Monday, January 11, 2021

தேவன் செய்ய நினைப்பது தடை வராது

 

Kanmalai Christian Church

Date: 10.01.2021

Word of God : Pastor Jachin Selvaraj 

(Apostolic Christian Assembly, Purasaiwalkam)


தேவன் செய்ய நினைப்பது தடை வராது 


யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

யோபு 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

யோபுவினுடைய வாழ்க்கையை நாம் பொழுது அவர் ஒரு நீதிமான், அவர் ஒரு உத்தமன், யோபு ஆண்டவரிடம் இருந்தே ஒரு நற்சாட்சி பெற்றவர். யோபு ஒரு ஐஸ்வரியவான். பிசாசானவன் அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு சின்னாபின்னம் ஆகவேண்டும் என்று பார்த்தான். ஆனால் யோபோ ஆண்டவருக்குள் நிலைத்து நின்று  அவரை சிறிதும் மறுதலியாமல் இருந்தார்.  நம் தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர். அவர் நம் வாழ்க்கையில் செய்ய நினைத்தது ஒரு போதும் தடை வரவே வாராது. ஆண்டவர் எல்லா தடைகளையும் ஜெயமாய் மாற்றி தருவார். தேவன் தம்முடைய சித்தத்தின் படியெல்லாம் நமக்கு நிறைவேற்றுவார். இந்த ஆண்டிலே நமக்கு குறித்து வைத்து இருக்கிற நன்மையான காரியங்கள் எல்லாவற்றையும் ஜெயமாய் நிறைவேற்றுவார். 

தேவன் நமக்கு செய்ய நினைப்பது தடை வராது, தேவன் நம் குடும்பத்துக்கு என்று செய்ய நினைத்து தடை வராது, ஆண்டவர் நம் ஊழியத்திலே செய்ய நினைப்பது தடை வராது, தடை வரும் படி அநேகர் எழும்பலாம் ஆனால் ஆண்டவர் நம் வாழ்க்கையில் நமக்கு என்று குறித்து வைத்ததை நிச்சயமாகவே நிறைவேற்றி முடிப்பார். 

ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

II நாளாகமம் 25:8
போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.

1. தேவன் குறித்த திட்டம் 

யாத்திராகமம் 3:2
அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

யாத்திராகமம் 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் படுகிற பாடுகளை பார்க்கிறார். அவர்கள் இடுகின்ற கூக்குரலை கேட்டார். பார்வோன் மன்னன் அவர்களை மிகவுமாய் அவர்களை கொடுமைப்படுத்தினான். அவனிடம் இருந்து தம்முடைய ஜனத்தை மீட்க தேவன் மோசேயை தெரிந்துகொண்டார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை தேசத்தை அளிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை தேவன் வைத்து இருந்தார். அதுபோல நம் வாழ்க்கையிலும் தேவன் ஒரு திட்டத்தை வைத்து இருக்கிறார். உங்கள் குடும்பத்தை குறித்தும் ஆண்டவர் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். உங்களுக்கு நன்மையான காரியம் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆண்டவர் ஒரு திட்டத்தை வைத்து இருக்கிறார். ஆகவே சோர்ந்து போக வேண்டாம்.

2. தேவன் குறித்த தம்முடைய வல்லமை 

யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்;

யாத்திராகமம் 12:7
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

யாத்திராகமம் 12:11
அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

நம் தேவன் சகலத்தையும்  செய்ய வல்லவர். நாம் அவரை நோக்கி  ஜெபிக்கும் பொழுது நிச்சயமாய் தேவன் தம்முடைய வல்லமையை நம் வாழ்க்கையில் விளங்கப்பண்ணுவார். அவர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.  தேவன் தம்முடைய ஜனத்தை நான் கானான் தேசத்திலே கொண்டு பொய் சேர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர்கள் வழியிலே சில பாடுகளை சந்திக்க நேர்ந்தது. செங்கடல், யோர்தான் நதி, எரிகோ கோட்டை தடைகள் எலும்பினாலும் தேவன் அந்ததந்த நேரத்திலே தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார். அதுபோல தேவன் உங்களுக்கு என்று குறித்த காரியத்திலே தடைகள் பல வந்தாலும் நீங்கள் ஜெபிக்கும் பொழுது தேவன் தம் வல்லமையை விளங்கப்பண்ணி அந்த தடைகள் எல்லாவற்றையும் அகற்றி உங்களுக்கு ஜெயத்தை கொடுப்பார். 

3. தேவன் குறித்ததை நிறைவேற்றுவார் 

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

மத்தேயு 14:14
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.

மத்தேயு 14:15
சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

மத்தேயு 14:16
இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.

மத்தேயு 14:17
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

மத்தேயு 14:18
அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

மத்தேயு 14:20
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

தேவன் நமக்கு குறித்ததை நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் செய்ய நினைத்து தடைபடாது. நீங்கள் எதெற்காக எல்லாம் ஆண்டவரிடம் நீண்ட காலமாக ஜெபித்து கொண்டு இருக்கிறீர்களோ அவற்றை நிச்சயமாக ஏற்ற நேரத்தில் நிறைவேற்றி முடிப்பார்.  

4. தேவன் நமக்கு வைத்து இருக்கும் செயல்பாடுகள்

யோபு 42:2
நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

I சாமுவேல் 10:2
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். 

I சாமுவேல் 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

இஸ்ரவேலரை பெலிஸ்தரை நீங்கலாக்கி ரட்சிக்க தேவன் சவுலை தெறிந்து கொண்டார். பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த சவுலை ராஜாவாக தெரிந்து கொள்கிறார். மனுஷர் நம்மை எவ்வளவு அற்பமாய் நினைத்தாலும் சரி, தேவன் நமக்கு என்று ஒரு செயல் திட்டத்தை வைத்து இருக்கிறார். ஏற்ற வேலை வரும் பொழுது நிச்சயமாய் நம்மை அவர் உயர்த்துவார். 

5. தேவன் வைத்து இருக்கும் பிரியம்

எண்ணாகமம் 14:8
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

யாத்திராகமம் 16:35
இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

நம் மீது ஆண்டவர் வைத்து இருக்கிறதான பிரியம் பெரியது, மனுஷன் இன்றைக்கு அன்பாய் இருப்பான் அனால் இன்னொரு நாளில் அவன் சுபாவம் மாறலாம் அனால் ஆண்டவரின் அன்பு என்றைக்கும் மாறாதது. ஆண்டவர் நம் மேல் பிரியமாய் இருப்பதினால் நம் வாழிவிலே அற்புதம், அதிசயங்களை நிறைவேற்றி கொடுப்பார். நாம் செய்ய வேண்டியது நம்மிடையே என்ன குறைகள் இருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்து தேவனிடத்தில் கிருபை பெற்று அதனை சரி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம் பட்சமாய் இறங்கி நமக்காக நிறைவேற்ற வேண்டிய காரியங்களை நிறைவேற்றி கொடுப்பார். 


For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment