Monday, November 30, 2020

மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்

 

Kanmalai Christian Church 

Word of God : Brother Micheal

Date: 29.11.2020


சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

இன்றைக்கு நாம் பலவிதமான சூழ்நிலைகளில், பலவிதமான காரியங்களில் நாம் விழுந்து கிடக்கிறோம். அவற்றில் இருந்து நம்மை தாங்கி தான் கர்த்தர் இன்றைக்கு சபையில் வைத்து இருக்கிறார். மடங்கடிக்கப்பட்ட யாவரையும் கர்த்தர் தூக்கிவிட வல்லவராய் இருக்கிறார். எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் விழுந்தார்கள் அவர்களை கர்த்தர் எப்படி தூக்கினார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே பார்க்கலாம் .

1. அவர் நம்மை குழியிலிருந்து தூக்கிவிடுகிறார் 

ஆதியாகமம் 37:26
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

ஆதியாகமம் 37:27
அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.

ஆதியாகமம் 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

இன்றைக்கு உங்களை குழியிலே தள்ளினாலும், நீங்கள் குழியிலே இருந்தாலும் மீதியானவர்கள் கையிலே நீங்கள் விற்று போடப்பட்டு இருந்தாலும் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது சகலமும் உங்களுக்கு நன்மைக்கு ஏதுவாய் முடியும். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி அவர் உங்களை குழியிலிருந்து தூக்கியெடுத்து  யோசேப்பைபோல அதே இடத்திலே உங்களை உயர்த்தி வைப்பார்.  உங்கள் தரிசனம் வீணாய் போகாது அது தாமதித்தாலும் அதற்க்கு பொறுமையாய்  காத்திருங்கள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். 

2. அவர் நம்மை கெபியிலிருந்து தூக்கிவிடுகிறார் 

தானியேல் 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.

தானியேல் 6:21
அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தானியேலை நயவஞ்சகமாக குற்றப்படுத்தி அவர் சத்ருக்கள் ராஜா மூலமாக சிங்க கெபியிலே போட்டார்கள். இன்றைக்கு உங்களுடைய சூழ்நிலைகளில், உங்களுடைய காரியங்களில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாத படி நம்மை கெபியிலே தள்ளி விட்டு இருக்கலாம். தானியேலை கர்த்தர் சிங்க கெபியில் இருந்து ஒரு சேதமும் இல்லாமல் தூக்கி எடுக்கச்செய்தார். அதுபோல கர்த்தரை ஆராதிக்கிற உங்களை சிறையிருப்பு என்கிற சிங்க கெபியில் இருந்து தூக்கியெடுத்து உயர்த்துவார். 

3. அவர் நம்மை உளையான சேற்றிலிருந்து தூக்கிவிடுகிறார்

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சங்கீதம் 40:3
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

உளையான பாவ சேற்றில் விழுந்து கிடந்த நம்மை கர்த்தர் தூக்கியெடுத்து கன்மலையின் மேல் நிறுத்தி வைத்து இருக்கிறார். சாட்சியுள்ளவர்களாக உங்கள் அடிகளை உறுதிப்படுத்துவார். இனிவருகிற நாட்களில் நீங்கள் எடுத்து வைக்கிற அடிகளை தேவன் உறுதிப்படுத்துவார்.




FOR CONTACT

Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment