Friday, January 1, 2021

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

 

கன்மலை கிறிஸ்துவ சபை 2021 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date 01.01.2021


சங்கீதம் 24:7

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 24:8

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.

சங்கீதம் 24:9

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 24:10

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.

இந்த ஆண்டு மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார் உங்களுக்குள்ளே, உங்கள் குடும்பத்துக்குள்ளே, உங்கள் பிள்ளைகளுக்குள்ளே, உங்கள் வேளையிலே, உங்கள் படிப்பிலே, எல்லாவற்றிலும் மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா அவர் சேனைகளின் கர்த்தாராமே. 

1. திறந்த வாசல் - கோணலானவைகளைச் செவ்வையாக்குவார் 

வெளி 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

ஏசாயா 45:1

கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

ஏசாயா 45:2

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

ஏசாயா 45:3

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

ஏசாயா 45:4

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.

இந்த வருடம் முழுவதும் தேவன் உங்களுக்காக திறந்த வாசலை வைத்து இருக்கிறார். உங்கள் கிரியைகளை அவர் அறிந்து இருக்கிறார். மகிமையின் ராஜா உங்கள் வாசல்களிலே உங்களுக்கு முன்பதாக அவர் போய் கோனாலானவைகளை எல்லாம் செவ்வையாக்குவார். கர்த்தரே இந்த வருடம் உங்கள் கைகளை பிடித்து கொண்டு ஒவ்வொரு வாசல்களிலும் உங்களை பிரவேசிக்க செய்யப்போகிறார். 

2. அலங்கார வாசல் - உன் கொடியேற்றி கைவிடப்படாத நகரம் என்று பெயர்பெறுவாய் 

அப்போஸ்தலர் 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

அப்போஸ்தலர் 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:

அப்போஸ்தலர் 3:10
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

அப்போஸ்தலர் 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

அப்போஸ்தலர் 3:3
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.

அப்போஸ்தலர் 3:4
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

அப்போஸ்தலர் 3:5
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

அப்போஸ்தலர் 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

இந்த ஆண்டு தேவன் உங்களை பிரமிக்கத்தக்கதாக செய்வார். இந்த வருடம் தேவன் உங்கள் வலது கையை பிடித்து தூக்கி விடுவார். உங்களை அலங்காரா வாசலில் பிரவேசிக்க செய்வார் நீங்கள் தேவனை துதித்து மகிமைப்படுத்துவீர்கள். உங்களை அற்பமாய் எண்ணியவர்களுக்கு முன்பாக அவர் உங்கள் தலையை உயர்த்துவார். 

ஏசாயா 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

ஏசாயா 62:9
அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

ஏசாயா 62:10
வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.

ஏசாயா 62:11
நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்.

ஏசாயா 62:12
அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.

உங்கள் கைகளின் பிரயாசத்தை இது நாள் வரைக்கும் சத்துருக்கள் சாப்பிட்டு இருக்கலாம் அனால் இந்த வருடம் தேவன் அதை அவர்களுக்கு ஆகாரமாக கொடுக்கமாட்டார். உங்கள் கைகளின் பிரயாசத்தை இந்த வருடம் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என்று கர்த்தர் தன்னுடைய வல்லமையுள்ள புயத்தின் மீது ஆணையிட்டு சொல்கிறார். அலங்கார வாசலில் நீங்கள்  பிரவேசிப்பீர்கள்,  நீங்கள் தோற்றுப்போன இடத்தில் உங்கள் கொடி ஏற்றப்படும் நீங்கள் கைவிடப்படாத நகரம் என்று பெயர் பெறுவீர்கள்.  

3. வானத்தில் வாசல் - தலையை உயர்த்துவார் 

ஆதியாகமம் 28:16
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

ஆதியாகமம் 28:17
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

ஆதியாகமம் 28:12
அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

ஆதியாகமம் 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 

ஆதியாகமம் 28:14
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

ஆதியாகமம் 28:15
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

ஆதியாகமம் 28:7
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,

சங்கீதம் 24:5
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

சங்கீதம் 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி.

சங்கீதம் 24:7
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

இங்கே யாக்கோபு சொப்பனம் காண்கிறார் அதில் தேவன் நீ படுத்து இருக்கும் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்றும் உன் சந்ததி பூமியின் தூளைபோல இருக்கும் என்றும் நீ நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய் என்றும் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றும் சொல்லுகிறார். என்னதான் யாக்கோபு எத்தனாய் இருந்து இருந்தாலும் தன் தாய், தகப்பனுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் சொன்ன தேசத்திற்கு சென்றதால் தேவன் யாக்கோபுக்கு சொப்பனத்தில் தரிசனமாகி ஆசீர்வதிக்கிறார். 


For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment