய் சிங்காசனத்தை நான் தான் ஆளவேண்டும் என்று சொல்லி ராஜ்ஜியபாரத்தை கைப்பற்ற முயன்றான். ஆனாலும் நாத்தான் தீர்க்கதரிசி பத்சேபாளிடம் னக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று தாவீது ராஜாவிடம் கேட்க சொன்னார். அவ்வாறு நீ கேட்கும் பொழுது நான் உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்று கூறினார். அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் சொன்ன எல்லா நல் வார்த்தைகளையும் உறுதிப்படுத்த தேவன் உங்கள் பின் வருவார். உங்களுடைய ஸ்தானத்தை ஒருவரும் பறித்துக்கொள்ளாதபடிக்கு கர்த்தர் உன்னை உன் ஸ்தானத்திலே வீற்றிருக்கச்செய்வார். 

3. உன் காலடிகளை உறுதிப்படுத்தி தடைகளை நீக்கி முன்னேற செய்வார் 

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சங்கீதம் 40:3
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

யோசுவா 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்.

யோசுவா 3:17
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.

ஆசாரியர்களுடைய கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில் மேல் இருந்து வருகிற தண்ணீரை கர்த்தர் நிறுத்தினார். பிறகு சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் தண்ணீரை குவியலாக செய்தார். அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய் தேவன் கடக்க செய்தார். உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி முன்னேறி செல்ல கர்த்தர் உங்கள் கால்  அடிகளை உறுதிப்படுத்துவார். 

4. உன் கையின் பிரயாசத்தை உறுதிப்படுத்தி சகலத்தையும் ஒப்புக்கொடுப்பார் 

சங்கீதம் 90:15
தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

சங்கீதம் 90:15
உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

சங்கீதம் 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

ஆதியாகமம் 39:1
யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்துதேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.

ஆதியாகமம் 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு;

ஆதியாகமம் 39:4
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

தேவன் நம்முடைய கைகளின் கிரியைகளை உறுதிப்படுத்துகிறார் இங்கே யோசேப்போடு கூட கர்த்தர் இருக்கிறார் என்பதையும் அதன் மூலம் யோசேப்பு செய்கிற எல்லா காரியத்தையும் வாய்க்கப்பண்ணுகிறார் என்பதை அவனுடைய எஜமான் கண்டு யோசேப்பின் மீது தயவு வைத்து தனக்கு ஊழியக்காரனாகவும், தன்  வீட்டின் விசாரணைக்காரனுமாக ஆக்கி தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அதே போல தேவன் உங்களையும் காரியசித்தி உள்ளவர்களாக மாற்றி உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து உறுதிப்படுத்தி சகலத்தையும் உங்களிடத்தில் கர்த்தர் இன்றைக்கு ஒப்புக்கொடுப்பார். 

5. உன் இருதயத்தை உறுதிப்படுத்தி சத்துருக்களுக்கு முன்பதாக உயர்த்துவார் 

சங்கீதம் 112:4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.

சங்கீதம் 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

சங்கீதம் 112:7
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

சங்கீதம் 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

சங்கீதம் 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

எஸ்தர் 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

எஸ்தர் 9:2
யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

எஸ்தர் 9:3
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

எஸ்தர் 9:5
அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது. அபிஷேகிக்கப்பட்ட மொர்தகாய்க்கு தேவன் இரக்கம் பாராட்டி ராஜாவின் அரமனையில் எல்லா அதிகாரங்களையும் கொடுத்து அவரை அதே இடத்திலே கர்த்தர் பெரியவனாக்கினார். அதேபோல உங்கள் சத்துருக்களை நீங்கள் நிர்மூலம் ஆக்க தேவன் உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார். யாரெல்லாம் உங்களுக்கு விரோதமாக எழும்பி உங்களை விழப்பண்ண எண்ணினார்களோ அவர்களுக்கு முன்பதாக தேவன் அதே இடத்தில் உங்களை உயர்த்தி பெரியவனாக்குவார். உங்கள் உறுதியாய் இருந்து சத்துருக்களின் சரிக்கட்டுதலை காணும்.  




For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment