Monday, April 12, 2021

அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date: 12.04.2021


லூக்கா 21:30

அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

உங்களுக்காக ஒரு வசந்த காலம் சமீபமாக இருக்கிறது. தேவன் உங்களை அதிலே பிரவேசிக்க செய்வார். 

எப்படி தேவன் நம் வாழ்க்கையை துளிர்க்க வைக்க போகிறார் ?


1. கொடிகளை துளிர்க்க செய்து - உன் தலையை உயர்த்துவார் 

ஆதியாகமம் 40:8

அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

ஆதியாகமம் 40:9

அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.

ஆதியாகமம் 40:10

அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.

ஆதியாகமம் 40:11

பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.

ஆதியாகமம் 40:12

அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.

ஆதியாகமம் 40:13

மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

சிறையில் பானபாத்திரக்காரன் தன் சொப்பனத்தை யோசேப்பிடம் சொன்ன பொழுது மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி மறுபடியும் உன்னை உன் நிலையில் நிறுத்துவார் என்று சொன்னார். அதேபோல் தேவன் உங்கள் தலையை உயர்த்த போகிறார் நீங்கள் இழந்த ஸ்தானத்திலே மீண்டுமாய் உங்களை நிலைநிற்க செய்யப்போகிறார். உங்கள் சிறைப்பட்ட வாழ்க்கையை மாற்றி உங்களை துளிர்க்க செய்யப்போகிறார். நீங்கள் இழந்த மேன்மையை தேவன் திரும்ப அளிக்கும்படியாய் தேவன் துளிர்க்க செய்யப்போகிறார். 

2. கோலை துளிர்க்க செய்து - உன்னை அடையாளமாக வைப்பார் 

எண்ணாகமம் 17:3

லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 17:4

அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.

எண்ணாகமம் 17:5

அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.

எண்ணாகமம் 17:6

இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.

எண்ணாகமம் 17:7

அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.

எண்ணாகமம் 17:8

மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.

எண்ணாகமம் 17:9

அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

எண்ணாகமம் 17:10

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.

தேவன் தெரிந்துகொள்ளப்பட்ட கோலாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட கோல் நிச்சயம் துளிர்க்கும். உங்கள் வாழ்க்கை பூப்பூத்து கனிகொடுக்க போகிறீர்கள். துதிக்கிற உங்களை தேவன் உங்களை துளிர்க்க செய்து பூத்து குலுங்க செய்வார். உங்கள் நிமித்தமாக அநேகர் காக்கப்படுவார்கள். 

3. சுகவாழ்வை துளிர்க்க செய்து - உன்னை வற்றாத நீரூற்றாய் இருக்க செய்வார் 

ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

ஏசாயா 58:10
பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

ஏசாயா 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

ஏசாயா 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

உங்கள் வெளிச்சம் எழும்பி சுகவாழ்வு சீக்கிரத்திலே துளிர்க்கபோகிறது. பாடுகளின் வழியாக மட்டுமே இதுநாள் வரையிலும் நீங்கள் கடந்து வந்தவர்களாக இருக்கலாம். இன்றைக்கு தேவன் சொல்கிறதாவது உங்கள் சுக வாழ்வானது வெகு சீக்கிரத்தில் துளிர்க்கப்போகிறது. ஒரு அமிரிக்கையான வாழ்க்கையை வாழத்தக்கதாக கர்த்தர் செய்வார். சிறுமைப்பட்டவர்களை விசாரித்து அவர்கள் ஆத்துமாவை திருப்தியாக்கினால் தேவன் உங்களை வற்றாத நீரூற்றைப்போலவும், நீர்பாய்ச்சலான தோட்டத்தை போலவும் மாற்றுவார்.

4. அடிமரத்தை துளிர்க்க செய்து - உன்னை செழித்திருக்க செய்வார் 

ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

ஏசாயா 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.

ஏசாயா 35:2
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றும், அதின் வேர்களில் இருந்து ஒரு கிளை எழும்பி செழிக்கும். கர்த்தர் உங்களை எழும்பி செழித்திருக்க செய்வார். அநேகருக்கு ஆசீர்வாதமான பாத்திரமாக நீங்கள் இருக்க போகிறீர்கள். வறண்டு வானாந்திரமாக இருக்கிறதான வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி களிகூர செய்து புஷ்பத்தை போல செழிக்க செய்வார். 



For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment