Tuesday, June 1, 2021

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஜூன் மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 01.06.2021


மீகா 2:13

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

1. ஜெபிக்கிறவர்களுக்கு - இயற்கையின் தடையை நீக்குவார் 

யாத்திராகமம் 14:15

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.

யாத்திராகமம் 14:16

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

யாத்திராகமம் 14:21

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

யாத்திராகமம் 14:22

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

பல நாட்களாக தொடர்ந்து ஜெபித்து கொண்டு இருக்கிற பரிசுத்தவான்கள், விசுவாச மார்க்கத்தார் யாவருக்கும் சொல்லுவது என்னவென்றால் உங்களுக்கு இயற்கை மீது ஒரு அதிகாரத்தை கொடுக்கப்போகிறார்.  நம்மால் மட்டுமே இந்த தடைகள் யாவும் நீங்கப்போகிறது. நீங்கள் விசுவாசத்தோடு ஜெபம் பண்ணும்பொழுது அது எந்த தடையானாலும் கர்த்தர் அதை நீக்கி போட உங்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார். இயற்கை உங்களை இந்த மாதம் தடை செய்வது இல்லை மாறாக தேவன் அதை உங்களுக்கு மதிலாக நிற்க செய்வார். ஏனென்றால் நம்முடைய ராஜா இந்த தடையை நீக்கி நமக்கு முன்பதாக செல்கிறார்.

2. துதிக்கிறவர்களுக்கு - பட்டணத்தின் தடையை நீக்குவார் 

யோசுவா 6:1

எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

யோசுவா 6:15

ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.

யோசுவா 6:16

ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

யோசுவா 6:17

சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

யோசுவா 6:18
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

எரிகோ பட்டணம் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு தடையாக நின்றது. இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் நாளில் ஆர்ப்பரித்து துதிக்கும் பொழுது அவர்களுக்கு தடையாக இருந்த எரிகோவின் அலங்கங்கள் இடிந்து விழுந்தது. அந்த பட்டணத்தை கர்த்தர் அவர்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அது போல இந்த ஜூன் மாதத்தில் நீங்கள் தேவனை ஆர்ப்பரித்து துதிக்கும் பொழுது உங்களுக்கு தடையாக இருக்கிற பட்டணத்தின் தடையை தேவன் இந்த மாதம் நீக்கி போடுவார். 

3. அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு - மனுஷரின் தடையை நீக்குவார் 

மத்தேயு 20:29
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 20:30
அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:31
அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:32
இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.

மத்தேயு 20:33
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

மத்தேயு 20:34
இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

இங்கே மனுஷன் தடை செய்கிறார்கள் அவர்கள் பேசாது இருக்கும் படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள் ஆனாலும் அந்த இரண்டு குருடர்களும் இன்னும் அதிக சத்தமாய் தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர்களுடைய இந்த கூப்பிடுதல் இயேசுவை நிற்க வைத்தது. இந்த மாதம் உங்களுக்கு எதிராக தடைகள் எழும்பினாலும் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் அதிக அதிகமாக கூப்பிடும் பொழுது அவர் நின்று உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பார். ஒருவரும் உங்கள் அற்புதத்தை தடை செய்ய முடியாது. 





For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment