Kanmalai Christian Church
Date: 14.03.2021
Word of God : Pastor Jachin Selvaraj
(Apostolic Christian Assembly, Purasaiwalkam)
எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
எரேமியா 20:12
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
இந்த இரண்டு வசனத்தையும் நன்றாக வாசிப்போம் என்று சொன்னால் நம் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லி அதில் எழுதப்பட்டு இருக்கிறது. தினமும் இந்த வசனத்தை விசுவாச அறிக்கை இடுங்கள். கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலியாய் நமோடு இருக்கிறார். கர்த்தர் உங்கள் சத்துருக்களுக்கு வெட்கத்தை கொடுப்பார். நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்களை வெட்கப்பட வைப்பார். நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
தேவன் நம் இருதயத்தை பார்க்கிறார், நம் உள்ளந்திரியங்களை பார்க்கிறார். எந்த அளவுக்கு நாம் தேவனோடு உண்மையாய் இருக்கிறோம் என்பதை பார்க்கிறார். நம் இருதயத்தின் ஆழங்களை அறிகிற தேவன். தேவன் நமக்கு நீதியை சரிக்கட்டுவதை நாம் காண்போம்.
யோபு 6:9
தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
யோபு 6:10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
யோபு 6:24
எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
யோபு 13:23
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
யோபு 13:24
நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
தேவன் என்னை நொறுக்க சித்தமானால் நலமாய் இருக்கும் என்று யோபு பக்தன் சொல்லுகிறார். அந்த அளவுக்கு நெருக்கத்தின் பாதையில் பாதையில் கடந்து சென்றதின் நிமித்தமாக இவ்வாறு அவர் சொல்லுகிறார். அபொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே என்கிறார். தேவ சித்தம் எதுவோ அது எனக்கு நடக்கட்டும் என்று சொல்லுகிறார். என் அக்கிரமங்கள், பாவங்கள், மீறுதல்கள் என்ன என்பதை எனக்கு உணர்த்தும் என்று யோபு சொல்லுகிறார். நம்மை நாமே நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனுடைய சமூகத்தில் நம்மை தாழ்த்தி புதுப்பித்து கொள்ள வேண்டும். நம்மை பரிசுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். தேவனுடைய கரங்களிலே நம்மை அர்ப்பணிக்க வேண்டும். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கிற காரியங்களை காணும் பொழுது அதை நம்மால் தாங்க முடியவில்லை. சிலர் பேசுகிற வார்த்தைகளை கேட்கும் பொழுது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவன் நம்மை பரீட்சை பண்ணும் பொழுது நாம் அதற்கு ஒப்பு கொடுப்போம்.
I பேதுரு 1:15
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
I பேதுரு 1:16
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
நம்மை அழைத்த ஆண்டவர் பரிசுத்தர். ஆகவே நாமும் பரிசுத்தமாய் வாழ நாட வேண்டும். தேவன் நமக்கு கிருபை அளிப்பார். நம்முடைய பரிசுத்தத்தை எப்பொழுதும் காத்து கொள்ள வேண்டும்.
II தீமோத்தேயு 2:20
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
II தீமோத்தேயு 2:21
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
ஆண்டவர் நம்மையும் கூட ஒரு பாத்திரமாய் வைத்து இருக்கிறார். நாம் எப்படிப்பட்ட பாத்திரமாய் இருக்கிறோம் என்பதை நாம் சற்றே ஆராய்ந்து பாப்போம். வேண்டாத காரியங்களை விட்டு விட வேண்டும். தேவன் தன் கரத்தில் எடுத்து பயன்படுத்துகிற பாத்திரமாக வாழ நாம் வாஞ்சிக்க வேண்டும். எல்லா நற்கிரியைக்கும் பயன்படுகிற பாத்திரமாக நம்மை தேவன் நம்மை மாற்ற விரும்புகிறார்.
ஆதியாகமம் 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;
ஆதியாகமம் 40:14
இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.
No comments:
Post a Comment