Monday, June 1, 2020

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார்


Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 31.5.2020


யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். அவன் என்று சொல்லும் பொழுது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் குறிக்கிறது. பார்க்கும் படி என்று சொன்னால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எப்படியெல்லாம் நாம் பார்க்க வேண்டும் என்று குறிக்கிற ஒரு காரியம். 'கிட்ட வருகிறதை ' என்று சொல்லும் பொழுது தேவனுடைய சமூகத்தில் நாம் எவ்வளவாய் கிட்டி சேருகிறோம் என்கிற அனுபவத்தை குறிக்கிறது. 

இன்றைக்கு நாம் கர்த்தரிடம் கிட்ட வரும் பொழுது, அவரை நாம் நெருங்கும் பொழுது, அவரை கிட்டி சேரும் பொழுது நாம் பெற்று கொள்கிற நன்மைகளை ஐந்து விதமான காரியங்களில் நாம் தியானிக்கலாம்.

1. தேவ வசனத்தை கேட்க நாம் நெருங்க வேண்டும் 

லூக்கா 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

லூக்கா 5:2
அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 5:3
அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.


இங்கு சொல்லப்பட்டுள்ளது தேவ வசனத்தை கேட்கும் படி கெனேசரேத்துக் கடலருகே திரளான ஜனங்கள் நெருங்கினார்கள். நாம் வேத வசனத்தை கேட்கிறது மாத்திரம் இல்லாமல் நாம் நமக்குள்ளே ஆழமாக தேவ வசனத்தை விதைக்கும் பொழுது நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும். நாம் தேவ வசனத்தை கேட்க நெருங்கி நெருங்கி போக வேண்டும்.  

லூக்கா 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

லூக்கா 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


லூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

லூக்கா 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இங்கு மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்டு கொண்டு இருந்தாள், ஆனால் மார்த்தாளோ இயேசுவிடம் வந்து நான் தனியாக வேலை செய்து கஷ்டப்படுகிறேனே மரியாளை எனக்கு உதவியாக இருக்க அனுப்ப கூடாதா என்று கேட்கிறாள் அதற்கு இயேசு மார்த்தாளே , நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். ஆம் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானது ஒன்றே அதுவே தேவனுடைய வார்த்தை நாமும் மரியாளை போல தேவனுடைய சமூகத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்டு நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும் 

தேவ வசனத்தை கேட்கும் பொழுது நமக்கு பெலன் கிடைக்கிறது 

I தெசலோனிக்கேயர் 2:13
ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

2. இயேசுவை தொட நாம் நெருங்க வேண்டும் 

மாற்கு 3:8
கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.

மாற்கு 3:9
அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.

ஐந்து கிராமங்கள் மற்றும் இரண்டு பட்டணங்களில் இருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களை கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். அங்கு இருந்த நோயாளிகள் எல்லாரும் இயேசுவை தொட வேண்டும் என்று அவரிடத்தில் நெருங்கி வந்தார்கள். இது போல நாமும் இயேசுவை தொட பிரயாச பட வேண்டும் அதற்கு வாஞ்சிக்க வேண்டும் அதற்கு நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னுமாய் அவரை கிட்டி சேர வேண்டும். 

லூக்கா 8:41
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,

லூக்கா 8:42
தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.


லூக்கா 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,

லூக்கா 8:44
அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

லூக்கா 8:45
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.

லூக்கா 8:46
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

லூக்கா 8:47
அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.

லூக்கா 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

நெருங்கி அவரை தொட்டால் தேவனுடைய வல்லமை பெற்று கொள்ள முடியும் 

ஜெப ஆலய தலைவனாகிய யவீரு தன்னுடைய மகளை காப்பாற்றும் படி இயேசுவின் பாதத்தில் விழுந்து அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருங்கினார்கள் அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள தன் ஆஸ்திகளையெல்லாம் செலவிட்டும் கூட ஒருவராலும் குணப்படுத்த முடியாத ஒரு ஸ்திரீ  இயேசுவுக்கு பின்னாக வந்து அவருடைய வஸ்திரத்தை நுனியை தொட்டாள். அந்த கணமே அவளுடைய பெரும்பாடு நீங்கி போயிற்று. அப்பொழுது இயேசு என்னை தொட்டது யார் என்று கேட்டார். பேதுருவம் அவனுடன் கூட இருந்தவர்களும் இவ்வளவு திரளான ஜனங்கள் உங்களை நெருக்கி கொண்டு இருக்கும் பொழுது உம்மை தொட்டது யார் என்று எப்படி கேட்கிறீர் என்று கேட்டான். அதற்கி இயேசு என்னில்  இருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிந்தேன் யாரோ என்னை தொட்டார்கள் என்கிறார்  இதை அறிந்த ஸ்த்ரீ இனிமேல் மறைந்திருக்கலாகாது என்று முன்னே வந்து பயத்தோடு தான் குணமானதை எல்லார் முன்பாக அறிவித்தாள் 

இன்றைக்கு நம்மில் அநேகர் ஆண்டவரை அறிந்து இருந்தும் அவரை நெருங்கி இருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே  இருக்கிறோமே நாம் எப்படி அவரை தொடுகிறோம். சற்றே சிந்தித்து பாப்போம். வெகு சிலர் தான் அவருடைய வல்லமையை பெற்று கொள்கின்றனர். இனி மேல் நாமும் இயேசுவை தொட்டு வல்லமையை பெற்று கொள்ள நாட வேண்டும். 

3. இயேசுவை பார்க்க நாம் நெருங்க வேண்டும் 

லூக்கா 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.

லூக்கா 18:36
ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

லூக்கா 18:37
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

லூக்கா 18:38
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

லூக்கா 18:39
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

லூக்கா 18:40
அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:

லூக்கா 18:41
நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

தேவனுடைய இரக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் 

இந்த இடத்தில எரிகோவுக்கு சமீபமாய் ஒரு குருடன் வழியருகே பிச்சை கேட்டு கொண்டு இருந்தான். ஜனங்கள் நடக்கிற  சத்தத்தை கேட்டு அவன் இதென்ன என்று விசாரிக்க நசரேனாகிய இயேசு கிறிஸ்து போகிறான் என்று சொன்னார்கள், உடனே அவன் தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டான். அங்கு இருந்து சிலர் அவன் பேச கூடாதபடி அதட்டினார்கள். ஆனாலும் இந்த முறை அவன் மிகவும் அதிகமாய் தாவீதின் குமரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டான். இயேசு நின்று அவனை தம்மிடத்தில் அழைத்து வரும் படி சொன்னார்.அவன் கிட்ட வரும் பொழுது நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் அதற்கு அவன் நான் பார்வை அடைய வேண்டும் என்றான்.

இன்றைக்கு நாம் அந்த குருடனை போல இயேசுவை கூப்பிடுகிறோமோ அல்லது அவரை கடந்து போக செய்து விடுகிறோமா சற்றே சிந்தித்து பாருங்கள் அவன் உரக்க சத்தமாய் கூப்பிட்டான் அது இயேசுவை நிற்க வைத்தது அவன் கிட்ட வரும் பொழுது இயேசு உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறி அவனுக்கு மனதுருகி பார்வை அடைய செய்தார். 

சங்கீதம் 148:14
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

4. இயேசுவின் பாதத்தை தொழுது கொள்ள நாம் நெருங்க வேண்டும் 

மத்தேயு 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

மத்தேயு 28:9
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.


மத்தேயு 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

நற்செய்தி அறிவிக்கிறவர்களாக உங்களை பயன்படுத்துவார் 

இங்கு இரண்டு பேர் பயத்தோடும், மகா சந்தோஷத்தோடும் இயேசு உயிர்ந்தெழுந்து விட்டார் என்பதை மற்ற சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டு வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து அவர் பாதங்களை தழுவி பணிந்து கொண்டார்கள். இயேசு அவர்களை நற்செய்தி சொல்ல அனுப்பி வைத்தார். நாம் கர்த்தருக்காக சந்தோஷமாய் ஓடும் பொழுது இயேசு நம் கூட இருக்கிறார் என்பதை நாம் உணர முடியும். கர்த்தரிடத்தில் நாம் சேரும் பொழுது இயேசுவின் சாயலாய் நாம் மாறுகிறோம். 

5. கர்த்தருடைய அக்கினியை பார்க்க நாம் நெருங்க வேண்டும் 

யாத்திராகமம் 3:3
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.

யாத்திராகமம் 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

யாத்திராகமம் 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

வல்லமையுள்ளவர்களாக மாற்றுவார் 

இங்கு கர்த்தர் அக்கினியாக முட்செடியில் தரிசனமானார். நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இத்தகைய அனுபவத்தை பெற்று இருக்கிறோமா ? அந்த அக்கினியை நாம் வாஞ்சித்து அதை நாடி இருக்கிறோமே ? இங்கு மோசே இந்த அற்புத காட்சியை நான் கிட்ட போய்   பார்ப்பேன் என்று சொல்லி நெருங்கி போகிறார். அப்பொழுது கர்த்தர் மோசேயுடன் அக்கினியில் இருந்து பேசுகிறார். கர்த்தர் மோசேயை கொண்டு பல அற்புத அடையாளங்களை செய்தார். தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்தின் இருந்து மீட்க பயன்படுத்தினார். அது போல நாம் வாஞ்சிப்போம் என்று சொன்னால் நம்மையும் ஆண்டவர் வல்லமையாக ஊழியத்தில் எடுத்து பயன்படுத்துவார். 


FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment