Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 06.12.2020
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்
யோவான் 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நாம் அவரை நோக்கி ஏறெடுத்து பார்க்கும் பொழுது அவர் செய்கிறதான ஐந்து காரியங்களை நாம் இங்கே பார்ப்போம்.
1. அன்பின் கயிற்றினால் நம்மை சேர்த்து கொள்வார்
ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்துதேசத்தைப்போலவும் இருந்தது.
லூக்கா 18:10
ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
லூக்கா 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
நாம் நம்முடைய கண்களை ஆண்டவருக்கு நேராக ஏறெடுத்து பார்த்து அவரை பணிந்து நம்முடைய பாவங்களை விட்டு மனம் திரும்பும் பொழுது அவர் நமக்கு கிருபை அளித்து நம்மை பாவத்தில் இருந்து மீட்டு நமக்கு உயர்ந்த வஸ்திரத்தை கொடுத்து தன்னிடத்தில் சேர்த்து கொள்வார்.
2. தேவைகளை பூர்த்தி செய்து திருப்தி அடையச்செய்வார்
லூக்கா 9:12
சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
லூக்கா 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
லூக்கா 9:14
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
லூக்கா 9:15
அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
லூக்கா 9:16
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
லூக்கா 9:17
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
இயேசு பிதாவை நோக்கி பார்த்து ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஆசீர்வதித்து எல்லோரும் திருப்தியாக சாப்பிட வைத்து பனிரெண்டு கூடைகள் மீதம் எடுக்க வைத்தார். இன்றைக்கு நாம் ஒரு தேவை என்று வரும் பொழுது நாம் யாரை முதலில் தேடுகிறோம் ? எனவே தேவைகள் எதுவாக இருந்தாலும் சரி நாம் கர்த்தரை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து பார்க்கும் பொழுது அவர் நம் தேவைகளை சந்தித்து நம்மை திருப்தி அடையச்செய்வார்.
3. ஐந்து மடங்கு பங்கை கொடுத்து ஆசீர்வதிப்பார்
ஆதியாகமம் 43:29
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
ஆதியாகமம் 43:30
யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
ஆதியாகமம் 43:31
பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.
ஆதியாகமம் 43:32
எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.
ஆதியாகமம் 43:33
அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
ஆதியாகமம் 43:34
அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.
யோசேப்பு இயேசுவுக்கு அடையாளம் தாய் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம் நாம் எல்லோரும் இந்த கடைசி காலத்தில் இளைய சகோதர, சகோதிரிகள். இயேசு கிறிஸ்து முதற் கொண்டு நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். யாருக்கு என்ன தேவை என்பது குமாரனுக்கு தெரியும்.
அங்கு இருந்து எல்லாருடைய பங்கை பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது. அதுபோல உங்கள் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக கர்த்தர் தருவார் ஏனென்றால் பரிசுத்த ஆவியானவராகிய ஒரே தாயின் வயிற்றில் பிறந்ததால் யோசேப்பை போல குமரானாகிய இயேசு கிறிஸ்து நமக்கு இந்த மாதம் தருவார். இயேசுவோடு கூட உடன்படிக்கை செய்து, ஞானஸ்நானம் எடுத்து அவருக்காக கீழ்ப்படிந்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும், வரங்களையும் பெற்று அவரோடு கூட இந்நாள் வரையிலும் நடந்து கொண்டு வருகிற உங்களுக்கு யோசேப்பு பென்யமீனுக்கு அளித்தது போல ஐந்து மடங்கு பங்கு அதிகாகமாக தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
4. ஒத்தாசை அனுப்பி இரட்சிப்பார்
சங்கீதம் 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 123:2
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
II இராஜாக்கள் 14:26
இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.
II இராஜாக்கள் 14:27
இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
பரலோகத்தில் வாசமாய் இருக்கிற நம் எஜமானனாகிய தேவனாகிய கர்த்தரை நோக்கியே நம் கண்கள் ஏறெடுத்து பார்க்கவேண்டும். அவர் நமக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் அவரையே நோக்கி பார்க்க வேண்டும். வானத்தையும் பூமியும் படைத்த கர்த்தரிடத்தில் இருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். யாரை கொண்டு வேனாலும் இஸ்ரவேலை இரட்சிக்க அவர் வல்லவராய் இருக்கிறார் ஆகையால் இந்த மாதம் உங்களுக்கு அவர் ஒரு ஒத்தாசை அனுப்பி இரட்சிப்பார்.
5. கிருபை அளித்து ஆசீர்வதிப்பார்
ஆதியாகமம் 18:1
பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
ஆதியாகமம் 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து;
ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.
ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆபிரகாம் பகலின் உஷ்ணவேளையில் தன்னுடைய கூடார வாசலில் உட்கார்ந்து இருக்கும் பொழுது தன் கண்களை ஏறெடுத்து பார்க்கிற வேளையிலே மூன்று புருஷர்கள் அவருக்கு எதிர்பட்டனர், உடனே ஆபிரகாம் அவர்கள் அண்டையில் ஓடி அவர்களை பணிந்து அவர்கள் தன்னை விட்டு கடந்து போக விடாமல் அவர்களை அழைத்து உபசரித்தார். ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்று கூறி ஆசீர்வதித்தார் அது போலவே ஆபிரகாம் ஈசாக்கை பெற்றெடுக்கும் படியாக தேவன் கிருபைபாராட்டினார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment