Tuesday, May 19, 2020

பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்


Kanmalai Christian Church 
Word of God : Brother Micheal 
Date: 17.5.2020



நீதிமொழிகள் 8:23
பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.


இங்கு சாலமோன் இப்படியாய் சொல்கிறார் பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் மிக இன்றியமையாத ஒன்று.

முன்னுரை: 
நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் இருக்கிற அபிஷேகத்தின் பல்வேறு நிலைகளை மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அடிப்படையாக கொண்டு அவர் தம்முடைய வாழ்க்கையில் ஏழு காலங்களில் பெற்று கொண்ட நிலையான  அபிஷேகத்தினை நாம் இங்கு தியானிப்போம்

1. அவர் தாயின் கருவிலே இருக்கும் பொழுது பெற்று கொண்ட அபிஷேகம் 

மத்தேயு 1:18
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

மத்தேயு 1:19
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

மத்தேயு 1:20
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

லூக்கா 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

2. அவர் பிள்ளையாக இருக்கும் பொழுது பெற்ற அபிஷேகம் 

அப்போஸ்தலர் 4:28
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

லூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

3. அவர் வாலிபத்தில் ஞானஸ்தானத்திற்கு தன்னை ஒப்பு கொடுக்கும் பொழுது பெற்ற அபிஷேகம் 

லூக்கா 3:22
பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 3:16
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

4. பிதாவாகிய தேவன் அவரை ஊழியத்திற்கு ஏற்படுத்தின அபிஷேகம் 

ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

ஏசாயா 61:2
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,

ஏசாயா 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

5. அவர் நனமை செய்கிறவராக ஏற்படுத்தின அபிஷேகம் 

அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

6. அவரை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்த அபிஷேகம் 

ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

7. பிதாவாகிய தேவன் அவரை சீயோனிலே அபிஷேகம் பண்ணினார் 

சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

முடிவுரை 
ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் மரித்த பின்பு பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் சார்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படுகின்ற நிலையான அபிஷேகம். இங்கே நாம் மேலே தியானித்த படி கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கையில் அவர் தம்முடைய ஏழு காலகட்டங்களில் அவர் பெற்று கொண்ட அபிஷேகங்களை நாம் பார்க்கிற பொழுது நீங்களும் நானும் அப்படியான அனுபவத்தை கடந்து வந்தோமா இல்லையா என்று சிந்தித்து பாப்போம், நாமும் இயேசு கிறிஸ்துவை போல இந்த நிலையான அபிஷேகத்தினை நம்மை விட்டு எடுபடாமல் காத்து கொள்வோம். 


FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment