Kanmalai Christian Church
Word of God: Brother Kamal
Date: 18.04.2021
ஏசாயா 27:2
அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள்.
ஏசாயா 27:3
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
அக்காலத்திலே நல்ல திராட்சை ரசத்தை தரும் திராட்சை தோட்டம் இருந்தது, அந்த நல்ல திராட்சை தோட்டத்தை குறித்து தான் தேவன் இங்கே வைராக்கியமாக சொல்லுகிறார்.கர்த்தராகிய நான் அதை காப்பாற்றி, அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி , ஒருவரும் அதனை சேதப்படுத்ததை படிக்கு இரவும், பகலும் அதை காத்துக்கொள்ளுவேன் என்று சொல்லுகிறார். யார் அந்த திராட்சை தோட்டம் ? தேவனுடைய திருச்சபையே அந்த தோட்டம். இந்த நல்ல திராட்சை தோட்டத்தை நாட்டுவதற்காக தேவன் ஈடு இணையில்லாத கிரயத்தை செலுத்தி இருக்கிறார். அவர் தம் சொந்த குமாரனையே கல்வாரி சிலுவையிலே கிரயமாக கொடுத்தார். சாத்தானின் அதிகாரத்தில் இருந்து, இருளின் அதிகாரத்தில் இருந்து நம்மை விடுதலையாக்க அவர் தம் சொந்த குமாரனையே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.
அதனால் தான் இன்று நாம் நல்ல திராட்சை ரசத்தை தரக்கூடிய திராட்சை தோட்டமாக மாற்றப்பட்டு இருக்கிறோம். அந்த விளைவின் பலன் தான் இன்றைய திருச்சபை. உங்களை குறித்து தான் தேவன் வைராக்கியம் பாராட்டி சொல்லுகிறார் நான் உங்களை காப்பாற்றி, அடிக்கடி உங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, ஒருவரும் உங்களை சேதப்படுத்தாத படிக்கு இரவும், பகலும் உங்களை காத்துக்கொள்ளுவேன் என்று சொல்லுகிறார்.
1. அவர் நம்மை காப்பற்றுகிறார்
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
லூக்கா 13:34
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
யோபு 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
சங்கீதம் 121:4
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
சங்கீதம் 121:5
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
சங்கீதம் 121:6
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
சங்கீதம் 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
சங்கீதம் 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
தேவன் எப்படியெல்லாம் நம்மை பாதுகாக்கிறார் என்பதை பற்றி மேற்கண்ட வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. அவரே நம்முடைய பெலனும், அடைக்கலமும், ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையுமாய் இருக்கிறார். ஒரு கோழி தன் குஞ்சுகளை சிறகுகளின் கீழே வைத்து பாதுகாப்பது போல நம்மை காக்கிறார். நம்மையும், நமக்கு உண்டான எல்லாவற்றையும் வேலி அடைத்து பாதுகாக்கிறார். இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதும், இல்லை தூங்குவதும் இல்லை இந்த உலகத்தில் காணப்படுகிற எந்த ஒரு தீமைக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். தேவனாகிய கர்த்தர் உங்களை காக்கும் படிக்கு உங்களுடனே கூட இருக்கிறார்.
யாத்திராகமம் 12:12
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
எகிப்து தேசம் முழுவதும் சங்கார தூதன் அவர்களுடைய தலையீற்றை சங்காரம் செய்த பொழுது இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடையாளமாக ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களின் வீட்டின் நிலக்கால்களில் அடையாளமாக பூசப்பட்டது. அவர்களுக்கு பாதுகாப்பான அரணாக இருந்தது. அதேபோல இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திருரத்தம் நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது. எந்த தீங்கும் உங்களை அணுகாதம் படிக்கு தேவன் உங்களை ரத்தக்கோட்டைக்குள் மூடி மறைத்து கொள்ளுவார். நீங்கள் பயப்படவேண்டாம். அவர் நம்மை காப்பாற்றுவார்.
2. அவர் நமக்கு தண்ணீர் பாய்ச்சுவார்
மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
நமக்கு என்ன தேவை என்ன என்பதை நம்முடைய தேவன் அறிந்து இருக்கிறார். ஆகாயத்து பட்சிகளை மறவாது போஷிக்கிற தேவன் உங்களை போஷிக்காமல் இருப்பாரோ ? நிச்சயமாகவே அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவார். இவற்றையெல்லாம் அஞ்ஞானிகள் தான் தேடி அலைந்து கொண்டு இருப்பார்கள் அனால் நமக்கோ தேவன் யோகாவாயீரே வாக இருக்கிறார் உங்கள் தேவைகள் எதுவாகிலும் கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்து கொல்லப்படும். உலகப்பிரகார தேவைகள் மாத்திரம் அல்லாது தேவன் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நீர் பாய்ச்சுகிறவராக இருக்கிறார். நம் மேலும் நம்முடைய சந்ததியின் மேலும் தேவன் தாமே அவர் ஆவியை அளவில்லாமல் ஊற்றி நம்மை கனிதரும் திராட்சைத்தோட்டமாக வைத்து இருக்கிறார்.
3. அவர் நம்மை ஒருவரும் சேதப்படுத்தாது இரவும் பகலும் காப்பார்
தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.
தானியேல் 3:17
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 3:27
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
இடைவிடாமல் ஆராதிக்கிற தானியேலை சிங்கங்கள் சேதப்படுத்தாத படிக்கு தூதனை வைத்து கட்டிப்போட்டவர், இடைவிடாமல் ஆராதிக்கிற சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை அக்கினி சேதப்படுத்தாத படிக்கு பாதுகாத்த தேவன் இன்று உங்களையும் ஒருவரும் சேதப்படுத்தாத படிக்கு இரவும், பகலும் காத்துக்கொள்ளவார். உங்களுக்கு ஒரு சேதமும் ஏற்படாது.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment