Kanmalai Christian Church
Sunday Service 21st June 2026
Word of God : Bro. Kamal
ஏசாயா 33:9
தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
ஏசாயா 33:10
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உங்கள் வாழ்க்கை துக்கம் நிறைந்து விடாய்த்து இருக்கிறதா, வெட்கப்பட்டு வாடி இருக்கிறீர்களா, சூழ்நிலைகள் வனாந்திரத்திற்கு ஒப்பாய் இருக்கிறதா, முந்தின மகிமைதனை இழந்து தேவனை விட்டு விலகி வெகு தூரம் சென்று வாழக்கை பாழாய் போய்க்கொண்டு இருக்கிறதா இவை எல்லாம் நிரந்தரம் அல்ல கர்த்தர் உங்களுக்காக இன்றைக்கு எழுந்தருளுவார், அதன் மூலம் அவர் மேன்மைப்படுவார். இன்றைக்கும் கூட தேவன் நமக்கு எப்படியெல்லாம் எழுந்தருளுவார் என்பதை ஒரு இந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம்.
1. கூக்குரலுக்கு பதிலளிக்கும் படியாக எழுந்தருளுவார்
சங்கீதம் 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தமது ஜனத்தின் கண்ணீரை காண்கிறார். அவர் நம் ஜெபங்களை கேட்கிறார். தாமதம் இருக்கலாம் ஆனால் அது தேவனுடைய நேரத்திற்கான காத்திருப்பு. நம் ஜெபம் ஒருபொழுதும் வீணாகாது, தேவன் சரியான நேரத்தில் உங்களுக்கு பதிலளிக்கும்படியாய் எழுந்தருளுவார்.
2. சத்துருக்கள் சிதறுண்டு போகும் படியாக எழுந்தருளுவார்
சங்கீதம் 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
சாத்தானின் திட்டங்கள் முறியடிக்கப்படும், தடைகள் எல்லாம் வழிகளாக மாறும். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் அது வாய்க்காதே போகும்.
3. ஒத்தாசை செய்யும்படிக்கு எழுந்தருளுவார்
சங்கீதம் 44:26
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
II நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
4. இரட்சித்து விடுதலை அளிக்கும்படியாக எழுந்தருளுவார்
யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
இஸ்ரவேல் மக்கள் முன் செங்கடல், பின்பாக பார்வோனின் படை. தேவன் செயல்பட்டபொழுது கடல் இரண்டாக பிளந்தது. எல்லாம் முடிந்தது போல தோன்றும் சூழ்நிலைகளில் தேவன் புதிய வழியை திறக்கிறார்.
5. மரித்த நம்பிக்கை உயிர்பிக்கும்படியாய் எழுந்தருளுவார்
யோவான் 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
யோவான் 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
மரித்த லாசருவை உயிருடன் எழுப்பியது தாமதமாக தோன்றினாலும் தேவனுடைய மகைமையை வெளிப்படுத்தியது. தேவன் அமைதியாக இருக்கலாம் ஆனால் செயலற்றவராக அல்ல. தேவன் தாமதிக்கலாம் ஆனால் ஒருபொழுதும் தவறுவது இல்லை. அவர் எழுந்தருளும் பொழுது அதை யாராலும் தடுக்க முடியாது.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:
Post a Comment