Kanmalai Christian Church
Date: 14.02.2021
Word of God : Pastor Jachin Selvaraj
(Apostolic Christian Assembly, Purasaiwalkam)
எபேசியர் 5:8
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:10
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
முற்காலத்தில் ஆபத்தில் இருந்த நம்மை, வியாதியில் , சாபத்தில் இருந்த நம்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு நாள் சந்தித்தார். நம்மை வெளிச்சத்தின் பிள்ளைகளாக மாற்றினார். அவ்வாறு மாற்றி கர்த்தருக்கு பிரியமானது எது என்று நாம் அறியும் கிருபையை தேவன் நமக்கு அளித்து இருக்கிறார். இருளில் இருந்த நம்மை தூக்கி எடுத்த ஆண்டவருக்கு நாம் என்ன செய்கிறோம், உண்மையிலேயே ஆண்டவரை அதிகமாக நேசிக்கிறேனா என்று நம்மை நாமே சோதித்து பார்க்க வேண்டும்.
யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21:16
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
இயேசு நம் மேல் வாய்த்த அன்பு அளவிட முடியாதது. அதே போல் நாம் ஆண்டவரிடம் அன்பாய் இருக்கிறோமா என்று சற்றே சிந்தித்து பாப்போம்.
மத்தேயு 22:37
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
மத்தேயு 22:38
இது முதலாம் பிரதான கற்பனை.
நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், நம் முழு ஆத்துமாவோடும் அன்புகூரக்கடவோம் என்பதை முதலாம் பிரதான கட்டளையாக இருக்கிறது என்பதை நாம் மறக்க கூடாது.
II கொரிந்தியர் 5:14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
எல்லாவற்றிற்காகவும், எல்லா மனுஷருக்காகவும், எல்லா பிரச்சினைகளுக்காகவும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாரப்பட்டு மரித்தார். ஆகையால் தான் இயேசு கிறிஸ்துவினுடைய அன்பு நெருக்கி ஏவுகிறது என்று அப்போஸ்தலராகிய பவுல் சொல்லுகிறார். இதே போல நாமும் கிறிஸ்துவினுடைய அன்பிலே நிலைத்திருக்க பிரயாச பட வேண்டும்.
I கொரிந்தியர் 16:22
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
I கொரிந்தியர் 16:23
கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
பவுல் கொருந்து சபையாருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அது என்னவென்றால் ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்பதே ஏன் உங்களுக்கு சாபம் வருகிறது, ஏன் உங்களுக்கு வேதனை மேல் வேதனை வருகிறது என்பதை நினைத்து பாருங்கள். ஏன் உங்களுக்கு வீழ்ச்சி மேல் வீழ்ச்சி வருகிறது என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமல் நம் வாழ்க்கையை நடத்தி கொண்டு போனால் நம் முடிவு என்ன என்பதை தான் இங்கே வசனம் நமக்கு தெளிவாக விளக்குகிறது. உங்கள் வாழ்க்கை உயர்த்தப்பட வேண்டுமா ? உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட வேண்டுமா ? நம்முடைய எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டுமா ? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அதிக அன்பை நாம் காட்டுவோமாக
மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10:38
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
நாம் தாய், தகப்பனிடத்தில் வைத்து இருக்கிற அன்பை காட்டிலும் அதிகமாக நம் தேவனிடத்தில் அன்பாக இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் பாடுகள் இருக்கிறது ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவை பின்பற்றி வர வேண்டும். அவனவன் தன் தன் சிலுவையை சுமந்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது.
எசேக்கியேல் 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.
எசேக்கியேல் 24:17
அலறாமல் பெருமூச்சு விடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
ஆண்டவர் சில நேரங்களில் நாம் யாரை அதிகமாய் நேசிக்கிறோமோ மேலே சொல்ல பட்ட சம்பவங்கள் நடக்கலாம். ஆண்டவரை அதிகமாய் நேசிப்போமாக ஆண்டவர் நமக்கு கொடுத்த பிள்ளையை காட்டிலும் அதிகமாய் நேசிக்க வேண்டும். ஆண்டவர் நமக்கு கொடுத்த செல்வங்களை காட்டிலும் அதிகமாய் நேசிக்க வேண்டும். நமக்காக சிலுவையை சுமந்த இயேசுவை அதிகமாய் நேசிப்போமாக நாம் அவர்மேல் அன்பு காட்ட காட்ட நிச்சயமாகவே அவர் நமக்காக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து முடிப்பார்.
மல்கியா 2:11
யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள்.
அந்நிய விக்கிரகங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க கூடாது, கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை பரிசுத்த குலைச்சல் ஆக்கக்கூடாது நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக இப்படிப்பட்ட அந்நிய வேண்டாத கர்த்தருக்கு பிடிக்காத காரியங்களுக்கு உங்கள் இருதயத்தை ஒப்பு கொடுத்து விடாதீர்கள், உங்கள் சிந்தைகளை ஒப்புக்கொடுத்து விடாதீர்கள், உங்கள் கண்களை ஒப்பு கொடுத்து விடாதீர்கள்.
ஆதியாகமம் 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
பாவம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் வந்தாலும் நாம் அதற்க்கு உடன்படக்கூடாது. இங்கே யோசேப்பு சொல்கிறார் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்று கேட்கிறார். அவர் தன் பரிசுத்தத்தை காத்துக்கொண்டார். அவ்வாறு இருந்ததால் தான் கர்த்தர் யோசேப்பை எகிப்திலே ராஜாவுக்கு அடுத்ததாக அதிபதியாக்கி உயர்த்தினார்.
மத்தேயு 5:46
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
I சாமுவேல் 16:6
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
I சாமுவேல் 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
I சாமுவேல் 16:10
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
I சாமுவேல் 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
I சாமுவேல் 16:12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
ரோமர் 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
இங்கே சீமேயி தாவீதை எவ்வளவு தூஷிக்க முடியுமோ தூஷிக்கிறார். தாவீது தனிமையில் அல்லஅவரோடு கூட சகல ஜனங்களும், பலசாலிகளும் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் இருக்கிறார்கள் ஆனாலும் தாவீது பொறுமையோடு இருக்கிறார் அவன் என்னை தூஷிக்கட்டும் என்று சொல்லுகிறார். சீமேயி அப்படி செய்ய கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டு இருக்கிறார் என்கிறார். இங்கே பார்க்கும் பொழுது தாவீதினுடைய இருதயத்திலே கிறிஸ்துவினுடைய அன்பு இருக்கிறதை நாம் பார்க்கிறோம். அதனால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஒருநாள் கர்த்தர் என் சிறுமையை கண்ணோக்கி பார்த்து என்னை நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக நன்மைக்கு சரிக்கட்டுவார் என்கிறார். அதுபோல நாமும் நம் சத்துருக்களை சினேகிப்போம், நம்மை நிந்தித்தவர்களுக்காக ஜெபம் பண்ணக்கடவோம். நம்முடைய நாவிலே வீணான வார்த்தைகளுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது. அப்பொழுது நிச்சயமாகவே தேவன் நம்மை உயர்த்த வல்லவராய் இருக்கிறார்.
I தெசலோனிக்கேயர் 5:8
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment