Kanmalai Christian Church
Resurrection Sunday Service
Word of God : Brother Micheal
Date : 4.4.2021
I கொரிந்தியர் 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
நம் இயேசு அடக்கம் பண்ணப்பட்டு வேத வாக்கியத்தின் படியாக மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் என்று அப்போஸ்தலராகிய பவுல் இங்கே சொல்லுகிறார். இன்றைக்கு உயிர்த்தெழுந்த ஆண்டவர் நமக்கு என்ன செய்வார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஐந்து காரியங்களை நாம் இங்கே காணலாம்.
1. தடைகள் யாவையும் நீக்கி - நீ முன்னேறி சொல்லும்படியாக செய்வார்
மத்தேயு 28:1
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மத்தேயு 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
மத்தேயு 28:3
அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
மத்தேயு 28:4
காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா தடைகளையும் இன்றைக்கு உயிர்த்தெழுந்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீக்கி போட போகிறார். வசனம் இப்படியாய் சொல்லுகிறது கல்லை புரட்டி தள்ளி தூதன் அதின் மேலே உட்கார்ந்தார். எத்தனை தடை கற்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் சரி. நம் தேவன் அதை புரட்டி, தள்ளி அதின் மேலே உட்காரப்போகிறார். நீங்கள் முன்செல்ல முடியாத இருக்கிற அந்த தடைகள் யாவையும் தேவன் இன்றைக்கு நீக்குவார். உன்னுடைய சத்துருக்களுக்கு திடுக்கிட்டு பயம் உண்டாகும்படியாக தேவன் உங்கள் வாழ்க்கையில் எழுந்தருளுவார்.
2. துக்கங்களை மாற்றி - உன் காரியங்கள் வாய்க்கும்படியாக செய்வார்
லூக்கா 24:17
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
லூக்கா 24:18
அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
நீங்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் வீட்டில் உங்கள் பிரச்சினைகளை குறித்து கலங்கி பேசுவது ஏன் என்று ஆண்டவர் கேட்கிறார். நீங்கள் துக்க முகமாய் இருக்கிறது என்ன என்று தேவன் கேட்கிறார். எந்த காரியத்தில் நீங்கள் துக்கப்பட்டு இருந்தாலும் சரி இன்றைக்கு தேவன் உங்களை துக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றி உங்களை மகிழ்ச்சியாக்குவார். தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. விசுவாசத்தோடு இருங்கள்.
3. கலக்கங்களை நீக்கி - நீ சமாதானமாய் இருக்கும்படியாக செய்வார்
லூக்கா 24:34
கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
லூக்கா 24:35
வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
லூக்கா 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
லூக்கா 24:37
அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
லூக்கா 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
லூக்கா 24:39
நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
நீங்கள் பேசி கொண்டு இருக்கிறதை நம் தேவன் கவனிக்கிறவராக இருக்கிறார். நீதிமான்களாகிய நீங்கள் செய்யும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தேவன் கவனித்து கொண்டு இருக்கிறார். நீங்கள் எந்த காரியத்தை குறித்து ஒரு வித பயத்தோடும், கலகத்தோடும் பேசி கொண்டு இருக்கிறீர்களோ அந்த காரியத்தில் தேவன் உங்களுக்கு ஒரு சமாதானத்தை அளிக்க போகிறார். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் நீங்கள் பேசுகிற காரியத்தை தேவன் நிச்சயமாக செய்து முடிப்பார்.
4. ஒன்றுமே இல்லாத நிலையை மாற்றி - அதிகமான நன்மைகளை செய்வார்
யோவான் 21:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:
யோவான் 21:2
சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
யோவான் 21:3
சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
யோவான் 21:4
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
யோவான் 21:5
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
யோவான் 21:6
அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
யோவான் 21:7
ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
யோவான் 21:8
மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள்.
யோவான் 21:9
அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
தேவன் நம் சூழ்நிலையை பார்க்க கரையிலே நிற்கிறவர். உங்களிடத்தில் ஒன்றும் இல்லை என்பது ஆண்டவருக்கு தெரியும். இழுக்க முடியாத அளவுக்கு தேவன் உங்களை இன்றைக்கு ஆசீர்வதிக்கப்போகிறார். பின்மாற்ற ஜீவியத்தில் போய் இருந்தாலும் சரி, நீங்கள் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் சென்று இருந்தாலும் சரி தேவன் உங்களை பிள்ளைகளே என்று அழைத்து இழுக்கக்கூடாத படிக்கு ஆசீர்வதிப்பார்.
5. சபிக்கப்பட்ட வாழ்க்கையை - கரம் உயர்த்தி ஆசீர்வதிக்கும்படியாக செய்வார்
லூக்கா 24:49
என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
லூக்கா 24:51
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
பெத்தானியா என்று சொன்னால் சபிக்கப்பட்ட ஒரு இடம். இங்கே இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்து கொண்டு வந்து ஆசீர்வதித்தார் என்று அதுபோல உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதான சாபங்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு உயிர்த்தெழுந்த ஆண்டவர் நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
Amen
ReplyDelete