Kanmalai Christian Church
Word of God: Brother Kamal
Date 24.01.2021
சங்கீதம் 119:17
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
நமது தேவன் நமக்கு அநுகூலமாய் இருக்கிறவர். அவர் எப்படிப்பட்ட அநுகூலமாய் இருக்கிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் இங்கே நாம் காணலாம்.
1. அநுகூலமான துணை
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
II நாளாகமம் 32:1
இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
II நாளாகமம் 32:8
அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
II நாளாகமம் 32:15
அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
II நாளாகமம் 32:21
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
II நாளாகமம் 32:22
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
நமது தேவன் ஆபத்து காலத்திலே நமக்கு பெலனும், அடைக்கலமும் அநுகூலமான் துணையாய் இருக்கிறார். இங்கே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவுக்கு எதிராக பாளயமிறங்கினான். சனகெரிப் யுத்தம் செய்யும் நோக்கம் கொண்டு வருகிறான் என்பதை எசேக்கியா அறிந்து தன் ஜனங்களை கூட்டி அவர்களை தைரியப்படுத்துகிறார். சனகெரிப் ராஜாவோடு இருப்பதோ மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று தனது ஜனங்களை திடப்படுத்துகிறார். இந்த வார்த்தையின் மீது ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள். நம்முடைய ஆபத்து நேரங்களிலும் தேவன் நமக்கு அநுகூலமான துணையாய் இருக்கிறார் என்பதை மறக்க கூடாது. நம் ஆபத்தில் இருந்து தேவன் நம்மை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் அவர் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் அப்பொழுது அவர் நமக்கு அநுகூலமான துணையாய் இருப்பார்.
2. அநுகூலமான இடம்
II இராஜாக்கள் 18:7
ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
ஆதியாகமம் 26:1
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆதியாகமம் 26:2
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
ஆதியாகமம் 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
ஆதியாகமம் 26:22
பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
கர்த்தர் நம்மோடு இருப்பதனால் நம் இருக்கிற இடத்தை அவர் நமக்கு ஏற்ற அநுகூலமான மாற்றுகிறார். இங்கே ஈசாக்குக்கு தேவன் நான் சொன்ன தேசத்தில் போய் வாசம் பண்ணு அப்பொழுது நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்கிறார். ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைக்கும் பொழுது தேவன் நூறு மடங்கு பலனை காணும்படியாக செய்தார். ஈசாக்கின் மீது பொறாமை கொண்டு வாக்குவாதம் பண்ணி வெளியேற்றினாலும் ஈசாக்கு இருந்த இடம் அவருக்கு அநுகூலமாக இருக்கும் படியாக அதனை கர்த்தர் மாற்றினார். அதுபோல நீங்கள் இருக்கும் இடத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்து உங்களுக்கு அநுகூலமாய் இருக்கும்படியாய் மாற்றுவார் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தன தேவனுக்கு கீழ்ப்படிவது ஆகும்.
3. அநுகூலமான அடையாளம்
சங்கீதம் 86:17
கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
யாத்திராகமம் 8:20
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
யாத்திராகமம் 8:21
என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
யாத்திராகமம் 8:22
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,
யாத்திராகமம் 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத்திராகமம் 8:24
அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்துதேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
இங்கே தாவீது சொல்கிறார் நீர் எனக்கு துணை செய்து என்னை தேற்றுகிறதை என் பகைவர்கள் கண்டு வெட்கப்படும்படியான ஒரு அநுகூலமான அடையாளத்தை காண்பித்தருளும் என்று வேண்டுகிறார். மோசேயிடம் தேவன் பார்வோனிடம் சென்று என் ஜனங்களை ஆராதனை செய்ய அனுப்பிவிடு அப்படி அனுப்பவில்லை என்றால் உன் தேசம் வண்டுகளால் நிறைந்திருக்கும். என் ஜனத்திற்கும், உன் ஜனத்திற்கும் வித்தியாசத்தை காட்டுவேன் அதுவே அடையாளமாக இருக்கும் என்கிறார். தேவனை ஆராதனை செய்யும்படியாக தான் அவர் நம்மை தெரிந்து கொண்டார் அதை தடுக்க யார் வந்தாலும் சரி தேவன் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் காணும்படியான அனுகூலமான அடையாளத்தை கட்டளையிடுவார். நம் சத்துருக்கள் வெட்கப்பட்டு போவார்கள்.
4. அநுகூலமான பிரயாணம்
நியாயாதிபதிகள் 18:5
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
நியாயாதிபதிகள் 18:6
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
ஆதியாகமம் 24:12
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
ஆதியாகமம் 24:13
இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.
ஆதியாகமம் 24:13
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
ஆதியாகமம் 24:40
அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
ஆபிரகாம் தன்னுடைய மகனான ஈசாக்குக்கு பெண்கொள்ள எலியேசரை அனுப்பி வைக்கிறார். எலியேசர் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தை கேட்கிறார் இதோ தண்ணீர் துரவண்டையில் நிற்கிறேன் அப்பொழுது எனக்கு மட்டும் அல்லாமல் என் ஒட்டகத்தும் யார் தண்ணீர் வார்க்கிறாரோ அவளே நீர் ஈசாக்குக்காக நியமித்து இருக்கிறீர் என்பதை நான் அறியும்படிக்கு செய்யும் என்று வேண்டுகிறார். அதே போல ரெபெக்காள் வந்து எலியேசருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள். ஆபிரகாம் எலியேசரிடம் இப்படி தான் சொல்ல அனுப்புகிறார். நான் வழிபடுகிற கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று அதுபோல நாம் மேற்கொள்ளும் பிரியாணங்களையும் தேவன் அநுகூலமாய் வாய்க்கப்பண்ணுவார். அவர் தம் தூதனை அனுப்பி நம் பிரயாணங்களை ஜெயமாய் முடிக்க கிருபை செய்வார்.
5. அநுகூலமான கதவு
I கொரிந்தியர் 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
சங்கீதம் 24:7
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
கர்த்தர் நமக்கு பெரிது அநுகூலமான கதவை திறக்கப்போகிறார். அதில் மகிமையின் ராஜாவாகிய நம் தேவனே உட்பரேவசித்து கோணலான பாதைகளை எல்லாம் செவ்வையாக்கி அந்த அநுகூலமான கதவின் வழியாக நம்மை பிரவேசிக்க செ
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment