Monday, October 26, 2020

உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal


உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்


எசேக்கியேல் 11:5

அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.

1. மனதின் பயத்தை நீக்கி மனவிருப்பத்தை நிறைவேற்றுவார்  

I சாமுவேல் 20:4

அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.

I சாமுவேல் 20:5

தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.

I சாமுவேல் 20:6

உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.

I சாமுவேல் 20:7

அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.

I சாமுவேல் 20:8

ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.

இங்கே தாவீதுக்கு சவுலை பார்க்கும் பொழுது சற்று மனதிலே பயம் எழுப்புகிறது. எனவே தான் யோனத்தானிடம் நாளை அமாவாசி ஆகையால் ராஜாவுடன் பந்தியிருக்க வேண்டியதாய் இருக்கும் நான் நாளை அங்கு வரமாட்டேன் ராஜா கேட்டால் பெத்லகேமிலே போய்விட்டதாக சொல்லி விடும் அதற்கு ராஜா நல்லது என்றால் எனக்கு சமாதானம் உண்டாகி இருக்கும் அவ்வாறு இல்லாமல் சவுலுக்கு எரிச்சல் உண்டானால் வராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் என்று சொல்லுகிறார். 

சங்கீதம் 20:5

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

எங்கே தாவீதின் மனதின் பயத்தை போக்க அவருடைய மனவிருப்பத்தை யோனத்தான் நிறைவேற்றினார். அது போல உங்களுக்குள் எழும் மனதின் பயத்தை ஆண்டவர் மாற்றி உங்களை காரியத்தை விசாரித்து உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார்.

2. பதறிய மனதை மாற்றி நீதியாக பதிலளித்து இரட்சிப்பார் 

ஏசாயா 35:3

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

ஏசாயா 35:4

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

உங்கள் மனம் பதறிப்போன சூழ்நிலையில் காணப்படுகிறதா ?  கலங்க வேண்டாம், பயப்படவேண்டாம், திடன் கொள்ளுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நீதியை சரிக்கட்டி உங்களுக்கு பதில் அளித்து இரட்சிப்பார். உங்கள் வனாந்திர வறண்ட நிலம் புஷ்பத்தை போல செழிக்கும். 

3. கசந்த மனதை மாற்றி கொம்பை உயரப்பண்ணுவார் 

I சாமுவேல் 1:10

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

I சாமுவேல் 1:11

சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

I சாமுவேல் 2:1

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

இங்கே அன்னாள் தனக்கு பிள்ளை வேண்டி கசந்த மனதோடு ஆலயத்தில் அழுதாள். ஆண்டவரிடம் மிகவும் அழுது விண்ணப்பம் பண்ணினாள். ஆண்டவரே என்னுடைய சிறுமையை கண்ணோக்கி பார்த்து எனக்கு ஒரு ஆண் பிள்ளையை அருளினால் அந்த பிள்ளையை உமக்கு ஒப்புக்கொடுப்பேன் அவன் மேல் சவரன் கத்தி படுவதில்லை என பொருத்தனை செய்தாள். தேவன் அன்னாளுடைய விண்ணப்பத்தை கேட்டு அவளுடைய கொம்பை பகைவர்களுக்கு முன்பதாக உயர்த்தினார். 

4. துக்க மனதை மாற்றி தயை செய்து சித்தத்தை நிறைவேற்றுகிறார் 

நெகேமியா 2:2

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

நெகேமியா 2:3

ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

நெகேமியா 2:4

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

நெகேமியா 2:5

ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

நெகேமியா 2:6

அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.

அர்தசஷ்டா ராஜா நெகேமியாவை பார்த்து உன் முகம் துக்கமாய் இருக்கிறது என்ன நீ சுகமுடன் தான் இருக்கிறாய் ஆனால் இது மனதின் தூக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை உன்னுடைய துக்கம் தான் என்ன என்று கேட்கிறார். அப்பொழுது நெகேமியா பயந்து என் பிதாக்களின் நகரம் பாழாய் பொய் அலங்கங்கள் இடிந்து வாசல்கள் தீக்கிரையாகி இருக்கும் பொழுது நான் எப்படி துக்கமாய் இல்லாமல் இருக்க முடியும் ஆகவே ராஜாவுக்கு சித்தமானால் அந்த பட்டணத்தை மீண்டுமாய் யூதா கட்ட என்னை அனுப்பிவிடும் என்று வேண்டி கொள்ளுகிறார். நெகேமியாவின் காரியத்தை ராஜா நிறைவேற்றினார் அன்பான தேவ ஜனமே அதுபோல தான் உங்களுடைய காரியம் நம்முடைய ராஜாதி ராஜாவின் கைகளில் இருக்கிறது நீங்கள் துக்க முகமாய் இருக்கிறது என்ன ? கலங்க வேண்டாம். உங்கள் காரியத்தை நிறைவேற்றுவது ஆண்டவர் சித்தமாய் இருக்கிறது அவர் நிச்சயம் செய்து முடிப்பார். 

5. மனவியாகுலத்தை நீக்கி வழிகளுக்கு தக்க பலன் அளிப்பார் 

ஆதியாகமம் 22:21

நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

II நாளாகமம் 6:29

எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

II நாளாகமம் 6:30

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

II நாளாகமம் 6:31

தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

யோசேப்புக்கு நாம் இத்தகைய தீமை செய்தோமே அவனை மன வியாகுலம் அடைய அடைய செய்தோமே அதனால் தான் இந்த தீமை நமக்கு நேர்ந்தது என்று யோசேப்பின் சகோதரர்கள் தங்களுக்குள்ளே பேசி கொண்டார்கள். உங்கள் மன வியாகுலம் என்ன என்பதை தேவன் அறிந்து வைத்து இருக்கிறார். உங்கள் வியாகுலங்கள் நீங்க  கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணுங்கள் அப்பொழுது அவர் உங்களை மன்னித்து உங்கள் வழிகளுக்கு தக்கதாக பலன் அளிப்பார். 


FOR CONTACT

Brother Micheal

Kanmalai Christian Church

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment