Monday, April 29, 2024

அவர்கள் கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்

 

கன்மலை கிறிஸ்தவ சபை 17 ஆம் ஆண்டு விழா 

Word of God : Pastor Johnson Israel

Date : 29.04.2024

யோபு 30:6
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

பள்ளத்தாக்குகள் இல்லாமல் நாம் கன்மலைக்கு போக முடியாது. பள்ளத்தாக்கு என்பது துன்பத்தையும், உபத்திரவத்தின் பாதைகளையும், சிறுமைகளையும், கண்ணீரின் பாதைகளையும் காட்டுகிறது. நம்முடைய வாழ்க்கையிலும் பள்ளத்தாக்கின் பாதையில் கடந்து போகிறது போல இருக்கலாம் ஆனால் ஏற்ற வேலை வரும் பொழுது தேவன் உங்கள் தலையை உயர்த்தி கன்மலைகளில் குடிபெயரச்செய்வார்.

எரேமியா 2:5
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,

பள்ளத்தாக்கில் தான் தேவன் நம்மோடு கூட இடைப்படுவார். இப்படிப்பட்ட பள்ளத்தாக்குகளை கடந்த பிறகு தான் நாம் கன்மலையில் குடிபெயர முடியும். கன்மலை என்பது ஒரு செழிப்பு, அது ஒரு ஆசீர்வாதமான இடம், கன்மலை என்பது பாதுகாப்பு, அது கண்ணீரை துடைக்கும், கன்மலையிலே நாம் குடியிருக்க வேண்டும் என்றால் நாம் பள்ளத்தாக்கின் வழியாய் தான் கடந்து போக வேண்டும். 

யோபு 30:5
அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

எசேக்கியேல் 3:22
அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.

எசேக்கியேல் 3:23
அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

யோசுவா 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

பள்ளத்தாக்கின் பாதையை பார்த்து பயந்து விடாதீர்கள், சோர்ந்து போய் விடாதீர்கள், அதற்கு மாறாக நீங்கள் திடமானதாய் இருக்க வேண்டும். உங்களுடைய இந்த உபத்திரவத்தின் பாதையில் தேவன் உங்களை ஒருபொழுதும் கைவிடுவதே இல்லை நீங்கள் போகும் இடமெல்லாம் தேவனாகிய கர்த்தர் உங்களுடனே இருக்கிறார். 

சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

யாத்திராகமம் 33:21
பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.

யாத்திராகமம் 33:22
என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.

ஏசாயா 40:4
பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.

ஏசாயா 40:5
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

லூக்கா 1:48
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

லூக்கா 1:49
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

உங்கள் தாழ்மையை கர்த்தர் நிச்சயம் நோக்கி பார்ப்பார், நம்முடைய சிறுமையை கண்ணோக்கி பார்ப்பார். ஏற்ற வேளையில் அவர் நம்மை உயர்த்தி மகிமையான காரியங்களை நமக்கு செய்வார். கர்த்தருடைய மகிமை உங்கள் மூலமாக வெளியரங்கமாகும்.

மத்தேயு 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

மத்தேயு 7:25
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment