Tuesday, February 23, 2021

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்

 

Kanmalai Christian Church 

Word of God: Brother Kamal

Date: 21.02.2021


வெளிச்சம் உண்டாகக்கடவது 

ஆதியாகமம் 1:3

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

ஆதியாகமம் 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

இன்றைக்கு தேவன் உங்களுக்கு சொல்லுகிற வார்த்தையானது வெளிச்சம் உண்டாக்கடவது. உங்கள் வாழ்க்கையிலே இன்றுமுதல் வெளிச்சம் உண்டாகக்கடவது. எல்லா இருளான சூழ்நிலைகளும் நீங்க போகிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினார் என்று பாப்போம். 

கிறிஸ்துவுக்குள் நாம் புது சிருஷ்டியாக இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது. தேவனை அறிந்து அவரோடு உடன்படிக்கை செய்த ஆரம்ப காலத்தில் நாம் ஆண்டவரோடு இருக்கிற ஐக்கியத்தில் பெலப்பட்டு இருந்தோம். ஆனால் நாளானது செல்ல செல்ல பிசாசானவன் நம்மை ஆண்டவரோடு இருக்கிற அந்த ஐக்கியத்தில் இருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சம் ஆக விலக வைத்து விடுகிறான். நம்முடைய வாழ்க்கை இருளிலே தள்ளப்படுகிறது. தேவனோடு இருந்த அந்த ஆதி அன்பை நாம் விட்டு விடுகிறோம். இதனால் நம் ஜீவியமானது ஒழுங்கின்மையும், வெறுமையும், இருளுமாய் காணப்படுகிறது. 

இன்றைக்கு அப்படிப்பட்ட நிலையிலே நாம் இருப்போம் அனால் நம்மை நாமே ஆராய்ந்து பாப்போம். ஆண்டவரிடத்தில் மீண்டுமாய் திரும்பும் பொழுது வெறுமையாய் இருக்கிற வாழ்க்கையில், தேவனோடு உள்ள ஐக்கியத்தில் ஒழுங்கின்மையாய் இருக்கிற நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், இருள் சூழ்ந்து இருக்கிற வாழ்க்கையில் தேவன் இன்றைக்கு ஒரு வெளிச்சத்தை உண்டாக்கப்போகிறார். 

எபேசியர் 5:8

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.

தேவன் வெளிச்சத்தை நல்லது என்று கண்டார். தேவன் வெளிச்சத்தையும், இருளையும் வெவ்வேறாக பிரித்தார். முற்காலத்தில் நாம் இருளிலே இருந்தோம். இருளில் இருந்த நம்மை தேவன் வெளிச்சமாய் இருக்க பிரித்து எடுத்து இருக்கிறார்.ஆகவே வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்வோம்.  

சங்கீதம் 18:28

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

நம்முடைய தேவன் ஒளியாய் இருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை, உலகத்திலே வந்து எனது மனுஷனையும் பிரகாசிபிக்கிற மெய்யான ஒளி அவரே மெய்யான ஒளி, நம் மரண இருளை போக்கும் பெரிய வெளிச்சம், நம் வாழ்க்கையில் விடியலை தரும் விடிவெள்ளி நட்சத்திரம். 

தேவன் எப்படிப்பட்ட ஒளியாய் நமக்கு இருப்பார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் காணலாம்.

1. பாதையில் வெளிச்சம் 

யாத்திராகமம் 13:21

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

நெகேமியா 9:12

நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

நெகேமியா 9:13

நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்களை தேவன் வழிநடத்தும் படியாக பகலிலே அவர்களுக்கு மேகஸ்தம்பம் ஆகவும், இருளிலே அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினிஸ்தம்பம் ஆகவும் அவர்களுக்கு முன் சென்றார். அதுபோல தேவன் இந்த இருள் நிறைந்த உலகத்திலே நீங்கள் நடக்க வேண்டிய வழியை காட்ட நம் பாதைகளிலே தேவன் வெளிச்சத்தை பிரகாசிக்க செய்து நமக்கு முன்பதாக செல்வார். தாவீது இப்படியாய் சொல்லுகிறார் அவருடைய வசனம் என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கிறது. அவர் வசனம் தான் நம் பாதைக்கு வெளிச்சம் எனவே நாம் தேவனுடைய வசனத்தை கைக்கொள்ளும் பொழுது நம் பாதையெங்கும் வெளிச்சம் பிரகாசிக்கும். 

2. நீதியின் வெளிச்சம் 

சங்கீதம் 37:6
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.

சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

தேவன் உங்கள் நீதியை வெளிச்சத்தை போலவும், உங்கள் நியாயத்தை பட்டப்பகலை போலவும் விளங்கப்பண்ணுவார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே கர்த்தரை நோக்கி அமர்ந்து அவரையே நம்பி கொண்டு இருக்க வேண்டும். துன்மார்க்கர்கள் பலத்து கொண்டே போகிறார்களே எனக்கு இன்னும் நீதி கிடைக்க வில்லையே என்று நாம் எரிச்சல் அடைய வேண்டாம் என்று தேவன் சொல்லுகிறார். சில நாட்கள் தான் தேவன் சீக்கிரத்திலே உங்களுக்கு நீதி செய்வார் அது வெளிச்சமாய் இருக்கும். சமாதானம் பண்ணி சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கிறவர்களுக்கு தேவன் ஏற்ற காலத்தில் நீதி செய்து பூமியை சுதந்தரித்து கொள்ள செய்வார். 

3. விடியற்கால வெளிச்சம் 

ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

ஏசாயா 58:10
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

தேவனுக்கு உகந்த நற்கிரியைகளை நாம் செய்யும் பொழுது அவர் நமக்கு விடியற்கால வெளிச்சத்தை போல இருப்பார். அப்பொழுது உங்கள் வெளிச்சம் விடியற்கால வெளிச்சத்தை போல எழும்பி பிரகாசிக்கும். உங்கள் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கபோகிறது. கர்த்தர் உங்களை நித்தமும் நடத்தி மகா வறட்சியான காலங்களில் கூட நித்தமும் உங்களை நடத்தி உங்கள் ஆத்துமாக்களை அவர் திருப்தியாக்குவார். நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பீர்கள்.  

4. நித்திய வெளிச்சம் 

ஏசாயா 60:18
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:19
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 59:1
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஏசாயா 59:9
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.

ஏசாயா 59:60
நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

நம்மை ஆசீர்வதிப்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. இரட்சிக்க கூடாதபடிக்கு அவருடைய கரங்கள் குறுகி போக வில்லை நம்முடைய மீறுதல்களே தேவனுக்கும், நமக்கும் முன்பதாக பிரிவினையை உண்டாக்குகிறது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு தேவனிடத்தில் திரும்பும் பொழுது கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாய் இருக்கிறார். நம்முடைய துக்கு நாட்கள் முடிந்து போகும். 

5. மகிமையின் அறிவாகிய வெளிச்சம் 

II கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவி கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

II பேதுரு 1:2
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.

தேவனை அறிவாகிய ஒளியை நாம் காணும்படியாக அவர் நம் இருதயங்களிலே பிரகாசித்தார். அவர் நமக்கு தந்து இருக்கிற அபிஷேகம், ஆசீர்வாதங்கள், அதிகாரங்கள், வரங்கள், தாலந்துகள் ஆகியவற்றை நம்முடைய சொந்த கண்களால் கண்டு நாம் அவற்றை சுதந்தரித்து அனுபவிக்கிறதற்கு தேவன் நம்முடைய இருதயங்களிலே பிரகாசித்தார். மகிமையின் அறிவாகிய ஒளியை நாம் காணும்படியாக அவர் நமக்குள்ளே பிரகாசித்தார். தேவனை அறிகிற அறிவுதான் நமக்கு இன்றைக்கு தேவை, தேவனை அறிகிற அறிவினால் நமக்கு கிருபையும், சமாதானமும் உண்டாகிறது. எனவே தேவனை அறிகிற அறிவிலே வளர்வோம் கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களிலே பிரகாசிப்பார். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment