Monday, May 25, 2020

என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது


Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 25.5.2020


ஆதியாகமம் 37:7
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.

ஒரு கிறிஸ்துவனுடைய வாழ்க்கை நிமிர்ந்து இருக்க வேண்டும். எப்படியெல்லாம் நாம் நிமிர்ந்து இருக்க வேண்டும் என்று வேதத்தை அடிப்படையாக கொண்டு ஏழு வித காரியங்களில் நாம் தியானிக்கலாம். 

யோசேப்பு தன்னுடைய கனவிலே காண்கிறார் என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்து இருக்கிறது. இன்றைக்கு உங்களுடைய அரிக்கட்டு எப்படி இருக்கிறது 

 1. அவர் நம்மை எழுந்து நிமிந்து நிற்க செய்வார் 

சங்கீதம் 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

சங்கீதம் 20:8
அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

அவர் கிருபை நம்மை தேடிவந்தது 

தாவீது சொல்கிறார் அவர்களோ குதிரைகளை குறித்தும், ரத்தங்களை குறித்தும் மேன்மை பாராட்டினார்கள் ஆனால் நானோ கர்த்தருடைய நாமத்தை மேன்மைப்படுத்தினேன். நாம் கர்த்தருக்காக மேன்மை பாராட்டும் பொழுது, கர்த்தருக்காக ஓடும் பொழுது, கர்த்தருக்காக வைராக்யமாய் இருக்கும் பொழுது அவர் தம்முடைய கிருபையால் உங்களை நிமிர்ந்து நிற்க செய்வார். உன் சத்துரு முறிந்து போகிறான். 

2. அவர் நம்மை நிமிர்ந்து பார்க்கச்செய்வார் 

லூக்கா 13:10
ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக்கா 13:11
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

லூக்கா 13:12
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

லூக்கா 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

அவர் மகிமையை நம்மை காணவைத்தார் 

பதினெட்டு வருஷமாய் அந்த ஸ்திரீ பெலவீனப்படுத்தும் ஆவியினால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் இருந்தார். பதினெட்டுக்கு வர்ஷமாய் அந்த ஸ்திரீயால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. இயேசு அவளை தொட்டு விடுதலை அளித்த பொழுது உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள். இப்படியாகத்தான் நாம் யார் உண்மையான தேவன் என்பதை பார்க்காமல் பெலவீனப்பட்டு இருந்தோம். நாம் தேவனை அவர் நம்மை தேடி வந்து  நம்மை பார்த்து நம் பெலவீனங்களை நீக்கி அவருடைய மகிமையை காணவைத்தார். 

3. அவர் நம்மை நிமிர்ந்து நடக்க செய்வார் 

லேவியராகமம் 26:9
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

லேவியராகமம் 26:10
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.

லேவியராகமம் 26:11
உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.

லேவியராகமம் 26:12
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.

லேவியராகமம் 26:13
நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை 

அவர் உங்களை பலுகவும், பெருகவும் செய்வார். அவர் உங்களை ஆரோசிக்காமல் உங்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பார். அவர் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாய் இருப்பார். நாம் அவர் ஜனமாய் இருப்போம். அவர் நம்முள் அபிஷேகத்தை வைத்து நம்முடைய அடிமைத்தனத்தை முறிக்கிற வல்லமையை நமக்கு தருவார். நம்மை நிமிர்ந்து நடக்க செய்வார்.

4. அவர் உபத்திரவத்தில் நம்மை நிமிர்ந்து உலாவச்செய்வார் 

தானியேல் 3:11
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

தானியேல் 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

தானியேல் 3:16
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.

தானியேல் 3:17
நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;

தானியேல் 3:18
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

நேபிகாத்நேச்சார் தன் தேவர்களுக்கு முகும்குப்புற தாழ விழுந்து, அதற்கு ஆராதனை செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் மூன்று யூதர்களும் வைராக்யமாய் ஒரே குரலாய் கர்த்தரை தவிர வேறு எந்த விக்ரகத்துக்கும் தொழ மாட்டோம் இதை குறித்து உங்களுக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை என்று நிமிர்ந்து துணிவாக நேபுகாத்நேச்சரிடம் சொல்கிறார்கள். அவர்களை அக்கினி சூளையில் போட்டாலும் அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை அவர்கள் விடுதலையோடு நிமிர்ந்து உலாவினார்கள் ஏனென்றால் அவர்களை கர்த்தரும் அவர்களுடன் சேர்ந்து உலாவினார். 

5. அவர் குடும்பங்களுக்கு முன்பதாக நம்மை நிமிரச்செய்வார் 

ஆதியாகமம் 42:4
யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை.

ஆதியாகமம் 42:11
நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.

ஆதியாகமம் 42:34
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.

தரிசனத்தை ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் 

கானானிலே மிகப்பெரிய பஞ்சம் உண்டானதும் யாக்கோபு எகிப்திலே தானியம் உண்டென்பதை அறிந்து தானியம் கொள்ளும் படி தன்னுடைய குமாரர்களை அனுப்புகிறார். ஆனால் பென்யமீனுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று தன்னுடனே வைத்து கொள்கிறார். அங்கு எகிப்திலே யாக்கோபின் குமாரர்கள் பத்து பெரும் நாங்கள் வேவுகாரர்கள் அல்ல. நாங்கள் தானியம் கொள்ள மட்டுமே வந்தோம் என்கிறார்கள். அதற்கு யோசேப்பு உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்து கொண்டு வாருங்கள் அதுவரைக்கும் சிமியோன் இங்கு இருக்கட்டும் அப்பொழுது நீங்கள் வேவுகார்கள் அல்ல என்பதை அறிந்து சிமியோனை நான் விடுதலை செய்கிறேன் என்கிறார். ரூபன் பென்யமீனை கூட்டிக்கொண்டு வருகிறார். யோசேப்பு தன் தரிசனத்தில் கண்டவாறே 11 சகாதாரர்களும் யோசேப்பு முன்பு வணங்கினார்கள் யோசேப்பு அவர்கள் முன்பாக நிமிர்ந்து நின்றார். 

6. அவர் நம்மை நிமிர்ந்து தலையை உயர்த்துவார் 

லூக்கா 21:28
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

மொர்தகாய் உடைய வாழ்க்கையை நாம் பார்க்கும் பொழுது ஆமான் போகும் போதும் வரும் போதும் எல்லாம் சகல ஜனங்களும் தனக்கு முன்பதாக தலை வணங்கினார்கள் ஆனால் யூதனான மொர்தகாய் மாத்திரம் தலை வணங்காமல் தலை நிமிர்ந்து இருந்தார். காலம் செல்ல செல்ல ஒரு தடவையாவது மொர்தகாய் தன்னை வணங்க வேண்டும் என்று பல சூழ்ச்சிகள் செய்தார். அனால் கடைசியில் தேவன் ஆமான் மொர்தகாய்க்காக தயார் செய்யப்பட்ட தூக்கு மரத்தில் ஆமானையே விழச்செய்தார். மொர்தகாய் தலையை தேசத்தில் உயர்த்தினார். 

7. அவர் நம் எலும்புகளை காலூன்றி நிமிர்ந்து நிற்கச்செய்வார் 

அப்போஸ்தலர் 14:10
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

எசேக்கியேல் 37:10
எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

எசேக்கியேல் 37:12
ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.

எசேக்கியேல் 37:13
என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் சொல்கிறார் எனக்கு கர்த்தர் கற்பித்த படி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அப்பொழுது ஆவி உலர்ந்த எலும்புகளுக்குள் பிரவேசித்து உயிரடைந்து காலூன்றி மகா சேனையாய் நின்றார்கள். அதுபோல ஆவிக்குரிய இஸ்ரவேலரான நம்மையும் கர்த்தருடைய ஆவி நம்மை பிரேத குழிகளில் இருந்து வெளிப்பட நம்மை உயிரடைய செய்து காலூன்றி நிற்க வைத்து அவர் நம்மை வருகையில் சேர்த்து கொள்வார் 


FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment