Wednesday, March 3, 2021

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 28.02.2021


சங்கீதம் 62:5
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

சங்கீதம் 62:3
நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.

சங்கீதம் 62:4
அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்.

1. தேவனை நோக்கி அமர்ந்திருந்து பார் - சத்துருக்களை விலக்கி இளைப்பாறுதல் தருவார் 

I நாளாகமம் 22:6
அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,

I நாளாகமம் 22:7
சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

I நாளாகமம் 22:8
ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.

I நாளாகமம் 22:9
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்.

ஏசாயா 7:5
நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;

ஏசாயா 7:6
நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.

ஏசாயா 7:2
சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.

தாவீது தன் குமரானாகிய சாலமோனுக்கு கர்த்தருக்கு ஆலயத்தை கட்ட கட்டளை கொடுக்கிறார், அப்பொழுது தாவீது சாலமோனிடம் நான் கர்த்தருக்கு ஆலயம் கட்டவேண்டும் என்று என் இருதயத்தில் நினைத்து இருந்தேன் அப்பொழுது தேவனுடைய வார்த்தை எனக்கு உண்டாகி நீ பெரிய யுத்தங்களை பண்ணி மிகுதியான இரத்தத்தை சிந்தப்பண்ணினாய் எனவே நீ என் நாமத்திற்கு ஆலயத்தை கட்ட வேண்டாம். உனக்கு பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாய் இருப்பான். அவன் சத்துருக்களை விளக்கி நான் அமர்ந்திருக்க செய்வேன் அவன் பெயர் சாலமோன் எனப்படும் என்றார். 

யுத்தமே இல்லாத அமைதியான ராஜ்ஜியபாரத்தை சாலமோன் புரிந்தார். அவரை போல ராஜ்ஜியத்தில் இளைப்பாறுதல் கண்டவர்கள் ஒருவரும் கிடையாது. அது போல உங்களுடைய வாழ்க்கையில் இளைப்பாறுதல் வேண்டுமா ? சத்துருக்கள் உங்களை விட்டு விளக்கி இருக்க வேண்டுமா ? தேவனை நோக்கி அமர்ந்து இருங்கள். தேவனுடைய சமூகத்தில் அமர்ந்து இருங்கள். ஒரு சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கிற காரியங்களை நாம் காண்கிற பொழுது நம் இருதயம் சோர்ந்து போகும். உங்கள் இதயம் துவள வேண்டாம் நீங்கள் தேவனுடைய சமயத்தில் அமர்ந்து இருந்தால் போதும். உங்கள் சத்துருக்களை விலக்கி இளைப்பாறுதல் தருவார்.

2. இருதயத்தில் பேசி அமர்ந்திரு - உன்  விண்ணப்பத்தை கேட்டு கொம்பை உயர்த்துவார் 

சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.

சங்கீதம் 4:5
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

I சாமுவேல் 1:12
அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

I சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

I சாமுவேல் 1:14
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

I சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

I சாமுவேல் 1:16
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்றவைகளாக இல்லாமல் இருந்தாலும் நீங்கள் கலங்க வேண்டாம் தேவனிடத்தில் உங்கள் இருதயத்திலே பேசி அமர்ந்து இருங்கள், நீதியின் பலியை செலுத்தி அவர் மேல் நம்பிக்கையாய் இருங்கள். இங்கே நாம் பார்க்கிற பொழுது அன்னாள் தனக்கு ஒரு ஆண் மகன் வேண்டி கர்த்தருடைய சமூகத்தில் வெகு நேரம் விண்ணப்பம் செய்கிறாள். அன்னாள் இருதயத்தில் பேசினாள் என்று வசனம் சொல்லுகிறது. எலி அவளை கவனித்து கொண்டு இருந்தார். ஏலி அவள் வெறித்து இருக்கிறாள் என்று எண்ணி அன்னாளிடம் கேட்கிறார் அப்பொழுது அவள் நான் மனக்லேசமுள்ள ஸ்த்ரீ, நான் இருதயத்தை கர்த்தருடைய சமூகத்தில் ஊற்றி விட்டேன் என்று கூறினாள். அதற்கு ஏலி நீ சமாதானத்தோட போ நீ கர்த்தரிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின் படி உனக்கு கட்டளையிடுவாராக என்று கூறி அனுப்பினார். அதே போல் தேவன் அன்னாளுக்கு சாமுவேலை அருளி ஆசீர்வதித்தார். அன்னாளுடைய கொம்பை உயர்த்தினார். 

உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அன்னாளை போல உங்கள் இருதயத்தை கர்த்தருடைய சமூகத்தில் அமர்ந்து ஊற்றிவிடுங்கள். அன்னாளை ஏலி கவனித்தது தேவன் உங்களை கவனித்து பார்ப்பார் நீங்கள் கேட்ட விண்ணப்பத்தின் படி உங்களுக்கு அருளுவார். உங்களை இருதயத்தை களிகூற செய்து உங்கள் கொம்பை உயர்த்துவார். 

3. தேவனுடைய இரட்சிப்புக்காக அமர்ந்திரு -  ஜெயத்தை தருவார் 

சங்கீதம் 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் 

நம் ஆத்துமா தேவனை நோக்கி அமர்ந்து இருக்கும் பொழுது அவராலே நமக்கு இரட்சிப்பு வரும். வல்லமையுள்ள தேவன் தம்முடைய அன்பின் நிமித்தம் உங்கள் பேரில் அமர்ந்து இருப்பார். தேவன் உங்கள் நிமித்தம் கெம்பீரமாய் களிகூருவார். அவர் அமர்ந்திருக்கிற படியினாலே உங்கள் சத்துருக்களை நீங்களே வீழ்த்தும் படியாக காலத்தை கொடுத்து உங்களுக்கு ஜெயத்தை அருளுவார்.  

4. அவர் சமூகத்தில் ஓய்ந்து அமர்ந்திரு - உன்னோடு கூட பேசுவார் 

எரேமியா 47:6
ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.

எபேசியர் 6:17
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

யாத்திராகமம் 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

யாத்திராகமம் 34:29
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

I இராஜாக்கள் 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.

I இராஜாக்கள் 19:9
அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.

I இராஜாக்கள் 19:10
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

I இராஜாக்கள் 19:11
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

I இராஜாக்கள் 19:12
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று

நீங்கள் தான் அந்த பட்டயம் எதுவரைக்கும் நீங்கள் தேவனிடத்தில் எதுவரைக்கும் அமராது இருப்பீர்கள். நீங்கள் ஓய்ந்து அமர்ந்து இருங்கள். தேவன் நமக்கு மகிமை பொருந்திய பட்டயமாக நம்முடன் இருப்பதால் தான் இது வரையிலும் நாம் ஒரு சேதமும் இன்றி இருக்கிறோம்.

மோசே நாற்பது நாள் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் தேவனோடே அமர்ந்து இருந்து அவருடைய கற்பனைகளை பெற்று கொண்டார். கர்த்தர் மோசேயோடு பேசியதால் அவருடைய முகம் பிரகாசித்தது. 

எலியா கர்த்தருடைய தூதன் தந்த போஜனத்தின் பெலத்தினால் நாற்பது நாள் ஓரேப் வரைக்கும் நடக்கிறார். தனக்கு சோர்வு ஏற்படுகிற வரைக்கும் அவர் நடந்து கொண்டே இருக்கிறார் பிறகு ஓரேப் கெபியிலே எலியா ஓய்ந்து இருக்கும் பொழுது அவருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகிறது. அது போல தான் நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் ஓய்ந்து இருக்கும் பொழுது தான் கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு வரும். எலியாவிடம் தேவன் மெல்லிய சத்தத்தில் பேசினார். இன்றைக்கு தேவன் உங்களை அவருடைய சமூகத்தில் ஓய்ந்து அமர்ந்திருக்க உங்களை அழைக்கிறார் தேவன் உங்களிடத்தில் மோசேயோடு, எலியாவோடு பேசினது போல உங்களிடத்தில் பேசுவார். உங்களை பிரகாசிக்க செய்வார். 



For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment