Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 07.03.2021
அப்போஸ்தலர் 9:15
அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
தன் சொந்த இஸ்ரவேல் ஜனத்திற்கும், அதிரகாரத்தில் உள்ளவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்கும்படியாக தேவன் நம்மை தெரிந்து கொண்டார். ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன்பதாகவே, ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பதாகவே, ஜெநிப்பிக்கப்படுவதற்கு முன்பதாகவே, தரிசனம் வைக்கப்படுவதற்கு முன்பதாகவே, பரிசுத்த ஆவியானவரின் அனுபவத்தை பெறுவதற்கு முன்பதாகவே, கர்த்தர் அவருடைய பாத்திரமாக தெரிந்து கொள்கிறார். தாயின் கருவில் உருவாகும் முன்னே தேவன் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார். நாம் அனைவரும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாய் இருக்கிறோம்.
எப்படிப்பட்ட பாத்திரமாய் தேவன் நம்மை தெரிந்து கொள்கிறார் ?
1. கனத்திற்குரிய பாத்திரம்
II தீமோத்தேயு 2:20
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
II தீமோத்தேயு 2:21
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
தன்னை சுத்திகரித்து பரிசுத்தமாய் இருப்பவர்கள் எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக இருப்பார்கள். நாம் எல்லாம் எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக இருக்க நாட வேண்டும். அப்படி நாம் சுத்திகரித்து பரிசுத்தமாய் ஜீவிக்கும் பொழுது எந்த ஒரு நற்கிரியைக்கும் நம்மை பயன்படுத்துகிற கனத்திற்குரிய பாத்திரமாக நம்மை மாற்றிடுவார்.
2. பிரித்தெடுக்கப்பட்ட பாத்திரம்
எபேசியர் 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
எபேசியர் 1:5
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
அப்போஸ்தலர் 9:16
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
பிரித்தெடுக்கப்பட்டவர்களின் ஜீவியம் எப்படி இருக்கும் என்று சொன்னால் உலகத்தோடு கலவாமலும், உலகத்தோடு ஐக்கியம் வைக்காமலும், உலகத்தோடு ஒத்த வேஷத்தை தரியாமலும், உலகத்தை சார்ந்து வாழாமலும், இருப்பார்கள். வேதத்தின் அடிப்படையிலே, வேதத்திலே உள்ளபடியே தன்னுடைய வாழ்க்கையை மாற்றி தங்களுக்குள்ளேயே தேவனுக்கு முன்பதாக ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டு பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியமாய் இருப்பார்கள். பிரித்தெடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு பாடுகள் பல இருக்கும். அவர்களுக்கு பாடுகள் மிகுதியாக இருந்தாலும் ஊழியத்திலே ஒரு சோர்வும் இருக்காது, தரிசனத்திற்கு குறைவு இருக்காது, கர்த்தரோடு சஞ்சரிக்கிற வாழ்க்கை முடிவிராது, பிரித்தெடுக்கப்பட்ட ஜனத்தின் எல்லா பாடுகளையும் தாண்டுவதற்கு தேவன் கிருபை செய்வார்.
3. பொற்பாத்திரம்
எபிரெயர் 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
II நாளாகமம் 5:9
பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
II நாளாகமம் 5:10
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
சபையின் ஆசாரியனாகிய, சபையின் ஜனமாகிய உடன்படிக்கை பெட்டியை தொடவோ, அதை அதிகாரம் செலுத்தவோ ஒரு மனிதனுக்கும் அதிகாரம் இல்லை, ஆசாரியருக்கு விரோதமாக எழும்பவோ ஒரு மனிதருக்கும் அதிகாரம் இல்லை அவ்வாறு விரோதமாக எழும்பினால் பிரசியத்தமாக எழுந்தருளுவார். பொற்பாத்திரத்திலே மன்னா இருந்ததாக நாம் வாசிக்கிறோம். பொற்பாத்திரம் என்று சொன்னால் மன்னா, புதிய அபிஷேகம், புதிய தாலந்து, வரங்கள் குறிக்கிறது. நீங்கள் தேவனுடைய வசனத்தால் நிரம்பியிருந்த பொற்பாத்திரமாக இருப்பீர்கள் என்று சொன்னால் இவைகளை எல்லாம் உங்களுக்குள்ளே செயலாற்ற வைப்பார்.
4. பரிசுத்த பாத்திரம்
யோசுவா 6:19
சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
பரிசுத்த பாத்திரமாகிய நாம் அனைவரும் பரலோகத்திலே சேர்க்கப்படுகிற பொக்கிஷமாக இருக்கிறோம். நாம் நம்மை பரிசுத்தப்படுத்தி கொண்டால், தேவனுக்கு முன்பதாக பரிசுத்த ஜீவியம் வாழும் பொழுது ஏற்ற காலம் வரும் பொழுது நம்முடைய ஆத்துமா பரலோகத்தின் பொக்கிஷத்திலே சேரும்படியாக தேவன் நமக்கு கிருபை செய்வார். பரிசுத்த பாத்திரம் எல்லாம் பொக்கிஷத்திலே சேர்க்கப்படும்.
5. நிரம்பின பாத்திரம்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
தாவீதின் இருதயம் நிரம்பி வழியும் பாத்திரமாய் இருந்தது.நிரப்பப்பட்ட பாத்திரம் இவர்களுக்கு போதுமான அபிஷேகம், வல்லமை உண்டு; நம்முடைய பாத்திரம் நிரம்பினதாக காணப்பட நாம் வாஞ்சிக்க வேண்டும். நம்முடைய பாத்திரம் நிரம்பும் பொழுது அது மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment