Saturday, April 24, 2021

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 24.04.2021


ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

நீங்கள் எப்படிப்பட்ட பயமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி. நீ பயப்படவேண்டாம் என்று கர்த்தர் உங்களை பார்த்து வாக்குப்பண்ணுகிறார். 

1. நீ பயப்படாதே -  உன்னை வானத்து நட்சத்திரங்களை போல ஆசீர்வதிப்பார் 

ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

ஆதியாகமம் 15:3
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

ஆதியாகமம் 15:4
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,

ஆதியாகமம் 15:5
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி தேவன் உங்களுக்கு கேடகமும், மகா பெரிய பலனுமாய் இருக்கிறார். கர்த்தர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். உங்களை சுற்றி நடக்கிற சூழ்நிலைகளை பார்த்து நீங்கள் சோர்ந்து போக வேண்டாம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் சுற்றிலும் தேவன் கேடகமாய் இருப்பார். நீங்கள் என்ன கேட்கிறீர்களா தேவன் அதை உங்களுக்கு நிச்சயமாக கொடுப்பார். உங்களை வானத்து நட்சத்திரங்களை போல பெறுக செய்து ஆசீர்வதிப்பார். 

2. நீ பயப்படாதே - உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்து சுகமாய்  வாழ்ந்திருக்கும்படி செய்வார் 

ரூத் 3:9
நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.

ரூத் 3:11
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

ரூத் 3:1
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

நீங்கள் பயப்பட வேண்டாம் இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு என்ன எல்லாம் தேவை என்பதை தேவன் அறிந்து இருக்கிறார். நம் தேவன் சர்வ லோகத்தையும் போஷிக்கிறவர். உங்கள் வீட்டை விசாரிக்கும் பொழுது ஒரு நன்மையையும் குறைவுபட்டு இருக்காது. வருகிற நாட்களிலே தேவன் உங்களுக்கு வேண்டியபடியெல்லாம் செய்வார். நாம் எல்லாரும் இயேசுவுக்கு சுதந்திரவாளிகள். அவரை ஆராதிக்கிற பிள்ளைகளுக்கு அவர் எல்லாவற்றையும் செய்வார். அவர் நம்மை தனெக்கென்று ஏற்படுத்தி இருக்கிறார். நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கும் படி சவுக்கியத்தை தேடி கொடுப்பார். 

3. நீ பயப்படாதே - உன்னை பெரிய ஜாதியாக்கி திரும்பிவரப்பண்ணுவார் 

ஆதியாகமம் 46:2
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.

ஆதியாகமம் 46:3
அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஆதியாகமம் 46:4
நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.

நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம், நீங்கள் எங்கு சென்றாலும் கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். உங்களை பெரிய ஜாதியாக்கி திரும்பி வரப்பண்ணுவார். 



For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment