Monday, January 4, 2021

இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date 03:01:2021


இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்


II இராஜாக்கள் 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

நீங்கள் செய்த விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டார். உங்கள் கண்ணீரை மனிதர்கள் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் கர்த்தர் பார்த்து இருக்கிறார். அவர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உன் பிள்ளைகளையும், உன் ஜாதிகளையும், குணமாக்குவேன் என்று கர்த்தர் ஆணையிடுகிறார். 

அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

நாம் மடங்கடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி, நாம் வியாகுல பட வேண்டும் என்று சொல்லி, நாம் உபத்திரவம் பட வேண்டும் என்று சொல்லி, நாம் மன சோர்வு அடையவேண்டும் என்று சொல்லி, இப்படியாக பிசாசின் வல்லமையில் அகப்பட்டிருக்கிற யாவரையும் குணமாக்குகிறவராக இயேசு சுற்றித்திரிந்தார். 

எரேமியா 17:14
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

1. வியாதியை குணமாக்குவார் - வசனத்தின் மூலமாக 

யோவான் 4:46
பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.

யோவான் 4:47
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.

யோவான் 4:48
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.

யோவான் 4:49
அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.

யோவான் 4:50
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

இயேசு தண்ணீரை திராட்சை ரசமாகிய கானா ஊருக்கு மறுபடியும் வருகிறார். அப்பொழுது இயேசு அங்கே வந்தார் என்று கேள்விப்பட்டு ஒருவர் மரண அவஸ்தையில் தவிக்கு தன் மகனை குணமாக்கும் படி இயேசுவிடம் வேண்டிக்கொண்டார். தன் மகன் மரிப்பதற்கு முன்னால் வாருங்கள் என்று வேண்டி கொண்டார், அதற்கு இயேசு நீ போகலாம் உன் மகன் பிழைத்திருப்பான் என்கிறார். இங்கே நாம் பார்க்கிறோம் இயேசு வசனத்தின் மூலமாக குணமாக்குகிறார். இன்றைக்கும் கர்த்தர் உங்களை குணமாக்க வல்லவராய் இருக்கிறார். இதோ நான் குணமாக்குவேன் என்ற வசனம் உங்களுக்கு நேராக கடந்து வருகிறது. நீங்கள் நிச்சயமாய் குணமாக்கப்படுவீர்கள். 

2. ஆத்துமாவை குணமாக்குவார் - ஜெபத்தின் மூலமாக 

சங்கீதம் 41:4
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

சங்கீதம் 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

சங்கீதம் 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

சங்கீதம் 6:4
திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

சங்கீதம் 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

நம்முடைய பாவத்திற்கு அளவுகோல் இருக்கிறது. மனுஷரின் பாவம் அது வானத்திற்கு எட்டும் பொழுது கர்த்தர் நம் அக்கிரமங்களை நினைத்து சிட்சிக்கிறார். இங்கே தாவீது சொல்கிறார் ஆண்டவரே உமக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று அறிக்கையிடுகிறார். நாம் பாவம் செய்வதினாலே நம் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது. இந்த ஆத்துமாவானது நம்முடைய மீறுதலினால் மட்டுமே காயப்படுத்தப்படுகிறது. ஆத்துமா கர்த்தரின் பார்வையில் விலையேறப்பெற்றது. ஒரு ஆத்துமாவும் அழிந்து போக கூடாது என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆத்துமா குணமாக்கப்படவேண்டும் எப்படி ஜெபத்தால் மட்டுமே நம் ஆத்துமாவை அழிவுக்கு விலக்கி விடுவிக்க முடியும்.

3. இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்குவார் - அபிஷேகத்தின் மூலமாக 

சங்கீதம் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

லூக்கா 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

நம்மில் அநேகருக்கு இருதயம் நொறுங்குண்டு காணப்படுகிறது. நம்மை சுற்றி இருக்கிற பலரின் கடுமையான சொற்களை நாம் கேட்கும் பொழுது நம்முடைய இருதயம் நொறுக்கப்படுகிறது, காயப்படுகிறது. ஏனென்றால் கபடு செய்கிறவர்களின் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியை போல் இருக்கிறது என்று வசனம் சொல்லுகிறது. நம்முடைய இருதயம் குணமாக்கப்படவேண்டும் என்றால் நமக்கு அபிஷேகம் தேவை. ஆவியானவர் நமக்குள் வரும் பொழுது அவர் நம் நொறுங்குண்ட இருதயத்தை குணமாக்கி நம் காயங்களை காட்டுகிறார். நம்மை ஆற்றி தேற்றுகிறார்.  

4. சீர்கேட்டை குணமாக்குவார் - மனம் திரும்புதலின் மூலமாக 

ஓசியா 14:4
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

ஓசியா 14:5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

ஓசியா 14:6
அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.

ஓசியா 14:7
அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.

எரேமியா 3:22
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.

நாம் சீர்கேட்டை குணப்படுத்த தேவன் வல்லவராய் இருக்கிறார். அவர் நம்மை மனப்பூர்வமாய் சிநேகிக்கிறார். நாம் உண்மையாய் தேவனிடத்தில் மனம் திரும்பும் பொழுது அவர் நம் சீர்கேடுகளை எல்லாம் குணமாக்கி நம்மை லீலி புஷ்பத்தை போல மலரச்செய்வார். லீபனோனை போல வேரூன்றி நிற்க செய்வார். 

5. பெரும்பாடை குணமாக்குவார் - விசுவாசத்தின் மூலமாக 

மாற்கு 5:25
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,

மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

மாற்கு 5:28
ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.

மாற்கு 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.

மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

பன்னிரெண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீ தனக்கு உண்டான எல்லாவற்றையும் செலவழித்தும் சற்றும் குணமடையாமல் இருந்தாள். அப்பொழுது இயேசுவை பற்றி கேள்விப்பட்டு அவர் வஸ்திரத்தின் ஓரத்தின் நுனியை தொட்டால் போதும் நான் சுகமாவேன் என்று சொல்லி செல்கிறார்கள். அவருடைய அந்த விசுவாசம் தான் வஸ்திரத்தை தொட்டவுடன் இயேசுவினிடம் இருந்து ஒரு வல்லமை புறப்படச்செய்து அவர்களை குணமாக்கியது. இன்றைக்கு அத்தகைய விசுவாசம் நம்மில் இருக்குமானால் தேவன் நம்முடைய வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட பாடுகளாக இருந்தாலும் சரி அதனை குணமாக்க வல்லவராய் இருக்கிறார். நீங்கள்  விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் காண்பீர்கள்.


For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment