Monday, October 12, 2020

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து


Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 11.10.2020


அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து


யாத்திராகமம் 12:6
அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

யாத்திராகமம் 12:7
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

1. விலையேறப்பெற்ற இரத்தம்  - நம்மை மீட்கும் 

I பேதுரு 1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

I பேதுரு 1:20
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

I பேதுரு 1:21
உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

நாம் அனைவரும் ஒரு குற்றமும் இல்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினாலே மீட்கப்பட்டு இருக்கிறோம். அவர் உலகத்தோற்ற முதற்கொண்டே நமக்காக முன்குறிக்கப்பட்டவர் அவர் நமக்காக இந்த கடைசி காலத்தில் மாம்சமாக வெளிப்பட்டார். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தை பானம் பண்ணுகிற நமக்கு மீட்பு உண்டு. 

2. தெளிக்கப்படும் இரத்தம் - நமக்கு நன்மையானவற்றை பேசும்  

எபிரெயர் 12:22
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

எபிரெயர் 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

எபிரெயர் 12:24
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.

நாம் அனைவரும் ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய  பரம எருசலேமுக்காக தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள். நம்முடைய பெயர் ஆயிரம் பதினாயிரம் தூதர்களுக்கு முன்பதாக பரலோகத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. நமக்காக தெளிக்கப்படுகிற இரத்தம் ஆபேலின் இரத்தத்தை பார்க்கிலும் நன்மையானதை பேசுகிற இயேசு கிறிஸ்துவின் இரத்தம். நமக்காக பிதாவினடத்தில் நன்மையானவற்றை பரிந்து பேசுகிறது.  

3. நீதிமானாக்குகிற இரத்தம் - நம்மை இரட்சிக்கும் 

ரோமர் 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

ரோமர் 5:6
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

ரோமர் 5:7
நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

ரோமர் 5:8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

ரோமர் 5:9
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

நமக்கு அருளப்பட்டு இருக்கிற பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ அன்பு நம் இருதயங்களிலே ஊற்றப்பட்டு இருக்கிறது. அந்த தேவ நம்பிக்கை நமக்கு இருப்பதால் நாம் வெட்கப்படுவதில்லை. நாம் பெலனற்று இருக்கும் போதே குறித்த காலத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையிலே மரித்தார். நம்மை நீதிமானாக்க நாம் பாவிகளாய் இருக்கையில் இயேசு கிறிஸ்து நமக்காக மரித்தார் இதன் மூலம் அவர் நம் மேல் வாய்த்த தேவ அன்பை விளங்கப்பண்ணுகிறார். அவருடைய இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறோம். அவருடைய இரத்தம் கோபாக்கினைக்கு நீங்கலாக்கி நம்மை இரட்சிக்கிறது. 

4. குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரதம் - நம் பாவங்களை நீக்கும் 

I யோவான் 1:5
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

I யோவான் 1:6
நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

I யோவான் 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

நமது தேவன் ஒளியாய் இருக்கிறார். அவரில் சிறிதளவும் இருளில்லை அது போல நாமும் தேவனை பின்பற்றி ஒளியிலே நடக்கக்கடவோம் அவ்வாறு இருந்தால் நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டு இருப்போம் நம் பாவங்களை அறிக்கையிட்டால் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம் சகல பாவங்களையும் நீக்கி  நம்மை சுத்திகரிக்கிறது. 

5. அடையாளமான இரத்தம் - நம்மை காக்கும் 

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

நம் இயேசுவின் இரத்தம் நமக்கு அடையாளமாய் இருக்கிறது. அன்றைக்கு இஸ்ரவேல் புத்திரரின் வீட்டின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் அவர்களுக்கு அடையாளமாக இருந்து அழிக்கும் வாதையில் இருந்து அவர்களை ஒரு சேதமும் இல்லாமல் காத்தது அது போல நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் நம் ஒவ்வொருவருக்கும் அடையாளமாய் இருக்கிறது. நம்மை அழிவில் இருந்து பாதுகாக்கிறது. 


FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment