Saturday, May 1, 2021

உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்

 

கன்மலை கிறிஸ்துவ சபை மே மாத வாக்குத்தத்தம்

Word of God : Brother Micheal

Date: 01.05.2021


மல்கியா 4:1

இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா 4:2

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

நீங்கள் இப்பொழுது பார்க்கிற நாட்களை காட்டிலும் பயங்கரமான நாட்கள் வருகிறது. ஆனாலும் கர்த்தருடைய நாமத்திற்கு பயந்து இருக்கிற உங்கள் மேல் இந்த மே மாதம் நீதியின் சூரியன் உதிக்கும். உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் கொழுத்த கன்றுகளை போல வளருவீர்கள். 

1. நீதியின் கிரீடம் - உன்னை அபிஷேக தைலத்தினால் வார்க்கிறார் 

II தீமோத்தேயு 4:8

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

உங்களுக்காக இந்த மாதம் முதற்கொண்டு நீதியின் கிரீடம் உங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் மரித்த பின்பு இவ்வுலகத்தை விட்டு பரலோகத்தில் போகும் பொழுது ஒவ்வொருவருக்கும் கர்த்தர் நீதியின் கிரீடத்தை வைத்து இருக்கிறார். இந்த கிரீடம் பூமியிலே இருக்கிற நமக்கு எப்படிப்பட்டதாய் இருக்கிறது. 

லேவியராகமம் 21:12

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

சங்கீதம் 132:17

அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.

I யோவான் 2:27

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

நீதியின் கிரீடம் அதற்கு பொருள் என்னவென்றால் அபிஷேக தைலத்தை கர்த்தர் உங்கள் மேல் ஊற்றுவார். அபிஷேக தைலம் என்னும் கிரீடம் உங்கள்மேல் இருக்கிறது. இந்த மாதம் ஒரு அபிஷேக தைலத்தை கர்த்தர் வார்க்கிறார். இந்த அபிஷேகத்தைலம் உங்கள் மேல் இருக்கும் பொழுது ஒருவரும் உங்களை மேற்கொள்ள கர்த்தர் விடமாட்டார். அவராலே பெற்ற அபிஷேகம் உங்களுக்கு சகலத்தையும் குறித்து போதிக்கிறது. அது சத்தியமாய் இருக்கிறது. இந்த மாதம் இந்த அபிஷேகத்தைலத்தை வாஞ்சிக்கிறவர்களுக்கு தேவன் அளிக்கப்போகிறார். 

2. நீதியின் விளைச்சல் - உனக்கு பரிபூரணமான ஆகாரத்தை தருவார் 

II கொரிந்தியர் 9:6

பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

II கொரிந்தியர் 9:7

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

II கொரிந்தியர் 9:8

மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

II கொரிந்தியர் 9:9

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.

II கொரிந்தியர் 9:10

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

ஆதியாகமம் 41:28

பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.

ஆதியாகமம் 41:29

எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.

ஆதியாகமம் 41:30

அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

ஆதியாகமம் 41:31

வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.

ஆதியாகமம் 41:32

இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

ஆதியாகமம் 41:33
ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

ஆதியாகமம் 41:34
இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.

ஆதியாகமம் 41:35
அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக.

நீங்கள் இதுநாள் வரையிலும் நீண்ட காலமாக எடுத்த பிரயாசத்தின் பலனை இந்த மே மாதத்தில் காணப்போகிறீர்கள். நீங்கள் செய்த நற்கிரியைகளை கர்த்தர் நினைத்தருளி உங்களுக்கு பரிபூரண ஆகாரத்தை அளித்து உங்கள் நீதியின் விளைச்சலை இந்த மாதம் கர்த்தர் வர்த்திக்கப்பண்ணுவார். இந்த மாதம் உங்களை திருப்தியாக நடத்தப்போகிறார். 

3. நீதியின் கிளை - உனக்கு சமாதானத்தின் ஆலோசனையை தந்து விளங்கப்பண்ணுவார் 

எரேமியா 33:15
அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

சகரியா 6:12
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.

சகரியா 6:13
அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

இந்த மாதம் உங்களுக்கு கர்த்தர் நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவார். இந்த கிளை என்பது என்ன கிளை என்பது இயேசு கிறிஸ்துவினுடைய நாமம். இந்த நாமம் உள்ள கர்த்தர் உங்களுக்கு இந்த மாதம் மகிமை பொருந்தினவராய் தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆளுகை செய்வார். உங்கள் வீட்டில் சமாதானத்தின் ஆலோசனையை கர்த்தர் விளங்க செய்வார்.  

4. நீதியின் சால்வை - உனக்கு இரட்டிப்பான ஆவியின் வரத்தை தருவார் 

ஏசாயா 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

I இராஜாக்கள் 19:19
அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

I இராஜாக்கள் 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

I இராஜாக்கள் 19:21
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.

இந்த மாதம் நீதியின் சால்வையை உங்களுக்கு தருவார். அதை யார் விரும்புகிறார்களோ அது அவர்களுக்கு கொடுக்கப்படும். இங்கேயும் எலியா தன்னுடைய சால்வையை எலிசாவின் மேல் போட்டார். அந்த அபிஷேகத்தின் சால்வை விழுந்த மாத்திரத்திலே எலிசா எலியாவின் பின்னே ஓடினார். இந்த மாதம் நீங்கள் எழும்பி பிரகாசிக்கும் படியாக நீதியின் சால்வையை உங்கள் மேல் கர்த்தர் போடுகிறார். தேவன் உங்களுக்கு செய்ததை நினைத்து கொள்ளுங்கள். 

II இராஜாக்கள் 2:1 to 15

ஒரு வரத்தை நாம் பெற்று கொள்ள வேண்டும் என்றால் முதலில் அதற்காக நாம் வாஞ்சிக்க வேண்டும் இங்கேயும் எலிசாவினிடத்தில் அதை நாம் காண முடிகிறது. எலியா எங்கு சென்றாலும் எலிசா அவரை பின் தொடர்ந்தார். எலிசா எலியாவிடம் இருந்த ஆவியின் வரத்தை அப்படியே  இரட்டிப்பாய் எனக்கு வேண்டும் என்று சொன்னார். அதற்கு எளிய அரிதானதை கேடாய் நான்  எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்கு அது கிடைக்கும் என்றார். எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார். எலிசா கண்டார். அவரிடம் இருந்த இரட்டிப்பான வரத்தை பெற்றுக்கொண்டார். அதை பார்த்து கொண்டு இருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து எலிசாவை வணங்கினார்கள். அது போல தான் இந்த மாதம் நீதியின் சால்வையானது உங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் வாஞ்சித்து அதையே நாடும் பொழுது தேவன் உங்கள் மேல் போடுவார். 

5. நீதியின் வாசல் - உனக்கு பெரிய அனுகூலமான வாசலை திறக்கிறார் 

சங்கீதம் 118:19
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.

I கொரிந்தியர் 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

இந்த மாதம் நீதியின் வாசலை உங்களுக்காக கர்த்தர்  திறக்கப்போகிறார். நீங்கள் அதற்குள் பிரவேசித்து கர்த்தரை துதிக்கப்போகிறீர்கள். அது எப்படிப்பட்ட வாசலாய் இருக்கிறது என்றால் அது பெரிதும் அனுகூலமான வாசல் அது உங்களுக்காக இந்த மாதம் திறக்கப்பட்டு இருக்கிறது. 





For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment