Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 13.09.2020
அப்போஸ்தலர் 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்தஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்கும்பொழுது நம்மில் நடப்பிக்கப்படும் கிரியைகள்
1. உங்கள் தன்மை மாறும்
I சாமுவேல் 19:20
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
I சாமுவேல் 19:21
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
I சாமுவேல் 19:22
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
I சாமுவேல் 19:23
அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
உன் அபிஷேகம் உனக்குள் இருக்குமென்று சொன்னால் உன் சத்துருக்கள் உன்னை மேற்கொள்ள வரும் பொழுது உன் அபிஷேகம் அவர்களிடத்தில் பாய்ந்து உன்னை வாழ்த்தும் படி கர்த்தர் அவர்கள் தன்மையை மாற்றி விடுவார். கர்த்தருடைய ஆவியானவர் சவுல் மேல் இறங்கினபொழுது சவுலின் தாவீதை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் மாறி சவுலின் தன்மை மாறி அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு வந்தான். இன்றைக்கு உங்கள் அபிஷேகம் எப்படி இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் இருந்தால் நீங்கள் தன்மை மாறி சமாதானம் பண்ணுகிறவர்களாய், கபடம் இல்லாதவர்களாய் இருப்பீர்கள். உங்கள் சுபாவம் முற்றிலும் மாறி இருக்கும்.தேவ சித்தத்தை செய்வபவர்களாக இருப்பீர்கள். இன்றைக்கு கர்த்தர் உங்கள் தன்மையை மாற்ற விரும்புகிறார்.
2. உங்கள் சக்தியை வெளிப்படுத்துவார்
உங்கள் சத்துருவை வீழ்த்த கிருபை தருவார்
நியாயாதிபதிகள் 14:5
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
நியாயாதிபதிகள் 14:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
கர்த்தருடைய ஆவி சிம்சோன் மேல் பலமாய் இறங்கின பொழுது பாலசிங்கத்தை ஒரு ஆட்டு குட்டியை கிழித்து போடுகிறது போல கிழித்து போட்டான். இன்றைக்கு பிசாசானவன் நம்மை எப்படி விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கத்தை போல நம்மை சுற்றிலும் வகை தேடி கொண்டு இருக்கிறான். கர்த்தருடைய ஆவி நம்மேல் இறங்கும் என்று சொன்னால் நம் சத்ருக்களை நாம் மேற்கொள்வதற்கு கர்த்தர் கிருபை தருவார். நீங்கள் எந்த சூழ்நிலையையும் மேற்கொள்வீர்கள். கர்த்தருடைய ஆவி உங்கள் மேல் இறங்கும் பொழுது உங்களுக்குள் இருக்கிற சக்தியை அவர் வெளிப்படுத்துவார்.
3. உங்கள் சத்துருவை வீழ்த்த கிருபை தருவார்
நியாயாதிபதிகள் 11:29
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.
நியாயாதிபதிகள் 11:30
அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,
நியாயாதிபதிகள் 11:31
நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
நியாயாதிபதிகள் 11:31
யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 11:32
அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 11:33
யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டுவந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.
நியாயாதிபதிகள் 11:34
அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
நியாயாதிபதிகள் 11:39
இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.
இங்கே கர்த்தருடைய ஆவியானவர் யெப்தாவின் மேல் இறங்கினார். அப்பொழுது யெப்தா அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான் வீட்டுக்கு சமாதானத்துடன் திரும்பி வரும் பொழுது எனக்கு எதிர்கொண்டு வருவது கர்த்தருக்கு உரியது என்று பொருத்தனை பண்ணினார். கர்த்தர் மகா சங்கராமாய் இறங்கி இருபது பட்டினங்களை பிடிக்க கிருபை செய்தார். இன்றைக்கு யெப்தா போல நீங்கள் இருக்கிறீர்களா ? அபிஷேகம் பெற்ற நீங்கள் பொருத்தனை செய்யும் பொழுது உங்கள் சத்துருக்களை வீழ்த்துவதற்கு கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார்.
4. தீர்க்கதரிசனம் உரைப்பீர்கள்
எண்ணாகமம் 11:29
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
I சாமுவேல் 10:10
அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
உபாகமம் 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
உபாகமம் 32:3
கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் இறங்கும் பொழுது நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வீர்கள். தீர்க்க தரிசனம் என்று சொன்னாலே வசனம் இருக்கும். மழையானது இளம் பயிரின் மீது பொழிவது போல, பனித்துளியானது புல்லின் மேல் இறங்குவது போல கர்த்தருடைய வசனம் இறங்கும்.
5. உங்களை ஐக்கியத்தோடு இருக்கவைக்கும்
நியாயாதிபதிகள் 6:34
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
நியாயாதிபதிகள் 6:35
மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
நியாயாதிபதிகள் 6:36
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,
நியாயாதிபதிகள் 6:37
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
நியாயாதிபதிகள் 6:38
அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
நியாயாதிபதிகள் 6:39
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
நியாயாதிபதிகள் 6:40
அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது
இங்கே ஒன்றுமே தெரியாத பயந்தவராக இருந்த கிதியோன் மீது கர்த்தருடைய ஆவி இறங்கின பொழுது அவன் எக்காலம் ஊதி எல்லா ஜனங்களையும் தனக்கு பின் செல்லும் படி கூட்டி சேர்கிறார். கிதியோன் மீது இறங்கின ஆவியானவர் எப்படி செயல் படுகிறார் என்றால் கிதியோனை எல்லோரிடமும் ஐக்கியமாக இருக்க வைத்து ஒன்று கூட்டி சேர்த்து இஸ்ரவேலை இரட்சிக்கிறார். இன்று நீங்கள் எப்படி இருக்குறீர்கள் நம்மை நாமே ஆராய்ந்து பாப்போம் உங்கள் மீது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினார் என்றால் உங்களை எல்லோரிடமும் ஐக்கியமாக இருக்க வைப்பார். அவ்வாறு இருக்கும் பொழுது சத்துருவால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. கர்த்தர் அவனை மேற்கொள்ள வைத்து உங்களை இரட்சிப்பார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment