Saturday, August 1, 2020

உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்


கன்மலை கிறிஸ்துவ சபை ஆகஸ்ட் 2020 வாக்குத்தத்தம் 
Word of God : Brother Micheal
Date: 01:08:2020


மத்தேயு 6:8
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

உங்களுக்கு இந்த மாதம் இன்னது தேவை என்பதை அவர் அறிந்து இருக்கிறார். மூன்று விதமான காரியங்களை கர்த்தர் இந்த மாதம் நமக்கு செய்யப்போகிறார். 

1. உனக்கு உதவி செய்கிறார் 
2. உன்னை பிழைக்க செய்கிறார் 
3. உனக்கு தேவையானதை கொடுக்க செய்கிறார் 

1. உனக்கு உதவி செய்கிறார் 

ரோமர் 16:1
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

ரோமர் 16:2
எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

உங்களுக்கு இந்த மாதத்தில் எந்த காரியத்தில் உதவி தேவையோ அதை நம் தேவன் அறிந்து இருக்கிறார். அந்த காரியத்தில் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார். 

I பேதுரு 4:10
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். 

தேவன் உங்களுக்கு கொடுத்த கிருபையுள்ள வரமாகிய ஈவுகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து உக்கிராணக்காரர்போல உதவி செய்ய வேண்டும். 

ஏன் கர்த்தர் உதவி செய்ய வேண்டும் ?

சங்கீதம் 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

இந்த ஆகஸ்ட் மாதம் துன்மார்க்கரின் கைக்கு உன்னை நீங்கலாக்கி ரட்சித்து கர்த்தரே உனக்கு உதவி செய்வார். 

2. உன்னை பிழைக்க செய்கிறார் 

லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

I கொரிந்தியர் 10:1
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

I கொரிந்தியர் 10:2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

I கொரிந்தியர் 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

I கொரிந்தியர் 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

I கொரிந்தியர் 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

I கொரிந்தியர் 10:16
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

I கொரிந்தியர் 10:17
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

மாற்கு 6:51
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

I கொரிந்தியர் 11:23
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

I கொரிந்தியர் 11:24
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

I கொரிந்தியர் 11:25
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

I கொரிந்தியர் 11:26
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம். அவரே ஜீவ அப்பம். இந்த ஜீவ அப்பத்தை புசிக்கிற நாம் என்றென்றைக்கும் பிழைத்து இருப்போம். 

3. உனக்கு தேவையானதை கொடுக்க செய்கிறார் 

லூக்கா 11:5
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,

லூக்கா 11:6
என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

லூக்கா 11:7
வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.

லூக்கா 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 11:9
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:10
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:11
உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?

லூக்கா 11:12
அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?

லூக்கா 11:13
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்

உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்து இருக்கிறார். உங்களுக்கு என்ன தேவையோ நீங்கள் கர்த்தரை நோக்கி அவருடைய நாமத்தினாலே கேட்கும்பொழுது உங்களுக்கு நிச்சயமாய் கொடுக்க அவர் வல்லவராய் இருக்கிறார். 




FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment