Tuesday, December 1, 2020

மறுபடியும் வருவார்

 

கன்மலை  கிறிஸ்துவ சபை டிசம்பர் மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 1:12:2020

மறுபடியும் வருவார்

எதற்காக மறுபடியும் வருகிறார் ? என்ன செய்வார் ?

அப்போஸ்தலர் 1:11

கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.


1. அவர் உன்னை மறுபடியும் சேர்த்து கொள்வார் 

யோவான் 14:3

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

ஏசாயா 40:11

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

உபாகமம் 30:3

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.

இந்த மாதம் கர்த்தர் உங்களை மறுபடியும் சேர்த்து கொள்வார். உங்கள் சிறையிருப்புகள் எல்லாவற்றையும் கர்த்தர் இந்த மாதம் நீக்கி விடுவிக்க வல்லவராய் இருக்கிறார். 

2. அவர் உன்னை மறுபடியும் தேற்றுவார் 

சங்கீதம் 71:21

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.

ஏசாயா 66:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

ஏசாயா 66:13

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

ஏசாயா 66:14

நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

ஒரு தாய் தேற்றுவது போல உங்களை நம் தேவனாகிய கர்த்தர் தேற்றுவார். அவர் உங்களை இடுப்பிலே வைத்து தாங்குவார். இந்த மாதம் உங்கள் சமாதானம் நதியைப்போலவும், மகிமை ஆறுகளை போல இருக்கும். 

3. அவர் உன்னை மறுபடியும் நாட்டுவார் 

எரேமியா 31:5

மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள்.

ஏசாயா 41:18

உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,

ஏசாயா 41:19

வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

ஏசாயா 41:20

கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

அவர் இந்த மாதம் உங்களை மறுபடியும் நாட்டுவார் உங்கள் தேசம் இனி பாழாக்க படுவதில்லை. கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நாட்டுவார், அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்னுவார் கர்த்தருடைய கரமே இதை இந்த மாதம் உங்களுக்கு உண்டுபண்ணப்போகிறது 

4. அவர் உன்னை மறுபடியும் சீர்படுத்துவார்  

அப்போஸ்தலர் 15:17

நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

ஏசாயா 61:3

சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

நீங்களே தாவீதின் கூடாரம். தேவனின் ஆலயம், அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனம், கர்த்தர் ஒருவரையே ஆராதிக்கிற கூட்டம். உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை விழுந்து போய்  இருக்கலாம், உங்களை கையின் பிரயாசங்கள் விழுந்து போய் இருக்கலாம், உங்கள் குடும்பம் விழுந்து போய் இருக்கலாம், உங்கள் பிள்ளைகள் பாவத்தில் விழுந்து போய் இருக்கலாம். கலங்க வேண்டாம்  கர்த்தர் சொல்லுகிறார் இந்த மாதம் எந்தெந்த எல்லைகளில் எல்லாம் நீங்கள் விழுந்து பழுதாய் இருக்கிறீர்களோ தேவனே அவற்றை பொறுப்பேற்று தன் கையில் எடுத்து உங்கள் விழுந்துபோன கூடாரத்தை மறுபடியும் சீர்ப்படுத்தி செவ்வையாக்குவார்.

5. அவர் உன்னை மறுபடியும் கட்டுவார் 

எரேமியா 31:4

இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

ஏசாயா 44:28

கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.

ஏசாயா 45:1

கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

ஏசாயா 45:2

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

அபிஷேகம் பண்ணப்பட்ட உங்களை அவர் மறுபடியும் இந்த மாதம் கட்டுவார்  அதுமட்டுமல்லாமல்  அவர் உங்கள் எல்லா வாசல்களை மீண்டும் திறப்பார். அவர் உங்களுக்கு முன்னே போய் கோணலான எல்லாவற்றையும் செவ்வையாக்கி எல்லா வழி வாசல்களையும் திறப்பார். 


FOR CONTACT

Brother Micheal

Kanmalai Christian Church

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment