Christian Service 25.12.2020
Word of God: Brother Micheal
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்
எண்ணாகமம் 24:12
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
எண்ணாகமம் 24:15
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
எண்ணாகமம் 24:16
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
எண்ணாகமம் 24:17
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
ஏசாயா 14:12
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
ஏசாயா 14:13
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
ஏசாயா 14:14
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஏசாயா 14:15
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
விடிவெள்ளியின் நட்சத்திரம் விழுந்து போன இடத்திலே யாக்கோபில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும். தன் ஸ்தானத்தில் விழுந்தவனை கர்த்தர் மீண்டும் தள்ளி ஏற்படுத்துகிறவர். ராஜாக்களை தள்ளி ஆண்டவர் உன்னை ஏற்படுத்துவார். தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை கர்த்தர் ஏற்படுத்தினார்.
இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குள் நட்சத்திரமாக உதிப்பார். எப்படிப்பட்ட நட்சத்திரமாக நமக்கு உதிப்பார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே காணலாம்.
1. வழிநடத்தும் நட்சத்திரம்
மத்தேயு 2:2
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
மத்தேயு 2:7
அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
மத்தேயு 2:8
நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
மத்தேயு 2:9
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
மத்தேயு 2:10
அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
சாஸ்திரிகள் ஏரோது ராஜாவின் இடத்தில் வந்து யூதருக்கு ராஜாவாய் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டார்கள். கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்று சொன்னார்கள் அப்பொழுது ஏரோது அவர்களை இரகசியமாய் அழைத்து நீங்கள் அந்த பிள்ளை குறித்து விசாரியுங்கள் அதை என்னிடமும் வந்து சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தார். அந்த நட்சத்திரம் பிள்ளை இருக்கும் ஸ்தலம் மேல் நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது அவர்கள் அதை கண்டு மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
லூக்கா 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:11
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
லூக்கா 2:15
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
மீகா 2:12
யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.
மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
இங்கே சாஸ்திரிகளோ தன்னுடைய ஞானத்தினாலே அரண்மனையில் போய் தேடினார்கள். ஆனால் மேய்ப்பர்கள் ஆண்டவர் தனக்கு தெளிவாய் சொன்ன காரியத்தை அவர்கள் அப்படியே கீழ்ப்படிந்து பெத்லேகேம் போய் பணிந்து கொண்டார்கள். அன்றைக்கு மேய்ப்பர்களை நட்சத்திரம் வழிநடத்தியது இன்றைக்கு நாம் யாவரும் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறோம். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துதல் தான் நம்மை பரம எருசலேமுக்கு கொண்டு சேர்க்கும்.
2. பிரகாசிக்கிற நட்சத்திரம்
வெளி 22:16
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 1:4
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:5
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:6
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
யோவான் 1:7
அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
யோவான் 1:8
அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
யோவான் 1:9
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 12:46
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
இயேசுவே அந்த பிரகாசிக்கிற விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார். உலகத்தில் இருக்கிற எந்த மனுஷரையும் பிரகாசிக்கிற ஒளி.
ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
விடிவெள்ளி நட்சத்திரமாய் இருந்த கேட்டின் மகன் விழுந்து போனான். கர்த்தர் சொல்லுகிறார் நானே அந்த நட்சத்திரமாக இருக்கிறேன். நான் உங்களை பிரகாசிக்க பண்ணுவேன் யாரெல்லாம் உன்னை ஈனப்படுத்தி, அற்பமாய் எண்ணினார்களோ அவர்கள் மத்தியில் உன்னை பிரகாசிக்கப்பண்ணுவேன்.
3. அடையாளமான நட்சத்திரம்
லூக்கா 2:11
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
லூக்கா 2:13
அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
லூக்கா 2:14
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
லூக்கா 2:15
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
லூக்கா 2:16
தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
ஏசாயா 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
வெளி 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
சாஸ்திரிகளோ முதலில் நட்சத்திரத்தை மட்டுமே பார்த்து சந்தோஷம் அடைந்தார்கள் ஆனால் மேய்ப்பர்களோ தேவன் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த அடையாளத்தை காணச்சென்றார்கள் ஏன் பிள்ளையை துணிகளில் சுற்றி இருந்தது என்றால் நமக்கு ஒரு வஸ்திரம் இருக்கிறது. நமக்கு அந்த சுத்தமும், பிரகாசமும் ஆன மெல்லிய வஸ்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பரிசுத்தவான்களின் நீதியாய் இருக்கிறது. அந்த வஸ்திரத்தை காத்து கொள்ளுங்கள்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment