Tuesday, June 16, 2026

தன் நேசர்மேல் சார்ந்து

 


Kanmalai Christian Church
Sunday Service 14th June 2026
Word of God : Sis. Lydia

உன்னதப்பாட்டு 8:5
தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.

நாம் எப்படிப்பட்ட வனாந்திரத்தின் பாதையில் சென்று கொண்டு இருந்தாலும் நாம் கர்த்தரையே சார்ந்து இருக்கிற ஜீவியம் நமக்கு இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம் நேசரை சார்ந்து நாம் இருக்கும் பொழுது தேவன் நம்மை ஒருபொழுதும் கைவிடவே மாட்டார். 

நீதிமொழிகள் 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

நீதிமொழிகள் 3:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

சுயபுத்தியின்மேல் சாயாதே: உங்கள் சொந்த அறிவை மட்டுமே நம்பி முடிவு எடுக்காதீர்கள்.

கர்த்தரில் நம்பிக்கையாயிரு: கர்த்தர்  மீது முழுமையாக அன்பு செலுத்தி, அவர் வழிகாட்டுவார் நம்பிக்கையாய் இருங்கள் 

அவரை நினைத்துக்கொள்: உங்கள் எல்லா செயல்களிலும் கர்த்தரை  முன்னிறுத்துங்கள்.

பாதை செவ்வையாகும்: நீங்கள் தடுமாறாமல் இருக்க, அவரே சரியான வழியை உங்களுக்குக் காட்டுவார்.

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகு” என்றும் நீதிமொழிகளில் நாம் காண்கிறோம். நமக்குள்ள ஞானம் தேவனே தந்தார் என்பதை உணர்ந்து, அவர் தந்த ஞானத்தை அவரோடுள்ள உறவின் மூலமாக இன்னும் செம்மையாக உபயோகிக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் நமது வாழ்வுக்கு வைத்திருக்கும் நோக்கத்தை அறிந்து கொண்டு, அவருடைய சித்தம்போல் நாம் வாழ அந்த ஞானம் நமக்கு உதவுகிறது. இதைத்தான், நமது சுயபுத்தியின்மேல் சாயாமல், தேவன்மீது நம்பிக்கை கொண்டு, அவரில் சாய்ந்து வாழும் வாழ்வு என்பதாக சாலோமோன் சுட்டிக் காட்டுகிறார். சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்த தேவன்தாமே நமக்கும் ஞானத்தைத் தந்துள்ளார் எனவே தேவனோடுள்ள உறவைச் சரியானபடி காத்துக்கொண்டால் அவர் சித்தம்போல் தீர்மானிக்க அவரே நம்மை வழிநடத்துவார்.







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment