Word of God: Brother Micheal
Date: 27.12.2020
லூக்கா 22:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
விசுவாசம் இல்லாமல் தேவனை தரிசிப்பது கூடாத காரியம். விசுவாசம் இல்லாமல் ஒன்றையும் நாம் பெற்று கொள்ள முடியாது. விசுவாசம் என்பது ஒரு வரம். கண்டு விசுவாசிக்கிறவர்களை விட காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான். நாம் ஜெபிக்க மறந்தாலும் ஆண்டவர் எப்பொழுதும் நமக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறார். நம் விசுவாசம் ஒளிந்து போகாமல் இருக்க நமக்காக அவர் வேண்டி கொள்கிறார்.
அவர் நமக்காக என்ன செய்வார் ?
1. உனக்காக வழக்காடி பழிக்கு பழி வாங்குவார்
எரேமியா 51:33
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
நம் தேவன் நம்மை மீட்பதற்காக நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவர் நமக்காக வழக்காடி அவர் அண்டையிலே சேர்த்து கொள்கிறார். எந்த மனுஷனும் கெட்டு போகாமல் நித்திய ஜீவன் அடைவதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது.
2. உனக்காக தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார்
சங்கீதம் 91:11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
மத்தேயு 4:9
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:10
அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
தேவன் உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வழிகளிலும் காக்கும்படியாக தம்முடைய தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார்.
3. உனக்காக அவர் ராஜாவினிடத்தில் பேசுவார்
I இராஜாக்கள் 2:18
அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
சங்கீதம் 24:7
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
சங்கீதம் 24:9
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங்கீதம் 24:10
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.
I யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
இந்த உலகத்திலே நமக்கு நன்மையுண்டாகும் படி பேசுவதற்கு ஒருவரும் கிடையாது. ஆனால் நம் தேவனாகிய கர்த்தரோ நமக்காக பரலோகத்திலே பரிந்து பேசி கொண்டு இருக்கிறார். எப்பொழுது அவர் பேசுவார் என்றால் நமக்கு ஆண்டவருக்கு உகந்த கிரியைகளை பூமியில் செய்யும் பொழுது எல்லாம் அவர் நமக்காக ராஜாவினிடத்தில் பேசுகிறார். யாரின் இந்த ராஜா அவர் மகிமையின் ராஜா. நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார்.
4. உனக்காக வேண்டுதல் செய்கிறார்
ஆதியாகமம் 20:7
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
இன்றைக்கு நாம் பிழைத்திருக்கும்படி நமக்காக அவர் வேண்டுதல் செய்கிறார். இந்த கொடிய கொள்ளை நோயின் மத்தியிலும் தேவன் இன்றைக்கு நம்மை பிழைத்திருக்கும் படி செய்திருக்கிறாரே. மேலும் நமக்கு ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சோடு உனக்காக வேண்டுதல் செய்கிறார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment