Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 17.01.2021
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு;
கர்த்தரின் புயமே என்று சொன்னால் ஓவ்வொருவரும் கர்த்தருக்காக சிருஷ்டிக்கப்பட்டு கர்த்தருடைய வேலையை செய்வதையும், கர்த்தருடைய சித்தத்தை செய்வதையும், கர்த்தருக்காகவே வாழ்ந்து அவருடைய சித்தத்துக்கு உட்பட்டு அவருடைய காரியங்களை இன்னதென்று கருத்தாய் விசாரித்து உலகத்திலே நடக்கிறவர்கள் பெயர் தான் கர்த்தரின் புயம்.
1. ஓங்கிய புயம் - சுத்திகரித்து விடுவிப்பார்
உபாகமம் 9:29
நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.
யாத்திராகமம் 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.
யாத்திராகமம் 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
யாத்திராகமம் 12:33
அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
நாம் அனைவரும் பரலோக ராஜ்ஜியத்திற்கு சுதந்திரவாளிகளாக இருக்கிறோம். உங்களை அந்நிய நுகத்தில் இருந்து புறப்படப்பண்ணியது இந்த ஓங்கிய புயமே. உங்களை கர்த்தருக்காக ஒரு கூட்ட ஜனத்தை புறப்பட செய்ய தேவன் ஓங்கிய புயமாய் இருந்து உங்களில் செயலாற்றுவார். இந்த ஓங்கிய புயம் நம்மிலே காணப்பட வேண்டும் என்றால் நமக்கு மிகவும் தேவையானது சுத்திகரிப்புள்ள ஒரு ஜீவியம். நம்மை நாமே வஞ்சிக்காதபடிக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்விலே சுத்திகரிப்பு செய்யும் பொழுது கர்த்தர் விடுதலையை கொடுக்கிறார். உங்களை கொண்டு லட்சங்களை ரட்சித்து வழிநடத்த கர்த்தர் கிருபை தருவார்.
2. நித்திய புயம் - நம்மை அபிஷேகித்து சத்துருவை அழிப்பார்
உபாகமம் 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
உபாகமம் 33:28
இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 45:4
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை தேவன் நித்திய புயமாக மாற்றுகிறார். இந்த அபிஷேகம் உங்களுக்குள் இருக்கும் பொழுது அவர் முன்னின்று சத்துருக்களை அழிப்பார். உங்களுக்குள் இருக்கிற அபிஷேகத்தை நீங்கள் அனல்மூட்டி எழுப்பி கொண்டே இருக்க வேண்டும்.
3. மகிமையின் புயம் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்துவார்
ஏசாயா 63:12
அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,
லூக்கா 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
லூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
லூக்கா 2:27
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
லூக்கா 2:28
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
லூக்கா 2:29
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
மகிமையான புயம் நம் வாழ்விலே பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் மூலமாக அநேக மகிமையான காரியங்களை செய்யும். நீங்களே இந்த மகிமையின் புயம். பரிசுத்த ஆவியானவரை உங்களை விட்டு எடுபடாமல் எப்பொழுதும் நீங்கள் தக்க வைத்து கொள்ள வேண்டும். மகிமையின் புயமாய் நீங்கள் செயல்படும் பொழுது வாழ்க்கையில் எந்த வித தடைகள் வந்தாலும் எல்லாவற்றையும் கடந்து போக தேவன் உங்களுக்கு கிருபை செய்வார்.
4. வல்லமையின் புயம் - வல்லமை தந்து ஆசீர்வதிப்பார்
ஏசாயா 62:7
அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
ஏசாயா 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
அப்போஸ்தலர் 6:6
அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
மத்தேயு 15:34
அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
மத்தேயு 15:35
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
மத்தேயு 15:36
அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
பந்தி விசாரிப்பவராக இருந்த ஸ்தேவானை ஆண்டவர் வல்லமையுள்ள புயமாக மாற்றினார். அப்பொழுது ஸ்தேவான் விசுவாசத்திலும், வல்லமையிலும் நிறைந்தவராய் ஜனங்களுக்குள்ளே அநேக அற்புத, அடையாளங்களை செய்தார் அதுபோல தேவன் உங்களை வல்லமையுள்ள புயமாக மாற்றும் பொழுது நீங்கள் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வீர்கள்.
5. பரிசுத்த புயம் - துதிக்கும் பொழுது கட்டுகளை அறுத்து இரட்சிப்பார்
சங்கீதம் 98:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
சங்கீதம் 98:2
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
சங்கீதம் 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
சங்கீதம் 98:4
பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
சங்கீதம் 98:5
சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
ஒரு சில சமயங்களில் தேவன் உங்களை பரிசுத்த புயமாக மாற்றுவார். அந்த பரிசுத்த புயமானது இரட்சிப்பை உண்டாக்கும் . இந்த இரட்சிப்பு உண்டாக நமக்குள்ளே துதி இருக்க வேண்டும். பவுலும், சீலாவும் ஜெபம் செய்து துதித்து கொண்டு இருக்கும் பொழுது அவர்கள் கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு, சிறைச்சாலை அதிர்ந்து இரும்பு கதவுகள் திரவுண்டது. கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடும் பொழுது, கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் பொழுது நாம் பரிசுத்த புயாமாய் மாற்றப்படுகிறோம்
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment