Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 15.11.2020
சங்கீதம் 2:3
அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு பல விதமான கயிறுகள் அவன் அறியாமலும், அவன் அறிந்து இருந்தும் இருக்கின்றன இவை நம்முடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் மிகப்பெரிய தடையாய் காணப்படுகிறது. இன்றைக்கு அதை உங்களை விட்டு எரிந்து போட ஒப்புக்கொடுங்கள். இன்றைக்கு கர்த்தர் உங்கள் கட்டுகளையெல்லாம் அறுத்து உங்களுக்கு விடுதலையை அளிக்க போகிறார்.
1. கழுத்தில் மேல் உள்ள கட்டுகளை அறுப்பார்
ஏசாயா 55:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
ஏசாயா 55:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
அவன் விருத்தசேதனம் இல்லாதவன், அவன் அசுத்தன், உன்னுடைய எல்லா காரியங்களை பிடுங்கும் படி உனக்குள் வகை தேடி சுற்றி கொண்டு இருந்தால், உன் வல்லமைகளை பறித்தால், உன்னுடைய உடைகளை பறித்தால், உன் அபிஷேகத்தை இழக்க செய்தால் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது சீயோன் குமாரத்தியே கர்த்தர் உன் கட்டுகளை அறுக்கிறார்.
நாகூம் 1:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
நாகூம் 1:13
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்.
அவர் இனி உன்னை சிறுமைப்படுத்துவதில்லை, கர்த்தர் உன்னை மீட்டுக்கொள்வார். உன் மேல் இருக்கிற நுகத்தை கர்த்தர் அறுத்து போடுவார். உன் கழுத்தில் இந்நாள் வரை சுமந்து உன்னை வியாதியிலும், வறுமையிலும், வியாகுலத்திலும், தரித்திரத்திலும், சோர்விலும், மனக்கிலேசத்திலும் உன்னை எழும்ப கூடாத படிக்கு அழிக்க நினைக்கிற அந்த துஷ்ட மிருகம் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை. அவற்றை கர்த்தர் இன்றைக்கு உங்களை விட்டு அறுத்துப்போட போகிறார்.
2. மரணக்கட்டுகளை அறுப்பார்
சங்கீதம் 18:5
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
தற்கொலை எண்ணங்களை மனதில் விதைக்கிற மரணக்கட்டு இன்றைக்கு அநேகரை ஆட்கொண்டு வருகிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தை இப்படியாய் சொல்லுகிறது அது எப்பேர்ப்பட்ட மரணத்தின் கட்டாக இருந்தாலும் அதை உங்களை விட்டு அவிழ்த்து விட நம்முடைய தேவனாலே கூடும்.
சங்கீதம் 107:13
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
இந்த மரணகட்டானது உங்களை மனபாரத்தை உண்டு பண்ணி எப்படியாவது உங்களை நீங்கள் மாய்த்து கொள்ள வேண்டும் என்பதே எல்லா கட்டுகளையும் கர்த்தர் இன்று தவிடு பொடியாக்குகிறார்.
யோவான் 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
யோவான் 11:45
அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
3. புயத்தின் கட்டுகளை அறுப்பார்
நியாயாதிபதிகள் 15:14
அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.
நியாயாதிபதிகள் 15:15
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.
உன் புயங்களிலே கட்டப்பட்ட கயிறு அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு நபரையோ, குடும்பத்தையோ, அல்லது ஒரு ஜனத்தையோ எழும்ப கூடாத படி பெலிஸ்தரின் ஆவி பயத்தினை கட்ட எழுப்புவான். இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது இன்றைக்கு எப்பேர்ப்பட்ட கட்டுகள் உன்னையோ, உன் குடும்பத்தையோ, உன் சபையையோ, உன் இனத்தாரையோ கட்டி வைத்து இருந்தால் அதை அறுக்க பரிசுத்த அக்கினி வரும் அது உன் புயத்தில் உள்ள கட்டை அறுப்புண்டு போகச்செய்யும்.
4. அசுத்த ஆவிகளின் கட்டுகளை முறிப்பார்
லூக்கா 8:29
அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
லூக்கா 8:30
இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
லூக்கா 8:31
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
லூக்கா 8:32
அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
லூக்கா 8:33
அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
லூக்கா 8:34
அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
லூக்கா 8:35
அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
எல்லா அசுத்த ஆவியின் கட்டுகளையும் கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு குறிக்கிறார்.
5. பெலவீனப்படுத்தும் சாத்தானின் கட்டுகளை அவிழ்ப்பார்
லூக்கா 13:11
அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
லூக்கா 13:12
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
லூக்கா 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
லூக்கா 13:14
இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
லூக்கா 13:14
கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
லூக்கா 13:15
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
இந்த பெலவீனப்படுத்துகிற ஆவி அநேகரை தாக்கும் உடலிலே எதாவது ஒரு பலவீனத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.இங்கே பதினெட்டு வருஷமாய் நிமிர முடியாமல் பெலவீனப்படுத்தும் ஆவியால் கட்டப்பட்ட ஸ்திரீயை இயேசு தொட்டு சுகமாக்கினார் அது போல இன்றைக்கு உன் மேல் கர்த்தருடைய கரம் வருகிறது. உன் பெலவீனங்கள், உன் சோர்வுகள் நீங்கள் நிமிர்ந்து பார்க்க கூடாத படிக்கு இருக்கிற பெலவீனங்களை கர்த்தர் எடுத்து போடுவார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment