Kanmalai Christian Church
கன்மலை கிறிஸ்துவ சபை அக்டோபர் 2020 வாக்குத்தத்தம்
Word of God: Brother Micheal
Date: 01.10.2020
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்
உபாகமம் 31:8
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
எதற்காக அவர் நமக்கு முன்பாக போகிறார் ?
1. வெற்றியை அளிக்க உங்களுக்கு முன்பதாக போகிறார்
II சாமுவேல் 5:3
இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
II சாமுவேல் 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
II சாமுவேல் 5:23
தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
II சாமுவேல் 5:24
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
II சாமுவேல் 5:25
கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
சத்துருக்களை முறியடித்து வெற்றியை தருவதற்காக முன்பாக போகிறார்
2. வழிகளை செவ்வையாக்க உங்களுக்கு முன்பதாக போகிறார்
ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
நம்முடைய கதவுகளை பூட்டும் படி பல சூழ்ச்சிகளை சத்துருவானவன் செய்து கொண்டு இருக்கிறான். அபிஷேகம் பண்ணப்பட்ட தம்முடைய ஜனங்களுக்கு முன்பதாக வலது கையை பிடித்து எவரும் பூட்டப்படாதபடிக்கு திறக்கிற தேவ ஆவியானவர் உங்கள் கோணலான வழிகளை எல்லாம் செவ்வை ஆக்க இந்த மாதம் உங்களுக்கு முன்பதாக செல்கிறார்.
3. தடைகளை நீக்க உங்களுக்கு முன்பதாக போகிறார்
மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
நம் வாழ்க்கையிலே வாசலிலே உட்பிரவேசிக்க முடியாதபடி, மேய்ச்சல்களை காணக்கூடாதபடி பல வாசல்கள் அடைப்பட்டு இருக்கிறது. இந்த மாதம் தடைகளை உடைக்கிற கர்த்தர் உங்களுக்கு முன்பதாக போவார். இந்த மாதம் எல்லா தடைகளும் உடைக்கப்படும்.
4. காரியத்தை வாய்க்கப்பண்ண உங்களுக்கு முன்பதாக போகிறார்
யாத்திராகமம் 33:2
நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
ஆதியாகமம் 24:7
என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.
யோசுவா 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,
யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்.
யோசுவா 3:17
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.
ஊழியக்காரருடைய பாதம் வந்து இருக்கும் பொழுது, இதுவரையிலும் வாய்க்காமல் இருக்கிற காரியங்களை கர்த்தர் வாய்க்கும் படி செய்வார். உடன்படிக்கையை சுமக்கிற ஆசாரியருடைய கால்கள் உங்களுக்கு முன்பதாக செல்லும்
5. அற்புதம் செய்ய உங்களுக்கு முன்பதாக போகிறார்
மத்தேயு28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
மத்தேயு28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
மத்தேயு28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
மத்தேயு28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
அவர் உங்களுக்கு முன்பதாக கலிலியாவுக்கு போய் இருக்கிறார் எதற்காக என்றால் கசந்து போய் இருக்கிற உங்களுடைய வாழ்க்கையை இன்பமாய் மாற்றும்படியாய் அவர் கானானுக்கு போய் இருக்கிறார். ஒரு அற்புதத்தை உங்களுக்காக செய்யும்படிக்கு போய் இருக்கிறார். உங்கள் வீட்டிலே சுகத்தை கர்த்தர் கட்டளையிடுவார். எனவே நீங்கள் பயப்பட வேண்டாம்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment