Saturday, April 3, 2021

தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்

 

Kanmalai Christian Church

Good Friday Service 02 April 2021

Word of God : Brother Micheal



யோவான் 19:30

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ஆதலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். என்னை உமிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிகமான பாவம் சேரும் என்று சொல்லி இயேசு கிறிஸ்து பிலாத்துனிடத்தில் சொல்லுகிறார். ஆனால் சிலுவையிலே இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் தாமே தம்முடையவியை ஒப்புக்கொடுத்தார். இங்கே நாம் ஐந்து விதமான காரியங்களை தேவன் ஒப்புக்கொடுத்தார் என்பதை பார்க்கலாம். 

1. அன்பாய் ஒப்புக்கொடுத்தார் - நம்மேல் சிநேகம் வைக்கும் படியாய்

கலாத்தியர் 2:20

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

எபேசியர் 5:2

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

யோவான் 13:1

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

தேவன் நம் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக தான் நாம் இந்நாள் வரைக்கும் பிழைத்து இருக்கிறோம். மனுஷர் வைக்கிற அன்பு மாறிப்போகலாம் ஆனால் தேவனுடைய அன்பு நித்தியமானது என்றும் நிலைத்திருக்கக்கூடியது. அவர் நம்மேல் வைத்த அன்பினால் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் அதனால் தான் நாம் பிழைத்து இருக்கிறோம். இந்த உலகத்தின் முடிப்பரியந்தம் வரைக்கும் தேவன் நம் மேல் அன்பு வைத்து இருக்கிறார். 

2. கிருபாதாரபலியாக ஒப்புக்கொடுத்தார் - நம்மை நீதிமானாய் மாற்றும்படியாய்

ரோமர் 4:25

அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

நம்முடைய பாவங்களுக்காக அவர் தம்மைத்தாமே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். நம்மை நீதிமானாய் மாற்றும் பொருட்டு அவர் சிலுவையிலே எழும்பினார்.  

3. பழுதற்ற பலியாய் ஒப்புக்கொடுத்தார் - நம்மை சுத்திகற்கும்படியாய் 

எபிரெயர் 9:14

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

தேவன் நமக்காக பழுதற்ற பலியாக சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார்.  அவர் நம்மை சுத்திகரித்து தேவனுக்கு முன்பாக நிற்க செய்து எல்லா விதமான காரியங்களிலும் நமக்கு ஜெயத்தை கொடுப்பார். 

4. நம் பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்தார் - நம்மை விடுவிக்கும்படியாக 

கலாத்தியர் 1:4

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் இருந்து நம்மை விடுதலை செய்யும் பொருட்டாக நம்முடைய பாவங்களுக்காக பிதாவினுடைய சித்தத்தின் படியே அவர் சிலுவையிலே தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். நம்மை பரிபூரண விடுதலையாக்குவதற்கு அவர் ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்காக காயப்பட்டார், நொறுக்கப்பட்டார், அவர் வாய் திறவாமல் இருந்தார். எல்லாம் நமக்காகத்தான். நாம் விடுதலையாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே தான். 

5. தம்மை பிழையாக ஒப்புக்கொடுத்தார் - நாம் மகிமையின் சபையாக மாறும்படியாக 

எபேசியர் 5:27

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

நாம் அனைவரும் கறை, திரை ஒன்றும் இலாதவைகளாய் பரிசுத்தமாகவும், பிழையற்றதுமாகவும் இறுக்கத்தக்க மகிமையான சபையாக மாறி தமக்கு முன் நிற்பதற்காகத்தான் இயேசு தாமே சிலுவையிலே நமக்காக ஒப்புக்கொடுத்தார். 





For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment