Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 06.09.2020
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்
சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
எதற்காக தேவன் எழுந்தருளியிருக்கிறார்?
1. செய்யப்படாத அதிசயங்களை செய்வதற்காக எழுந்தருளுவார்
(யாத்திராகமம் 34: 1 - 10)
யாத்திராகமம் 34:9
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
தேவன் உங்கள் நடுவில் எழுந்தருளினால் என்ன செய்வார்? ஆண்டவர் உங்களுக்கு ஒரு உடன்படிக்கையை செய்து . எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயத்தை செய்ய தேவன் எழுந்தருளியிருக்கிறார். உன்னோடு கூட இருக்கிற ஜனங்கள் கர்த்தர் உனக்கு செய்த அதிசயமான செய்கையை காண்பார்கள். கர்த்தர் எழுந்தருளி உனக்கு பெரிய பயங்கரமான காரியங்களை இனி செய்யப்போகிறார்.
2. வல்லமையை விளங்கப்பண்ண எழுந்தருளியிருக்கிறார்
(II நாளாகமம் 6:36 - 42)
II நாளாகமம் 6:41
தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
II நாளாகமம் 6:42
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
II நாளாகமம் 7:1
சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
II நாளாகமம் 7:2
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
உங்களுக்கு பலத்த காரியத்தை செய்வதற்காக கர்த்தர் எழுந்தருளப்போகிறார். இனி உங்கள் ஜெபங்களுக்கு அக்கினியின் மூலமாக அங்கீகரித்து கர்த்தர் தன் வல்லமையை விளங்கப்பண்ணி சடுதியில் பதில் தரப்போகிறார் கர்த்தருடைய மகிமை உங்கள் மேல் தங்கி இருக்கும்.
3. அக்கினி மதிலாய் இருந்து எழுந்தருளுவார்
சகரியா 2:4
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 2:8
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
சகரியா 2:9
இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
சகரியா 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 2:11
அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
சகரியா 2:12
கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
சகரியா 2:13
மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
இனிவருகிற நாட்களில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு அக்கினி மதிலாய் இருக்கப்போகிறார். ஒருவரும் உங்கள் முன் எதிர்த்து நிற்காதபடிக்கு கர்த்தரே உங்களுக்கு அக்கினி மதிலாய் இருப்பார். உங்களை தொடுகிறவன் அவர் கண்மணியை தொடுகிறான். உன் சத்துருக்களுக்கு விரோதமாக கர்த்தர் தன் கையைஅசைப்பார்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment