Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 27.9.2020
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்
யாத்திராகமம் 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
எதற்காக அவர் உன்னை சந்திக்கிறார் ?
1. கிருபையளிக்கும்படி உன்னை சந்திப்பார்
சங்கீதம் 59:9
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
சங்கீதம் 59:10
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
உங்கள் குடும்பத்திற்கு விரோதமாகவும், உங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாகவும், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு விரோதமாகவும் ஒரு வல்லமை எதிர்த்து வருகிறது என்று சொன்னால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே கர்த்தருடைய சமூகத்தில் காத்து இருப்பது. அதை தான் தாவீது இங்கே சொல்கிறார். தேவனே உங்களுக்கு உயர்ந்த அடைக்கலமாய் இருப்பார். கர்த்தர் உங்களை சந்திக்கும் படியாக அவர் தம் கிருபையோடு வருகிறார். எந்த வல்லமையும் உங்களை மேற்கொள்ளாது.
சகரியா 2:3
இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 4:7
பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
2. ஆகாரம் கொடுக்கும்படி உன்னை சந்திப்பார்
ரூத் 1:1
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
ரூத் 1:2
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
ரூத் 1:3
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
ரூத் 1:4
இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம்பண்ணினார்கள்.
ரூத் 1:5
பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
ரூத் 1:6
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
எப்போதுமே அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமில் ஆகாரம் இருக்கும் (கர்த்தருடைய வார்த்தை) என்று எதிர்பார்க்க முடியாது. இங்கே நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்த நாட்களில் பஞ்சம் ஏற்பட்டதால் பெத்தலகேம் ஊரானாகிய எலிமெலேக்கு மோவோப் தேசத்திற்கு சென்று அங்கேயே சஞ்சரித்து விட்டார். சில காலத்தில் எலிமெலேக்கு மற்றும் அவர் இரண்டு மகன்களும் இறந்து விட நகோமி, ஓர்பாள் , ரூத் தனித்தவர் ஆனார்கள். பின் பெத்லகேமிலே கர்த்தர் தமது ஜனத்தை சந்தித்து ஆகாரம் கொடுத்தார் என்பதை மோவாபிலே கேள்விப்பட்டு தன் மருமக்களோடே புறப்பட்டாள். கர்த்தர் நமக்கு பஞ்ச காலங்களிலும் ஒரு குறைவின்றி நடத்த வல்லவராய் இருக்கிறார் எனவே நாம் சோர்ந்து போய் விடக்கூடாது, வழி விலகி போய் விடக்கூடாது. கர்த்தர் தமது ஜனத்தை சந்தித்து ஆகாரம் கொடுப்பார். தேவன் ஆகாரம் கொடுக்கும் படியாய் (ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் ) உங்களை சந்திக்க வருவார்.
I சாமுவேல் 10:2
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்.
I சாமுவேல் 10:3
நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து,
I சாமுவேல் 10:4
உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.
3. உனக்குள் இழந்ததை உயிர்பிக்கும்படி உன்னை சந்திப்பார்
லூக்கா 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
லூக்கா 7:13
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:15
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
லூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
இன்றைய நாட்களிலே பெற்றோர்களுக்கு பிள்ளைகளை குறித்து ஒரு கவலை எப்பொழுதும் இருக்கிறது. கர்த்தர் உங்களை சந்திப்பார் உங்கள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி அணைத்து கொள்வார் கலங்க வேண்டாம். இனி உங்கள் பிள்ளையை குறித்ததான கவலையை விட்டுவிடுங்கள் கர்த்தர் பார்த்து கொள்வார் உங்கள் பிள்ளையை கர்த்தர் உயிர்ப்பித்து உங்களிடத்தில் ஒப்புவிப்பார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment