Kanmalai Christian Church
Word of God: Brother Kamal
Date 20.12.2020
நீதிமொழிகள் 13:12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
எந்த காரியத்திற்காக நெடுங்காலமாய் நீங்கள் காத்து கொண்டு இருந்தீர்களோ. இன்றைக்கு அந்த காரியத்திலே ஒரு முடிவை ஒரு அற்புதத்தை செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எந்த காரியத்துக்காக நாம் தேவனுடைய சமூகத்திலே காத்திருந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே பார்க்கலாம்.
1. மாறுதலுக்காக காத்திருத்தல்
யோபு 14:14
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
எனக்கு வாழ்க்கையில் எப்பொழுது ஒரு மாறுதல் வரும் என்று காத்து இருக்கிறீர்களா ? தேவன் நிச்சயம் உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிக்கப்போகிறார். உங்கள் குடும்பத்தலைவரின் மாற்றத்திற்காக நீங்கள் காத்து கொண்டு இருக்கலாம் அல்லது தொழிலிலே மாற்றத்திற்காக காத்து கொண்டு இருக்கலாம் அல்லது இடம் மாற்றத்திற்காக காத்து இருக்கலாம். நீங்கள் காத்திருந்து, காத்திருந்து உங்கள் இருதயம் இளைத்து சோர்ந்து போய் இருக்கிறது. தேவன் அதை பார்க்கிறார் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற காரியத்தை தேவன் பொறுப்பெடுத்து அதில் ஒரு அற்புதத்தை செய்யப்போகிறார்.
2. நன்மைக்காக காத்திருத்தல்
யோபு 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
எதோ ஒரு நன்மைக்காக நீங்கள் நெடுங்காலமாய் காத்து கொண்டு இருக்கலாம். படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலைக்காக காத்து இருக்கலாம் அல்லது ஒரு நல்ல சொந்த வீட்டிற்காக நெடுங்காலமாய் காத்து இருக்கலாம் பிள்ளைகள் திருமணத்திற்காக காத்திருந்து சோர்ந்து போய் சோர்ந்து போய் இருக்கலாம்
எந்த நன்மைக்காக நீங்கள் நெடுங்காலமாய் காத்து கொண்டு இருக்கிறீர்களோ அதை வருகிற நாட்களில் நம்முடைய தேவன் செய்து முடிக்க போகிறார். நம்முடைய ஆண்டவர் நன்மை செய்கிறவர் அப்போஸ்தலர் 10:38 இப்படியாய் சொல்கிறது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார் என்று ஆகவே கவலை படாதிருங்கள் இன்றுமுதல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்து இருக்கிற காரியங்கள் நிறைவேறுவதை காணப்போகிறீர்கள்.நிச்சயமாகவே நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் சோர்ந்து போகவேண்டாம் கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வார்.
3. நீதிக்காக காத்திருத்தல்
கலாத்தியர் 5:5
நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
உங்களுக்கு நீதியாக கிடைக்க வேண்டிய காரியத்திற்காக நீங்கள் நெடுங்காலமாய் காத்து கொண்டு இருக்கலாம். இந்த உலகம் நீதியானது அல்ல அநீதி நிறைந்தது ஆனாலும் உங்களுக்கு நீதி நிச்சயமாய் கிடைக்கும் ஏனென்றால் நீங்களும் நானும் ஆராதிக்கிற தேவன் நீதியுள்ள நியாதிபதி, அவர் மகா நீதிபரர், அவர் உங்கள் நீதிக்காக யுத்தம் செய்வார் அவர் உங்களுக்காக வழக்காடுவார் அவர் நிச்சயம் உங்களுக்கு நீதி செய்வார் சோர்ந்துபோக வேண்டாம்.
4. வாக்குத்தத்தத்திற்காக காத்திருத்தல்
எபிரெயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
எபிரெயர் 6:15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
நம் தேவன் அநேக வாக்குத்தத்தங்களை உங்களுக்கு சொல்லி இருக்கலாம். உன்னை நான் சுகமாக்குவேன், உன்னை நான் ஆசீர்வதிப்பேன், உன் கடந்தபிரச்சினைகளை மாற்றுவேன், எனக்கு ஆத்தும ஆதாயம் செய்வாய், எனக்காக ஊழியம் செய்வாய், உன் பிள்ளைகள் இப்படி எல்லாம் ஆசீர்வாதமாய் இருப்பார்கள் என்றெல்லாம் கர்த்தர் வாக்கு பண்ணி இருக்கலாம்.
அதனை பெற்றுக்கொள்ள வேண்டு நீங்கள் நெடுங்காலமாய் காத்து கொண்டு கொண்டு இருக்கலாம். நிச்சயமாகவே உங்களுக்கு வாக்கு பண்ணினது நடக்கும். கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் அனைத்தும் சீக்கிரமாய் நிறைவேறும் வேதம் சொல்லுகிறது ஆபிரகாம் பொறுமையாக காத்து இருந்து தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை பெற்றுக்கொண்டார் அது போல நீங்களும் பொறுமையாக காத்து இருந்து தேவனுடைய வாக்குத்தத்ததை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
5. நியாயத்திற்காக காத்திருத்தல்
சங்கீதம் 119:43
சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
எனக்கு எப்பொழுது நியாயம் வரும் என்று நீங்கள் நெடுங்காலமாய் காத்திருந்து சோர்ந்து போய் இருக்கலாம். உங்களை ஏமாற்றியவர்கள், உங்களை வஞ்சித்தவர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பினவர்கள் யாராக இருந்தாலும் சரி தேவன் அவர்களை நியாயம் விசாரிப்பார். நீங்கள் கலங்க வேண்டாம் கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு நியாயம் செய்ய எழுந்தருளுவார் .
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment