Monday, February 8, 2021

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 07.02.2021


என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 


யோபு 19:23

ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

யோபு 19:24

அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

யோபு 19:25

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

யோபு 19:26

இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

யோபு 19:27

அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் கிறிஸ்து இயேசு வரப்போகிறார் என்றும் அவரை காண்போம் என்ற ஒரு நிச்சயத்தோடு ஒரு தெளிவான வெளிப்பாடு உடையவராக யோபு பக்தன் காணப்பட்டார் என்பதை இங்கே வசனம் நமக்கு விளக்குகிறது. மாமிசம் முழுதும் அழுகி போனாலும் மறுபடியும் காண்பேன் என்று சொல்லுகிறார். என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் யோபு அறிந்து இருந்தார். எவ்வளவு துன்பம் வாந்தாலும், பாடுகள் வந்தாலும் யோபு தேவன் ஒருவரையே நோக்கி அமர்ந்திருந்தார். 

யோபு 42:12

கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; 

1. கன்மலையின்  உன்னதமான தேவன் மீட்பார் - சகலத்திலும் உன்னை  போஷிக்கும்படியாக

சங்கீதம் 78:12

அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

சங்கீதம் 78:13

கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.

சங்கீதம் 78:14

பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

சங்கீதம் 78:15

வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

சங்கீதம் 78:16

கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.

சங்கீதம் 78:17

என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.

சங்கீதம் 78:18

தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

சங்கீதம் 78:19

அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

சங்கீதம் 78:20

இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.

சங்கீதம் 78:35

தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.

கர்த்தர் செங்கடலை பிளந்து தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை வெட்டாந்தரையிலே கடக்க பண்ணினார். ஜலத்தை குவியலாக நிற்க செய்தார். மேலும் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். வனாந்திரத்தில் கன்மலையை பிளந்து அவர்களுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார். இத்தகைய வல்லமையான அதிசயங்களை செய்த தேவனுக்கு விரோதமாக அவர்கள் பாவம் செய்தார்கள். இதானால் தேவ கோபம் எழும்பி அவர்களை சங்கரித்தது அப்பொழுது தான் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேவன் கன்மலையென்றும் உன்னதமான தேவன் எங்கள் மீட்பர் என்றும் கர்த்தரை நினைவுகூர்ந்து அவரை அதிகாலமே தேடினார்கள்.

அன்பான தேவ ஜனமே அவரை நினைவு கூறுவோம். நமக்கு நன்மை செய்து இது நாள் வரையிலும் நமக்கு ஆகாரம் கொடுத்து நம்மை வழிநடத்தி வந்த மீட்பரை நினைவு கூறுவோம். 

உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், பூமிக்குரிய வாழ்க்கையிலும் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தையினாலே அடித்து மீண்டும் ஒரு நதியை உன் மத்தியிலே பாய செய்வார். அதிலே நீங்கள் புறப்பட்டு போய் மறு கறை சேரும் வரைக்கும் உன் எல்லைகளை விஸ்தாரப்படுத்தும் படியாக இந்த கன்மலையாகிய கர்த்தர் உன்னோடு கூட இருப்பதை உன் சொந்த கண்கள் காணும்படியாக யோபு பக்தன் சொன்னது போலவே என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லத்தக்கதாக கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார். 

2. இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மீட்பார் - உன்னை புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்திரமாய் மாற்றும்படியாக 

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 41:11

இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

ஏசாயா 41:12

உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

ஏசாயா 41:13

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 41:14

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

ஏசாயா 41:15

இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

ஏசாயா 41:16

அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

ஏசாயா 41:17

சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

உங்களோடு போராடியவர்களை நீங்கள் தேடியும் காணாதிருப்பீர்கள். உங்களோடு யுத்தம் பண்ணின மனுஷர்கள் ஒன்றும் இல்லாமல் இல்பொருள் ஆவார்கள். ஏனென்றால் தேவன் நமக்கு துணை நிற்கிறார். உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் அவை எல்லாவற்றையும் மேற்கொள்வதற்கு தேவன் உங்களை புதிதும் கூர்மையுமான யந்திரமாய் உங்களை மாற்றும்படியாக உன் மீட்பர் உயிரோடு இருக்கிறார். யாரெல்லாம் உங்களை அற்பமாய் எண்ணினார்களோ அவர்கள் கண்களுக்கு முன்பதாக உங்களை மேன்படுத்தும் படியாக இஸ்ரவேலின் தேவனும் பரிசுத்தருமாகிய உங்கள் மீட்பர் உயிரோடு இருக்கிறார்.  

3. தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கின மீட்பர் - சகல மீறுதல்களையும், பாவங்களையும் அகற்றி உன்னை மன்னிப்பார் 

 ஏசாயா 41:21

யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

 ஏசாயா 41:22

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

 ஏசாயா 41:23

வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

 ஏசாயா 41:24

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

சங்கீதம் 40:2

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சங்கீதம் 40:3

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

இந்த சமுதாயம் உங்களை வெறுக்கலாம், பகைக்கலாம், வேண்டாம் என்று ஒதுக்கலாம் ஆனால் வசனம் சொல்லுகிறது யாக்கோபே இஸ்ரவேலே இதை நினை நீ என் தாசன். மற்றவர்களுடைய பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல தேவனுடைய பார்வையில் நீங்கள் அவர் தாசன் என்னப்படுவீர்கள். அவரே உங்களை உருவாக்கினார். உங்கள் மீறுதல்கள், பாவங்கள் எல்லாவற்றையும் தேவன் இன்றைக்கு அகற்றிவிட்டார் நீங்கள் அவரிடத்தில் திரும்புங்கள் அவர் உங்களை மீட்டு  கொண்டார். 



For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment