Monday, November 9, 2020

சர்வவல்லமையுள்ள கர்த்தர்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal 

Date: 08.11.2020


சர்வவல்லமையுள்ள கர்த்தர்

வெளி 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

சர்வவல்லமையுள்ள கர்த்தர் யாருக்கு ? என்ன செய்வார் ?

1. கீழ்ப்படிகிறவர்களை - பலுகி பெருகப்பண்ணுவார் 

ஆதியாகமம் 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;

ஆதியாகமம் 28:7
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,

ஆதியாகமம் 35:9
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து:

ஆதியாகமம் 35:10
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

நீங்கள் கர்த்தருக்கே கீழ்ப்படிந்து இருக்கும் பொழுது சர்வவல்லமையுள்ள கர்த்தர் யாக்கோபை பலுகி பெறுக பண்ணினது போல உங்களையும் பெறுக செய்வார். 

2. துதிக்கிறவர்களுக்கு - ராஜ்யபாரம் பண்ணுகிறார் 

வெளி 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.

வெளி 19:6
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

வெளி 19:7
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.

வெளி 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

வெளி 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

நீங்கள் ஆரவாரத்தோடு சந்தோஷப்பட்டு துதிக்கும் பொழுது சர்வவல்லமையுள்ள கர்த்தர் உங்கள் மத்தியில் ராஜ்யபாரம் பண்ணுவார். துதிக்கின்ற மணவாட்டியாகிய உங்களுக்கு சர்வவல்லமையுள்ள கர்த்தர் சுத்தமும் பிரகாசமும் ஆன மெல்லிய வஸ்திரத்தை அளிக்கிறார் அது பரிசுத்தவான்களுடைய நீதிகளே. உங்களுக்கு நீதியும், நியாயம் செய்து உங்களுக்கு ராஜ்யபாரம் பண்ணுவார். 

3. பிரித்தெடுக்கப்பட்டவர்களுக்கு - பிதாவாய் இருப்பார் 

II கொரிந்தியர் 6:11
கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.

II கொரிந்தியர் 6:12
எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

II கொரிந்தியர் 6:13
ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

II கொரிந்தியர் 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

II கொரிந்தியர் 6:15
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

II கொரிந்தியர் 6:16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

II கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

II கொரிந்தியர் 6:18
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

ரோமர் 8:15
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

நாம் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட  ஜீவியத்தை நாட வேண்டும் அவிசுவாசிகளுடன் மற்றும் அந்நிய நுகத்துடனும் நமக்கு பிணைப்பு இருக்கக்கூடாது. நீங்கள் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட ஜீவிக்கும் பொழுது கர்த்தர் உங்கள் நடுவில் வாசம் பண்ணுவார். உங்களுக்கு பிதாவாக இருப்பார். நீங்கள் அவருக்கு குமாரர், குமாரத்திகளாய் இருப்பீர்கள்.அதுமட்டும் அல்லாமல் அவர் அடிமைத்தனத்தின் நுகத்தை முறித்து அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை அளிக்கிறார்.  

4. கர்த்தரை தேடுகிறவர்களை - சர்வவல்லவரின் நிழல் பாதுகாக்கும்  

சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

சங்கீதம் 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

சங்கீதம் 36:7
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

கர்த்தருடைய சமூகத்தை நித்தமும் தேடுகிறவர்களுக்கு சர்வ வல்லவருடைய நிழல் தஞ்சமாக இருக்கிறது. இந்த நிழல் எல்லா தீங்குக்கும் விளக்கி நம்மை பாதுகாக்கும். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாய் தங்கியிருப்பான். 

5. உத்தமமாய் இருப்பவர்களை - ஜாதிகளுக்கு தகப்பனாக்குவார் 

ஆதியாகமம் 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆதியாகமம் 17:3
அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:

ஆதியாகமம் 17:4
நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

ஆதியாகமம் 17:5
இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

நாம் நம்முடைய வழிகளிலே கர்த்தருக்கு முன்பாக உத்தமனாய் நடக்கும்  பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் உங்களை  ஜாதிகளுக்கு தகப்பனாய் மாற்றுவார். 




FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment