Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 31.01.2021
கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்
வெளி 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
1. உன் நாட்களை கூட்டி உனக்கு ஆதரவாய் இருப்பார்
ஏசாயா 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
ஏசாயா 38:2
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
ஏசாயா 38:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
ஏசாயா 38:4
அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
ஏசாயா 38:5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
ஏசாயா 38:6
நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.
சங்கீதம் 39:4
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
சங்கீதம் 39:5
இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.
எசேக்கியா வியாதிபட்டு மரணத்துக்கு எதுவாக இருக்கையில் ஏசையா தீர்க்கதரிசி மூலமாக தேவன் நீ மரிக்கப்போகிறாய் உன் வீட்டு காரியத்தை ஒழுங்குபடுத்து என்று சொல்லுகிறார். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு தேவனை நோக்கி மிகவும் கண்ணீர் விட்டு விண்ணப்பம் செய்கிறார். அப்பொழுது ஏசையாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உன் விண்ணப்பத்தை கேட்டேன், உன் கண்ணீரை கண்டேன் இதோ உன் ஆயுள் நாட்களை பதினைந்து வருடம் கூட்டி தருகிறேன் என்று எசேக்கியாவிடம் போய் சொல் என்று சொல்கிறார். எசேக்கியாவின் கண்ணீரின் விண்ணப்பத்தை கேட்டு தேவன் அவருக்கு ஆயுசுநாட்களை கூட்டியது போல தேவன் உங்கள் கண்ணீர் யாவையும் துடைத்து உங்கள் நாட்களை கூட்டி உங்கள் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்
2. சஞ்சலத்தைப்பார்த்து கொம்பை உயர்த்துவார்
I சாமுவேல் 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
I சாமுவேல் 1:7
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
I சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
I சாமுவேல் 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
அன்னாள் வருஷம் தோறும் போகும் சமயத்தில் எல்லாம் அவளுடைய அவளுடைய சக்களத்தி அன்னாளை துக்கப்படுத்தி மனமடிவு ஆக்குவாள். விசனப்படுத்துவாள். அன்னாள் கணவர் எல்க்கானா கண்ணீரை கண்டு அவளுடைய சஞ்சலத்தை பார்த்து அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறுகிறார். கர்த்தருடைய சமூகத்தில் மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். தேவன் அன்னாளின் கண்ணீரை துடைத்து அவருக்கு தீர்க்கதரிசியான சாமுவேலை பெற்றெடுக்கும் படியாக கிருபை செய்கிறார். இது போல சூழ்நிலையை நாம் சந்தித்து கொண்டு இருக்கலாம் நம்மை மனமடிவு அடைய செய்ய அநேகர் எழும்பலாம் ஆனாலும் நீங்கள் சோர்ந்து போக வேண்டாம் தேவன் தாமே உங்கள் சஞ்சலத்தை பார்த்து உங்கள் கொம்பை உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்துவார். உங்கள் இருதயம் கர்த்தருடைய இரட்சிப்பினாலே களிகூரும்.
3. பாவங்களை மன்னித்து சமாதானத்தை தருவார்
லூக்கா 7:37
அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
லூக்கா 7:38
அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
லூக்கா 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
லூக்கா 7:45
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
லூக்கா 7:46
நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment